திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 2.12.13 மாலை 7.30 மணிக்கு சகிலா விடுதியில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் நடை பெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக செயலகத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டக் கழகத்திலிருந்து தோழர்கள் மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார், மாவட்ட அமைப்பாளர் குணராஜ், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்கம் அமைப்பாளர் அசோக், பெரியார் பெருந் தொண்டர் டாக்டர் எ°.எ°.முத்து, பொன்னு சாமி, பழனி, முருகானந்தம், தமிழ் முத்து, ஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ள தமிழக அரசை கண்டிக்கிறோம்.
ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் இராணி, அருந்ததியினருக்கான 6 சதவீதம் உள்ஒதுக்கீட்டை மாநில அரசு நிறைவேற்றக்கோரி திருச்சி அம்பேத்கர் சிலை முன் தீக்குளித்து மரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. திருவரங்கம் நகர தலைவராக பெரியார் பெருந்தொண்டர் டாக்டர் எ°.எ°.முத்து நியமிக்கப்பட்டார். மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பாக சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 12122013