கோவை முனிசிபல் நிர்வாகம்

 

கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் 1929 – 30ம் வருஷத்திய நிர்வாக ரிப்போர்ட் வரப்பெற்று அதை முற்றிலும் படித்துப் பார்த்தோம். சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் கல்வி, பொருளாதாரம், பொதுஜன சுகாதாரம் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கடைந்திருக்கிறது. வரி வருமானம் ரூ. 2, 74, 707-லிருந்து ரூ. 2, 96, 171க்கு உயர்ந்திருக்கிறது. பொது நிதி இருப்பிலிருந்து சிருவாணி தண்ணீர் சப்ளை வேலைத் திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ. 1,51,500ம் போக வருஷ முடிவில் ரூ 1. 64 லட்சம் இருப்ப தாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இம்முனிசிபாலிட்டியைப் பற்றி சர்க்கார் எழுதிய குறிப்பில் வெகுவாகப் புகழ்ந்து கோவை முனிசிபாலிட்டியின் நிர்வாகம் இம்மாகாண மற்றெல்லா முனிசிபல் நிர்வாகங்களை விட தலை சிறந்து விளங்குவதாய் குறிப்பிட்டு விட்டு அதன் தலைவர் திரு. இரத்தின சபாபதி முதலியாரவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டி எழுதப் பட்டிருக்கிறது.

தக்க பலனளிக்கும் முறையில் பொது ஜனசேவை செய்து வரும் கோவை முனிசிபல் தலைவரவர்களையும் அவரது சகாக்களின் கூட்டுறவை யும் நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 07.09.1930

 

You may also like...

Leave a Reply