மதமாற்றம்: அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி

சாதி வேறுபாடு, குறிப்பாகத் தீண்டாமையை ஏற்றுக் கொள்ளாத புத்தமதத்திற்கு மாறுவதென்று அம்பேத்கர் முடிவு செய்தார். 1956 அக்டோபர் 14, 15 ஆகிய நாள்களில் நாகபுரியில் புத்தமதத்தை அம்பேத்கர் தழுவினார். அவருடன் ஆயிரக்கணக்கான மகர்களும் வேறு சமூகங்களைச் சேர்ந்த தோழரும் இணைந்தனர்.
மக்கள், புத்தமத முறைப்படி தீட்சை ஏற்றனர். 83 வயது நிரம்பியவரும், பர்மா (மியான்மர்) நாட்டினருமான புத்த பிக்கு, அவருக்கு தீட்சை வழங்கினார். இவர்கள் தழுவிய புத்தமதம் தேரவாத பௌத்தமாகும். திரி சரணம் (புத்தம் சரணம், தர்மம் சரணம், சங்கம் சரணம்) கோட்பாடுகளுடன், 22 உறுதி மொழிகளையும் கூறி மதம் மாறினார்கள். மராத்தி மொழியில் எடுக்கப்பட்ட அவ்வுறுதிமொழிகளில் சில வருமாறு:
1. பிரம்மா, விஷ்ணு, மகேஷ் ஆகியோரை நான் கடவுளாகக் கருதவும் மாட்டேன், வணங்கவும் மாட்டேன்.
2. இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாகக் கருதி வணங்க மாட்டேன்.
3. கௌரி, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களை வணங்க மாட்டேன்.
4. கடவுள் பிறப்பதாகவோ, எந்த வடிவிலும் அவதரிப்பதாகவோ நான் நம்ப மாட்டேன்.
5. விஷ்ணுவின் அவதாரமே புத்தர் என்பதை நம்ப மாட்டேன். இப் பரப்புரையாவது தவறானதும், குறும்புத்தனமானதும் ஆகும்.
6. சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் படைப்பது போன்றவற்றை ஒருபோதும் செய்ய மாட்டேன்.
7. புத்தமதக் கோட்பாடுகளுக்கு எதிரானவை எதையும் செய்ய மாட்டேன்.
8. ‘பிராமணர்கள்’ மேற்கொள்ளும் ‘சம°காரா’ (பரிகாரம்) சடங்குகளைப் பெற்றுக் கொள்ள மாட்டேன்.
9. அனைவரும் சமம் என்பதை நம்புகிறேன்.
10. சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்வேன்.
11. மனித உரிமைகளை நசுக்குவதில் உறுதியாய் இருக்கும், சமத்துவத்தை விரும்பாத பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை கீழான பிறவிகள் என்று கூறும் இந்து மதத்தைத் தூக்கி எறிகிறேன்.
12. புத்த தர்மமே சிறந்த மதம் என்பது என் உறுதியான கருத்து.
13. இன்று நான் ஒரு புதிய பிறவி எடுத்ததாக நம்புகிறேன்.
14. இன்று முதல் புத்த தர்மத்தின்படியே நடப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்.
இப்படி உறுதியேற்று இந்த மதத்தையும் அதன் கடவுள்களையும் பார்ப்பனர்களையும் எதிர்த்த அம்பேத்கரைத்தான் சங்பரிவாரங்கள் தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளன.

பெரியார் முழக்கம் 18062015 இதழ்

You may also like...

Leave a Reply