அருஞ்சொல் பொருள்

அப்யசிக்கின்றவர்கள் – பயிலுகின்றவர்கள்
அம்மன்காசு – ரூபாயில் 320 இல் ஒரு பங்கு மதிப்புள்ள காசு ( 1 ரூபாய் = 16 அணா ; 1 அணா = 20 அம்மன் காசு )
அந்நியோன்யம் – ஒற்றுமை, ஒன்றிப்பு
அனாதரக்ஷகன் – ஆதரவற்றோரைப் பாதுகாப்பவன்
ஆபத்பாந்தவன் – இடரில் உதவுவோன்
ஆப்த – நம்பகமான
ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு
இகத்தை ( இகம் ) – இவ்வுலகம் ( பரம் – மறு உலகம் )
இரசவாதம் – இரும்பு போன்றவற்றை தங்கமாக மாற்றுதல்
உபதானம் – அரிசி பிச்சை
உபத்ரவித்தல் – தொல்லை படுத்தல்
உயிர்பித்துக்கொண்டு – உயர்த்திக்கொண்டு
கடாக்ஷித்து – அருள் பாலித்து
கண்டனை – கண்டித்தல், எச்சரித்தல்
கனதனவான்கள் – செல்வந்தர்கள்
கன்மனம் – கல் மனம்
சிலாக்கியம் – மெச்சத் தகுந்தது
சுதாவாய் – தானாக, தன்விருப்பமாக
சுவதந்திரியம் – சுதந்திரம்
செரமாக்கள் – செரமர் எனப்படும் மலையாள நாட்டு தீண்டாத வகுப்பினர்
சைத்தன்னியம் – பேரழிவு
தத்துக்கள் – தடைகள், ஆபத்துகள்
தவக்கப்பட்டிருப்பதால் – தாமதமாகி இருப்பதால்
நாணய பரிவர்த்தனம் – நாணய மாற்று விகிதம்
நிரியாண காலம் – இறப்பு காலம்
நிர்த்தாரணம் – நிலையிடுகை
பந்துத்துவம் – உறவு
பராதீனப்பட்டதற்கு – தன் சொத்தை பிறர் வயப்பட விடுதல்
பாரபட்சம் – ஒருதலை சார்பு
பாஷ்யம் – விரிவுரை
பிரவாகம் – பெருவெள்ளம்
பிரயாசை – பெரு முயற்சி, வருந்தி உழைத்தல்
புகிது புகிதாக – புதிது புதிதாக
புத்திராபிவிர்த்தி – பிள்ளை பெறுதல்
முச்சலிகை – பிணை ஆவணம், உடன்படிக்கை
ரிஷிபாரூடராய் – காளை வாகனராய், காளை மீதேறி
வம்ச பாரம்பரியமாக – வழிவழியாக, பரம்பரை பரம்பரையாக
விதாயம் – ஏற்பாடு, வழிவகை
வியக்தமாக – வெளிப்படையாக
வியாக்யானம் – விளக்கவுரை
ஜீவனோபாயம் – வாழ வழி தேடல்
ஸ்மரித்தல் – நினைத்தல்
ஸ்லேத்துமம் – சளி மிகல், கோழை அதிகமாக கட்டி இருத்தல்

You may also like...

Leave a Reply