கூடங்குளத்தில் “அணு உலைப் பூங்கா” அமைக்காதே! சென்னையில் நடந்த முழு நாள் கருத்தரங்கு
இந்திய அரசே! கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப் பந்தத்தை ரத்து செய், கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய், தமிழகத்தை அணுக்கழிவுக் கூடமாக்காதே ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 14-03-2015 சனிக்கிழமை அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடந்த முழு நாள் கருத்தரங்கத்தின் செய்திச் சுருக்கம்.
காலை அமர்வு சுமார் 11 மணி அளவில் தொடங்கியது. அமர்வுக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகத் தோழர் கண. குறிஞ்சி தலைமை தாங்கினார். இவ்வரங்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீஃப், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் அண்ணாமலை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சிற்பி செல்வராஜ், ஆதித் தமிழர் பேரவை ஆனந்தன், தமிழ்த் தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிழ்நேயன், இளந் தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் செந்தில், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தமிழ்வாணன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மேகலா ஆகியோர் உரையாற்றினர். மேலும், மாலை அமர்வில் பேச இருந்த மார்க்சி°ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தரராஜன் காலை அமர்வில் பேசினார். சரியாக 1.30 மணி அளவில் முதல் அமர்வு முடிந்தது.
மதிய உணவுக்குப் பின் பிற்பகல் அமர்வு 2.15 மணி அளவில் தொடங்கி யது. இவ்வமர்வுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன் தலைமை தாங் கினார். இவ்வமர்வில் தாளாண்மை உழவர் இயக்க அமைப்பாளர் திரு நாவுக்கரசு, தமிழ்ப் புலிகள் இயக்கத் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் வே. பாரதி, 21 ஆம் நூற்றாண்டின் மக்கள் இணையம் அமைப்பு தலைவர் ஆழி செந்தில் நாதன், தலித் மக்கள் கட்சித் தலைவர் செங்கோட்டையன், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தோழர் முகிலன், ஓசை அமைப்பு தலைவர் காளிதாசன், தமிழர் முன்னணி தலைவர் ஜெயப்பிரகாஷ், புரட்சிகர மக்கள் பாசறை தலைவர் காலன்துரை, தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பொடாரன், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே. பொன்னையன், பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன், மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி இரா. பச்சைமலை ஆகியோர் உரை யாற்றினர். மாலை 5.30 மணி அளவில் இவ்வமர்வு நிறைவடைந்தது.
அதை தொடர்ந்து மாலை அமர்வு தொடங்கியது. இவ்வமர்வுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இவ்வமர்வில் இந்திய கம்யூனி°ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், எ°.டி.பி.ஐ. தலைவர் தெகலான் பாகவி, தமிழ்நாடு மு°லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் மீ.த. பாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கொற்றவ மூர்த்தி, சி.பி.ஐ. (எம்-எல்), விடுதலை மாநிலக் கமிட்டி உறுப்பினர் ஜவஹர், அணு சக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
கருத்தரங்கத்தின் முடிவில் அதில் பங்குபெற்ற அனைத்து கட்சிகள், அமைப்புகளின் சார்பாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. இந்தியாவின் வளர்ச்சிக்காக, தூய்மை யான ஆற்றல் (ஊடநயn நநேசபல) என்று இந்திய அரசும், சிவில் தேவை களுக்கான அணுசக்தி புரிந்துணர்வு என்று அமெரிக்க அரசும் சொல்லிக் கொண்டு இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போட்டப் பட்டது. ‘உலகத்தரம் வாய்ந்த பாது காப்பான தொழில்நுட்பம்’ என்று வாதிடும் அரசுகள் அணு விபத்து இழப்பீட்டுக்குப் பொறுப்பேற்க இன்றும் மறுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய அரசு இயற்றி யுள்ள அணு விபத்து இழப்பீட்டுச் சட்டமோ சுமார் 1500 கோடி ரூபாய்க்கு மட்டுமே அணு உலைக்குப் பாகங்கள் வழங்கிய நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் சொல்கின்றது. உண்மையில் இவ்வொப்பந்தம் என்பது ழு.நு. றுநளவேiபாடிரளந போன்ற பன்னாட்டு பெருநிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்களின் பாதுகாப்பை அணு ஆபத்துக்கு அடகு வைக்கும் ஒப்பந்தமே. எனவே, அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு இக்கருத்தரங்கத் தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
2. கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கு எதிரான வலுவான மக்கள் போராட்டம் நடந்திருக்கும் நிலையில் 3,4 அணு உலைகளை 40,000 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்காக இரசியா வுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது இந்திய அரசு. 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலைகளை நிறுவி அணு உலைப் பூங்கா அமைக்க நினைக்கிறது இந்திய அரசு. அணு உலைப் பூங்காக்களில் போர், பயங்கரவாதிகளின் தாக்குதல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் ஆகிய வற்றால் பேராபத்து நிகழும் என்பதற்கான அண்மைகால சாட்சியாக புகுசிமா அணு உலை விபத்து அமைந்துள்ளது. எனவே, கூடங்குளத்தில் 3,4 அணு உலைகள் அமைப்பதற்காக இரசியாவுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் இக் கருத்தரங்கின் வாயிலாக இந்திய அரசைக் கோருகிறோம்.
3. அணு உலை செயல்பட்டால் உண் டாகும் அணுக் கழிவு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆபத்தான கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இத்தகைய அணுக் கழிவை எங்கே, எவ்வாறு பாதுகாக்கப் போகிறது? என்ற உண்மையை இதுவரை வெளிப் படுத்தாமல் முடி மறைத்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. தமிழகத்தில் அணு உலைப் பூங்காவை அமைப்பது, அணுக்கழிவுகளை எங்கே வைக்கப் போகிறோம்? என்று இதுவரை சரியாக விளக்காதது. இவற்றைக் கொண்டு பார்க்கும் போது இந்திய அரசு நமது தமிழகத்தை அணுக் கழிவு கூடமாக்க முயற்சிப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இம்முயற்சியை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று இக் கருத்தரங்கத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே என்ற கோரிக்கையைத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் ஆதரிக்கின்றன. இதை இந்திய அரசு புறந்தள்ளிவிடக் கூடாது என்று எச்சரிக்கும் வண்ணத்தில் இக்கருத்தரங்கம் நடந்து முடிந்தது.
பெரியார் முழக்கம் 19032015 இதழ்