பரப்புரைப் பயணத்திலிருந்து…

 ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’  என்ற முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட பயணம் குறித்த செய்தி தொகுப்பு.

  • சென்னையிலிருந்து புறப்பட்ட பயணக் குழு, ஆகஸ்டு 6ஆம் தேதி தொடக்க விழாவை சென்னை இராயப்பேட்டையில் பொதுக் கூட்டமாக நடத்தி, 7ஆம் தேதி காலை புறப்பட்டது. முதல் நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் நிறைவு செய்து இரண்டாம் நாள் பயணத்தை நெமிலியில் நடத்தி முடித்து, காவேரிப்பாக்கம் வந்தவுடன், ‘இந்து முன்னணி’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே காவல் துறை வேலூர் மாவட்டம் முழுதும் அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.
  • காவல்துறை தடையைத் தொடர்ந்து சென்னை பரப்புரைக்குழுவினரும் வீதி நாடகக் குழு வினரும் சத்திய மங்கலம் பரப்புரைக் குழுவின ரோடு இணைந்து பரப்புரை செய்ய முடி வெடுத்து ஈரோடு பயணமாயினர்.
  • சென்னைக் குழுவைச் சேர்ந்த தோழர்களில் ஒரு பிரிவினர் ஆத்தூரில் தங்கி நிறைவு விழா நிகழ்ச்சிக்கான நன்கொடை திரட்டல்; துண்டறிக்கை வழங்கும் பணிகளில் செயல்பட்டனர்.
  • பயணத்துக்காக வெளியிட்ட துண்டறிக்கைக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தது என்று துண்டறிக்கைகளை வழங்கிய தோழர்கள் தெரிவித்தனர்.  குறிப்பாக, குழந்தைகளின் தலையை மிதிக்கும் சாமியார்  படம், மண்டையில் தேங்காய் உடைக்கும் படங்கள் பொது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • வீதிகளில் சிறுசிறு கடைகளை நடத்தி வரும் ஏழை எளிய மக்கள், குறிப்பாக பெண்கள், மகிழ்ச்சி யோடு கருத்துகளை வரவேற்று உண்டியலில் நன்கொடைகளை வழங்கினர்.
  • மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட அணிக்கு தலைமை தாங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆகஸ்டு 10ஆம் தேதி குமாரப்பாளையத்தில் வீதி நாடகம், இசை நிகழ்ச்சியோடு நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றிவிட்டு, மாற்றப்பட்டு சிறப்புடன் நடந்தது.
  • ஆகஸ்டு 11ஆம் தேதி காலை சங்ககிரிக்கு பரப்புரைக் குழு வந்தபோது அங்கே காவல்துறை ஒதுக்கித் தந்திருந்த இடத்தின் அருகே பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டம் நடக்க இருந்தது. வீதி நாடகம் தொடங்கிய சில நிமிடங்களில் காவல் துறை யினருக்கு  பா.ஜ.க. கூட்டம் பற்றிய தகவல் வந்தவுடன் அருகே வேறு இடத்துக்கு நிகழ்ச்சியை மாற்றிக்கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சி உடனே நிறுத்தப்பட்டு வேறு இடத்தில் சிறப்புடன் பரப்புரை நடந்தது.  வெங்காயம் திரைப்பட இயக்குநர் இராசுகுமார் நண்பர்களுடன் சங்ககிரி வந்து குழுவினரை வர வேற்று அனைவருக்கும் தேனீர் வழங்கினார்.
  • பயண நிகழ்வுகளை உடனுக்குடன் தோழர்கள் முகநூலில் காட்சிகளாக பதிவு செய்து பயணத்தின் சிறப்பை வெளிப்படுத்தி வந்தனர்.
  • ஆத்தூர் நிறைவு விழாவில் போடப்பட்ட இருக்கைகள் நிரம்பிவழிந்ததால், பிறகு கூடுதல் இருக்கைகள் கொண்டு வரப்பட்டன. மேடை நிகழ்வுகளை  சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார்.
  • பயணத்தில் ஒவ்வொரு அணியும் தோழமை உணர்வோடு 6 நாள்கள் ஒன்றாக உரையாடி, உண்டு, உறங்கி பயணத்தில் பெற்ற உணர்வுகளும் மக்களின் ஆதரவும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டியதாக தோழர்கள் கூறி மகிழ்ந்தனர்.
  • பெரியார் இயக்கத்தை மக்களிட மிருந்து தனிமைப்படுத்த பார்ப்பனர்கள் சில ‘ஆட்’களைப் அடுத்த நாள் மயிலாடுதுறை பயணக் குழுவின் பரப்புரை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார்.
  • சென்னை பயணக் குழுவிற்கு தலைமையேற்ற பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சென்னை குழுவினருடன் சத்தியமங்கலம் குழுவில் இணைந்து பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றினார்.
  • பெரம்பலூர் தாமோதரன், காவை. இளவரசன், மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர், ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினர் பயணக்குழுவில் பங்கேற்று கலை வடிவத்திலும் செயல்முறை வடிவத்திலும் நிகழ்த்திய பரப்புரைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
  • கொடுமுடி, ஆனைமலை பகுதியில் இந்து முன்னணியினர் சிலர் கலவரம் உருவாக்கச் செய்த முயற்சிகளை திருப்பூர் அணி தோழர்கள் வெற்றிகரமாக முறியடித்து, பரப்புரையை திட்டமிட்டபடி நடத்தினர்.
  • சென்னை அணி சத்தியமங்கலம் அணியில் இணைந்தவுடன் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் திருப்பூர் அணியின்பயணத்தில் இணைந்து கூட்டங்களில் பேசினர்.
  • சுட்டெரிக்கும் வெய்யிலில் சாலைகளில் மக்கள் கூடும் இடங்களில் பரப்புரைகள் நடந்தன. காலை தொடங்கி இரவு பயணம் முடியும் வரை காவல்துறை வாகனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
  • திருப்பூர் அணியில் பெண்கள் பங்கேற்று அவர்களே துண்டறிக்கைகளை வழங்கியும் நன்கொடைகளை திரட்டும் பணிகளிலும் ஆர்வத்துடன் செயல்பட்டது பொது மக்களை மிகவும் ஈர்த்தது.
  • ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவிலும் பெண்கள் பங்கேற்று நடித்தனர்.
  • ஆகஸ்டு 12ஆம் தேதி காலை பரமத்தி வேலூரில் நடத்த திட்ட மிட்டிருந்த பரப்புரைக்கு அனுமதி மறுத்த காவல்துறை, பிறகு முடிவை மாற்றிக் கொண்டு அனுமதி வழங்கியது.
  • தாரமங்கலத்தில் ஆகஸ்டு 11 ஆம் தேதி கோயில் தீ மிதி விழா மாலை 5 மணியளவில் நடக்க இருந்தது. எனவே காவல்துறை 3 மணிக்கே பரப்புரையை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதால், பரப்புரை முன்கூட்டியே நேரம் பிடித்து கூர் தீட்டிவிட்டு மோத விடச் செய்த முயற்சிகளை இப் பயணம் முறியடித்தது. மக்களிடம் மேலும் நெருக்கமான உறவுகளுக்கு களம் அமைத்துத் தந்த  பயணம், ‘வெற்றிப் பயணம்’ என்று பயணத்தின் பொறுப்பாளர்கள் பெருமையுடன்  கூறினார்கள்.
  • பயணத்துக்காக 5 நூல்களை திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டு மக்களிடம் விற்பனை செய்தது.
  • காஞ்சி சங்கர மடத்தின் அருகே நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பெரும் கூட்டம் கூடியது. இரண்டு மணி நேரம் நிகழ்ச்சிகள் நடந்தன. இஸ்லாமியர் சடலம் அந்த வழியாக வருவதை அறிந்து நிகழ்ச்சிகள் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு தொடர்ந்தன.
  • காவல்துறை அனுமதி மறுத்த வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களல் உரிய அனுமதி பெற்று, திட்டமிட்டபடி பரப்புரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கழகத் தலைமை மேற்கொண்டு வருகிறது. இனி அடுத்தப் பயணம் எப்போது? காத்திருக்கிறோம் என்ற உணர்வு களைப் பகிர்ந்து தோழர்கள் விடை பெற்றனர்.
  • 2012, ஆகஸ்டு 12இல் ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். அப்போது ‘இலக்கு நோக்கிய பயணத்தில் இணையவரும் தோழர்கள்’ என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது. அதே நாளில் 2016ஆம் ஆண்டில் இலக்கு நோக்கிய பயணத்தின் பாதைகளில் பயணித்த தோழர்கள் கூடினார்கள். பெரியாரியலை முன்னெடுக்க உறுதியேற்றார்கள்.

தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

பெரியார் முழக்கம் 18082016 இதழ்

You may also like...