வினாக்கள்… விடைகள்…!

இந்து பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும் என்று பேசிய பா.ஜ.க. எம்.பி. சக்ஷிக்கு – அமீத்ஷா விளக்கம் கேட்டு, நடவடிக்கை. – செய்தி
அப்படி பேசியது சரி தான்னு இங்கே தொலைக்காட்சி விவாதங்களிலே உட்கார்ந்து அடம் பிடித்த பேர்வழிகளுக்கும் நோட்டீசு அனுப்புங்கய்யா… இந்த கொசுத் தொல்லையை தாங்க முடியல்லே, நாராயணா!

நித்யானந்தா ‘ஆண்மை’ உள்ளவர். – இரகசிய போலீஸ் அறிக்கை
அது முக்கியமில்லீங்க. அவரு ‘ஆன்மிக’வாதியான்னு கண்டுபிடிக்க, ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க.

மாநில தகவல் ஆணையர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு முன் நாற்காலியில் அமர்ந்ததற்காக தகவல் பெற வந்த சிவ. இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டார். – செய்தி
புரியுது! ‘பிராமணர்’ முன் கைகட்டி நிற்க வேண்டிய ‘சூத்திரன்’ – சமமாக உட்காரக் கூடாது என்ற மிக முக்கியமான தகவலை, தகவல் அதிகாரி ஸ்ரீபதி – உலகத்துக்கு இதன் மூலம் அறியத் தந்திருக்கிறார்!

‘இந்து மகாசபை’ எதிர்த்துப் போராடிய ‘பி.கே.’ படம் வசூலில் ரூ.600 கோடி சாதனை. – செய்தி
‘மகா சபை’க்கு ‘மகா ஜனங்கள்’ சொந்தக் காசை செலவு செய்து புத்தி புகட்டியிருக்கிறார்கள் போல!

மதுராவில் அதிகரித்து வரும் குரங்குகள் தொல்லை – கட்டுப்படுத்த பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி முயற்சி. – செய்தி
‘இராமன் சீடர்களை’ இப்படி அவமதிப்பது அந்த ‘இராமனுக்கே’ அடுக்காது; ‘இராமகோபாலன்’ என்ன செய்யப் போறார்?

பெரியார் முழக்கம் 22012015 இதழ்

You may also like...

Leave a Reply