பம்பாய் அய்.அய்.டி.யில் கடவுள் நம்பிக்கையற்றோர் 52 சதவீதம்

பம்பாய் அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார்கள். 22 சதவீதம் முழுமையாக நாத்திகர்கள் என்றும்,
30 சதவீதம் பேர் கடவுள் பற்றி கவலைப்படாதவர்கள் என்றும் கூறியுள்ளனர். அய்.அய்.டி. நிறுவனத்துக்காக நடத்தப்படும் பத்திரிகைக்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பி.டெக். படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் படிக்கும் பொறியியல் படிப்பு, அறிவியல் சார்ந்தது. அறிவியலை நம்பும் என்னைப்போன்ற பல மாணவர்கள், கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்கவியலாது” என்றார். 2014ஆம் ஆண்டில் அய்.அய்.டி.யில் சேர்ந்த 260 மாணவர்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. (தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ஏப்.20 2015)

பெரியார் முழக்கம் 30042015 இதழ்

You may also like...

Leave a Reply