வினா – விடை
- அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு. – செய்தி
அதெல்லாம் கலவரம் செய்கிறவர்களை ஜெயக்குமாரே பாத்துக்குவார்; சட்டையைக் கழற்றி பின்னால் கைகளைக் கட்டி மண்டபத்தை விட்டே வெளியே தளளிடுவாரு.
- சாமி சிலைகளை மியூசியங்களில் வைக்கக் கூடாது.
– முன்னாள் அய்.ஜி. மாணிக்கவேல்
‘சாமி’களே வெளிநாட்டு மியூசியங்களுக்கு பயணமாகும்போது, நாம் என்ன சார், செய்ய முடியும்? சொல்லுங்க…
- கிராமங்களில்தான் நமது பண்பாடே உயிருடன் இருக்கிறது.
– ஆளுநர் ரவி
அதற்கு ஆளுநர் மாளிகையில் நமது அரசியல் பண்பாடு குழி தோண்டி புதைக்கப்படுவதையும் சேர்த்துச் சொல்லுங்க.
- ‘பிராமணர்’களை இழிவுபடுத்துவது தொடர்ந்தால், போராடத் தயங்க மாட்டோம்.
– பிராமணர் சங்கத் தலைவர் ஆடிட்டர் கணேசன்
ஆமாம்; நீங்கள் தானே போராட வேண்டும். கடவுளா, உங்களுக்காகப் போராடுவார்? அவர் ‘கல்லாக’த்தான் இருப்பார்.
- 4 ஆண்டுகளுக்குப் பின் ‘அக்னி வீரர்கள்’ முடிவெட்டலாம்; வாட்ச்மேன் ஆகலாம். – ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி
இதுக்கெல்லாம் கூட இராணுவப் பயிற்சி தேவையா ஜி!
பெரியார் முழக்கம் 23062022 இதழ்