தொழிலாளர்
சென்னைப் பார்ப்பனத் “தலைவர்கள்” தாங்கள்தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கரையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங்களும் தங்களால்தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங்களெல்லாம் தங்களால்தான் வாங்கிக் கொடுக்கக்கூடும் என்றும், சொல்லி இது காலபரியந்தம், தொழி லாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்களைப் பெற்று பதவி பெற்று வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபை தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல் களிலும் இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலா ளர்கள் தங்களுடைய ஓட்டுக்களை எல்லாம் பார்ப்பன அபேட்சகர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரை தோற்கடிக்க செய்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படி இருக்க, இப்போது ³ தொழிலாள சகோதரர்களில் தங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலாம் என்பதாக கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர்தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த ³ பார்ப்பனர்கள் தொழிலாளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித்து இருக்கிறார்கள். அது என்னவென்றால் தொழிலாளர்களுக்கு பிரதி நிதித்துவம் வேண்டும் என்றால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேரவேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர்களே யோசிக்க வேண்டும். என்னவெனில், காங்கிரஸிலோ சுயராஜ்யக் கட்சியிலோ, தொழிலாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளிமார்கள் அவர்களை எப்படி யாவது கெடுத்துவிடக் கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரஸில் சேர முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழிலாளி களை சுலபமாக தள்ளிவிடலாம் என்பதுதான். தொழிலாளிகளுடைய ஓட்டுபெறும் போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என்கிற தந்திரத்தின் பேரில்தான் பார்ப்பனர்களின் “தொழிலாளர் அனுதாபம்” நிற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சிகளை அறியாமல் “எடுப்பார் கை குழந்தை”களாய் இருக்கிறார்கள். இவைகளை எல்லாவற்றையும் அறிந்தே தான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்மந்தமான எந்த கட்சியிலும் சேரக் கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக் கூடிய சக்தியை பெறவேண்டும் என்றும், அது கொஞ்ச காலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும் எழுதியும் வந்தோம், நாம் இப்படி பேசி எழுதி வந்ததைப் பற்றி பல “தொழிலாளர்கள் தலைவர்களுக்கும்” நம் மீது மனஸ்தாபம் ஏற்பட்டதும் நமக்குத் தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மகாநாட்டு உபசரணை தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். “மித்திரன்” அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன்தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட்சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டியாருக்கும், சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங் கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பா ஷணை, அடிதடி சண்டை முதலிய வைகள் நடந்து இருப்பதையும் தொழி லாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவ ராவு, கல்யாணசுந்தர முதலியார் முதலிய வர்கள் பேசிய பேச்சுகளில் இருந்தும் பார்ப்பன தந்திரங்கள் நன்றாய் விளங்கு கின்றன. இனியாவது நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டு களின் மாய்கையில் இருந்து விலகுவார்களா? என்பதுதான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகி தனிப்பட்ட ஓதாவில் தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால் நாமும் நம்மால் ஆனதை செய்ய தயாராய் இருக்கிறோம் என்றும், எந்த கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்து விடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 24.04.1927