ஒரு களப்போராளியின் நினைவுகளும் நிகழ்வுகளும்
நாகை வட்டத்தில் களப் போராளியாக செயல்பட்ட தோழர் ஏ.ஜி. க°தூரிரெங்கனின் (ஏ.ஜி.கே.) ‘நினைவுகளும் நிகழ்வு களும்’ நூலை, கும்பகோணம் சாக்கோட்டையிலிருந்து ‘ரிவோல்ட்’ பதிப்பகம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. ஏ.ஜி.கே. அவர்களுடன் நேரில் உரையாடி பதிவு செய்து மிகச் சிறப்பான தொகுப்பாக்கியிருக்கிறார் தோழர் பசு. கவுதமன். வெளியிட்டிருப்பவர் தோழர் இளங்கோவன்.
“வர்ண வேறுபாடுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் வெட்டிப் புதைத்த இரத்தக் கறை படிந்த கொடுவாளாய் – தூக்குக் கயிற்றைத் தொட்டு நின்ற சிறைப் பறவையாய் – சுயமரியாதையே சுதந்திரம் என்ற சுயத்தோடு அமைப்பாய் – இயக்கமாய் வாழ்ந்து கொண்டுள்ள ஒரு கருப்பு மனிதனின் சிகப்புப் பதிவு இது” – என்று தொகுப்பாசிரியர் முன்னுரையில் சுட்டியிருப்பது மிகைக் கூற்று அல்ல; உண்மைகளே என்பதை, நூலைப் படிக்கும்போது நிச்சயமாக உணர முடியும். நாகை, திருவாரூர், கீழ்வேளூர், திருக்குவளைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதி நாகை வட்டம். இந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகளை ஒருங்கிணைத்து, நடத்தப்பட்ட ஜாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டக்களம் வீறு கொண் டிருந்த காலம் 1962 முதல் 1975 வரை யாகும். களப் போராளியாக பெரியார் இயக்கத்தின் போராட்டத் தளபதியாக நின்றவர் ஏ.ஜி.கே. விவசாயிகளைத் திரட்டி, பார்ப்பன பண்ணையார் கொடுமைகளுக்கு எதிராக விவசாயத் தோழர்களின் சுயமரியாதைக்கு நடத்தியப் போராட்டங்களின் பதிவுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அந்தணப்பேட்டை என்ற ஊரில், நீதிக்கட்சிக்காரரின் மகனாகப் பிறந்த ஏ.ஜி. க°தூரி ரெங்கன், ‘குடிஅரசு’, ‘விடுதலை’ப் பத்திரிகைகளை படிக்கும் குடும்பச் சூழலில் வளர்ந்தவர். பெரியார் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்த 1957ஆம் ஆண்டிலிருந்து, இவரின் தீவிரமான பெரியார் இயக்கப் பணிகள் தொடங்குகின்றன. 1962ஆம் ஆண்டு இறுதியில் பெரியார், காங்கிரசை ஆதரிப்பதாக எடுத்த நிலைப்பாடு, களப்பணிகளில் முரண்பாடுகளை உருவாக்கியதால் ஏ.ஜி.கே. திராவிடர் கழகத்திலிருந்து விலகுகிறார். இவரது தலைமையில் அமைப்பாக்கப்பட்டிருந்த 15,000 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள், 5,000 பிற்படுத்தப்பட்ட தொழி லாளர்கள் காங்கிரசில் பெரும் பண்ணையாளர்களாக இருந்தவர் களை எதிர்த்துப் போராடியதால், இந்த முரண்பாடு எழுந்தது. அதே போல், கம்யூனி°ட் விவசாய தொழி லாளர்களை காங்கிர° தன் பக்கம் இழுக்க முயற்சித்த நிலையில், காங்கிர° கம்யூனி°ட் சங்கங்களின் களச் சண்டைகள் நடந்தன. அந்த நிலையில், காங்கிர° பண்ணை யாளர்களை எதிர்த்து வந்த ஏ.ஜி.கே. தலைமையிலான திராவிட விவசாய தொழிற் சங்கம் கம்யூனி°ட் தொழிற் சங்கங்களுக்கு ஆதரவு தரும் நிலை உருவாகிறது.
கம்யூனி°ட் விவசாய சங்கத்தில் பெரியாரியல் பார்வையில் அவர் முன்னெடுத்த போராட்டங்களால் அந்தக் கட்சியின் விவசாய சங்கத்தி லும் அவரால் தொடர முடியவில்லை. பெண்களை திரட்டி, பண்ணையார் களுக்கு எதிராக மலத்தை வீசச் செய்தல்; ஒப்பாரி வைத்தல் போன்ற போராட்ட வடிவங்களை உருவாக்கி, அதில் பெண்களை ஈடுபடுத்துவதில் பெரும் வெற்றி கண்ட செய்திகளும், பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கத்தின் கொடுமைகளையும் விரிவாகவும் துல்லியமாகவும் ஏ.ஜி.கே. வாய் மொழியாக பதிவு செய்கிறது இந்த ஆவணம்.
கீழவெண்மணி படுகொலையின் பின்னணியை ஏ.ஜி.கே. விளக்குகிறார். அது கூலி உயர்வுக்காக நடந்த படுகொலை அல்ல; இத்தனைக்கும் கீழவெண்மணி பகுதியில் மற்ற பகுதிகளைவிட கூலி அதிகம். ஆனால், விவசாயத் தொழிலாளர் அமைப்பு நடத்திய போராட்டங்கள், பண்ணையார்களின் ஆதிக்கம் சரியத் தொடங்கின. விவசாய சங்கத்தி லிருந்து விலகி, தான் தொடங்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேருமாறு இரிஞ்சியூர் கோபால கிருஷ்ண நாயுடு வற்புறுத்துகிறார். தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் சங்க நடவடிக்கைகளை தடுக்கிறார்; மிரட்டுகிறார். கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு எதிரான போராட் டத்தில் பெரியார் இயக்கத்தின் தொண்டர் களும் முன்னணியில் இருந்தார்கள் என்பதையும் கோபால கிருஷ்ண நாயுடு விடுதலையாகி வந்த பிறகு பெரியாரை சந்திக்க முயற்சித்த போது, பெரியார் சந்திக்க மறுத்ததையும், ஏ.ஜி.கே. பதிவு செய்கிறார். செய்யாத கொலைக்காக குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த தோழர் ஏ.ஜி.கே. மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு பெரியாரி°ட் டின் கள அனுவங்களைப் பதிவு செய்யும் மிகச் சிறந்த ஆவணம் இது.
– ‘இரா’
பெரியார் முழக்கம் 25062015 இதழ்