அருஞ்சொல் பொருள்
அசார்சமாக – அசட்டையாக, அக்கறையில்லாமல், ஈடுபாடின்றி
அபஜயமடைய – தோல்வியடைய
ஆத்ம ஸ்துதி – தற்புகழ்ச்சி
உபத்ரவித்து – தொல்லை கொடுத்து
கர்ண பரம்பரை – செவி வழி ( செய்தி )
கால பரியந்தம் – காலம் வரை
குசினிக்காரன் – சமையல்காரன்
குதிரை தேய்தல் – குதிரை உடலைத் தேய்த்து அழுக்கு அகற்றி பளபளப்பாக்குதல்
சமராதனை – பார்ப்பனர்க்கு விருந்திடல், பிராமண போஜனம்
சலீஸாக – மலிவாக
சாச்வத – நிரந்தரமான, நித்தியம், திடம், மோட்சம்
சைன்யம் – படை
தற்பித்து – பயிற்சி
தாத்பிரியமான – விளக்கம், நோக்கம், பாராட்டு
திரவிய சகாயம் – பொருள் உதவி
திரவிய அபேiக்ஷ – பண ஆசை , பொருள் ஆசை
திரிகரண சுத்தியாக – மனம், மொழி, மெய் ( மனோ வாக்கு காயம்)
ஆகிய மூன்று பொறிகளுக்கு உண்மை
யாக, தூய்மையாக
திருஷ்டாந்தம் – எடுத்துக்காட்டு
தூஷணை – பழிப்பு, இகழ்ச்சியுறுத்தல்
நிஷ்டூரம் – கொடுமை, வெறுப்பு
பட்சபாதம் – ஒரு சார்பு, ஓர வஞ்சனை
பரநிந்தை – பிறரை இகழ்தல்
பிரதிக்கினை – சூளுரை, உறுதிமொழி
பிரத்தியக்ஷத்தில் – நடைமுறையில், வெளிப்படையாக
பிரத்தியக்ஷ பிரமாணம் – நேரடி சான்று, வெளிப்படையான சான்று
பிரஸ்தாபம் – அறிவித்தல், விளம்பரப்படுத்தல்
பூசுரர் – பூமியில் வாழும் தெய்வம் ( பார்ப்பனர் )
பூளவாக்கு – யோக்கியதை, தரம், நேர்மை
ரசாபாசம் – சீர்கேடு, சுவைக்கேடு
வஜா – தள்ளுபடி ( வரிதள்ளுபடி )
வித்தியா இலாக்கா – கல்வித்துறை
விக்கினம் – இடையூறு, தீது
வித்தியாப் பியாசவரி – பள்ளியில் சேர்க்கும் போது பார்ப்பனர்க்கு கொடுக்கும் வரி
லபிக்கும்படி – கிட்டும்படி
ஜட்கா வண்டி – குதிரை வண்டி
ஜலாதாரம் – நீராதாரம்
ஸ்திதி – நிலை, பதவி