சத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு

 

ஆச்சாரியார் மந்திரிசபையின் ஆச்சரியமான போக்கைப்பற்றியும், கட்டாய இந்தியின் தீங்கைப்பற்றியும், இந்தியால் தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும், தமிழ் மக்கட்கும் நேரும் இன்னல்களைப் பற்றியும், அடக்கு முறையைப் பற்றியும், பிரஜா உரிமை, பேச்சுரிமை ஆகியவைகளைப்பற்றியும், கிரிமினல் அமென்மெண்ட் ஆக்டின் தன்மையைப்பற்றியும், காங்கரஸ் கட்சிக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றியும், தேசீயப்போர்வையில் வகுப்புவாத ஆட்சி நடத்துவதுபற்றியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மதராஸ் ஆகிய விடங்களில் பள்ளிக்கூடங்களை மூடிவரும் கொடுஞ் செயல்களைப்பற்றியும், புதிய கடன் 3லீ கோடிக்கும், அதிக வரி 13க்கும் பள்ளிக்கூடங்களை மூடி வேறு வேலையிருக்க முடியுமா? என்பதுபற்றியும் மக்கள் கண்ணை மூடி காங்கரசை ஆதரித்ததினாலேயே கட்டாய இந்தி வந்து புகுந்தது என்றும் பொது ஜனங்கள் எதையும் நன்கு ஆலோசித்து உணர்ந்து செய்ய வேண்டும் என்றும் சுமார் 1லீ மணி நேரம் இடி முழக்க முழக்கினார்.

குறிப்பு: 08.07.1938 ஆம் நாள் தூத்துக்குடி மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

குடி அரசு – சொற்பொழிவு – 17.07.1938

You may also like...