Category: நிமிர்வோம் 2019

இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2) “நாடகங்களில் கருத்துகளே வேண்டும்; இசையைத் தவிர்க்க வேண்டும்” என்றார் பெரியார் முனைவர் வே. இராமசாமி

இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் நடத்திய கலகம் குறித்து முனைவர் வே. ராமசாமி எழுதிய நூலிலிருந்து இரண்டாம் பகுதி இது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்தில் பெரியாரின் தலைமை உரை. நாடகம் குறித்த அவரது ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்துக்கு தலைமையேற்று சென்னையில் பெரியார் பேசினார். பெரியார் தன் தலைமையுரையில், “….. இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது, நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும்தான் கருத வேண்டும். நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவும் தான்...

கும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்?

பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று நடுவண் ஆட்சி கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்து சமூக செயல்பாட்டாளர் களையும் சிறுபான்மை மக்களையும் குறி வைக்கிறது. வடமாநிலங்களில் ‘பசு’ மாட்டின் பெயராலும் ‘தீண்டாமை’ ஜாதி வெறியினாலும் தலித் சிறுபான்மை மக்களை கும்பலாகத் திரண்டு அடித்தே சாகடிக்கிறார்கள். (டுலn உhiபே) இதை ஒரு பயங்கரவாதமாகக் கருதுவதற்கு மோடி ஆட்சி தயாராக இல்லை. வெறுப்பின் வெளிப்பாடான இத்தகைய பயங்கரவாதம் ஒரு காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியர்களால் நடத்தப்பட்டது. நிறவெறிக் கும்பல்களால் அடித்தே கொல்லப் படும் இந்த பயங்கரவாதத்தைக் குற்றமாக அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1918ஆம் ஆண்டிலிருந்து இதைக் கிரிமினலாக்கும் மசோதாக்கள் வந்த போதெல் லாம் அமெரிக்க காங்கிரஸ் நீர்த்துப் போகச் செய்து அமுலாக்காமல்  தடுத்து விட்டது. இறுதி யாக 2018ஆம் ஆண்டு தான் அனைத்து அமெரிக்க மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டமானது. நிறவெறி வெளிப்பாட்டின் உச்சகட்ட...

காஷ்மீர்: வரலாறும் துரோகமும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியையும்

370 சிறப்புப் பிரிவு வழங்கிய உரிமைகளை படிப்படியாக இந்திய அரசு பறித்ததால் அம்மக்களிடையே உருவான எதிர்ப்பையும் சுருக்கமாக விவரிக்கிறது, கட்டுரை. தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது. இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ் தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோடும், 49 சமஸ்தானங்கள் பாகிஸ்  தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன. ஜுனாகட் சமஸ்தானம் ஹைதராபாத் சமஸ்தானம் காஷ்மீர் சமஸ்தானம் ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன்...

ஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி!

இந்தியா என்பது ஒரு தேசமாகவே உருவாகவில்லை. பல்வேறு பண்பாடு, மொழி, பேசும் மாநில மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். அரசியல் சட்டமே அப்படித்தான் கூறுகிறது. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி, இந்தியாவை ஒற்றை ஆட்சி நோக்கி வேகவேகமாக இழுத்துச் செல்வதற்கான சட்டங்களை அதிரடியாக அமுல்படுத்தி வருகிறது. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதன் அடித்தளம் மாநிலங்களின் தன்னாட்சியிலும் கூட்டாட்சி தத்துவத்திலும் தான் அடங்கியிருக்கிறது. அவைகள் தகர்க்கப்படும்போது இந்தியாவின் ஒருமைப்பாடும் வேகமாக தகரும் நிலைதான் உருவாகும் என்பதை பார்ப்பனியம் உணர மறுக்கிறது. இனங்களின் அடையாளம், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அடையாளங்கள் அழிக்கப்படும் போதும் விடுதலைக்கான போராட்டங்களும் போர்களும் தொடங்கி விடும் என்பதுதான் வரலாறு கூறும் படிப்பினை. இந்தியாவிலே தனி மாநிலம் கோரி போராடிய நாகாக்கள், போடோக்கள் இரஷ்யாவிலிருந்து பிரிந்து போக போராடி வரும் செச்சென்ஸ் (ஊhநஉhநளே) மக்கள், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து போக போராடும் பலுசிஸ்தான், இந்தோனேசியாவிலிருந்து பிரிந்து போக...

காத்திருக்கும் கோட்சே கூட்டம்! புரட்சிக் கவிஞர்

1.3.1948இல் ‘குயில்’ ஏட்டில் எழுதிய கவிதை பெருநிலையில் இருக்கின்றீர் காமராசப் பெருந்தகையீர்! உம்பெருமை அவர்கள் கண்ணில் கருவேலின் முள்போல உறுத்தும், நீவீர் கடுகளவும் அஞ்சாதே கோட்சே கூட்டம் திரைமறைவில் நோக்கத்தை வைத்திருக்கும் வெளிப்புரத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த விரிவுதனை நீர் அறிவீர் அஞ்சவேண்டா; கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும் ஏழைக்கும் செல்வனுக்கும் பன்மதத்தார் எல்லார்க்கும் எதிலும் நலம்புரிய எண்ணி வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல் மார்பு பிளந்தார்; காமராசரே, எம் தோழரே! திராவிடரே உமது மேன்மை தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்! ஆழ்ந்திதனை எண்ணிடுக கோட்சே கூட்டத் ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை!     வரலாற்றுக் குறிப்பு: ……………. காந்தியை கோட்சே சுட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் முதல்வராக இருந்த ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) மற்றும் காமராசர் ஆகிய இருவருக்கும் சேர்த்து – புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை இது. காமராசர் மீதான பகுதியை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். புரட்சிக் கவிஞர்...

வாசகர்களிடமிருந்து…

திராவிட இயக்கங்களின் பகடி இலக்கியங்கள் குறித்து பேராசிரியர் ராஜ் கவுதமன் கட்டுரை மிக அருமை. இத்தகைய சிறப்பான கட்டுரையை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி தெரிவிக்கிறேன். “உன்னதமானவற்றை உன்னதமில்லாதவர்கள் கேலி செய்து சிரிக்கிறபோது, உடன் நிகழ்ச்சியாக உன்னதங்கள் தலைகீழாகப் புரட்டப்படுகின்றன. சர்வ வல்லமை பெற்றவையாக உள்ளவை இந்தப் பகடியின் மூலமாக சாமானியமானவையாக ஆக்கப்படுகின்றன. உயர்ந்தவற்றின் அசாதாரணத் தன்மைகள் அகற்றப்படுகின்றன. மாற்றத்துக்காகக் குரலிடும் சாமானியர்களின் மருகிப்போன தன்னிலைகள் களிப்படைகின்றன. மனச்சுமை, குத்தல், குற்ற உணர்வு, பயம் எல்லாம் கழன்று, தன்மானமும் சுயமரியாதையும் ஏற்படுகின்றன. குழு உணர்வும் போர்க் குணமும் இணக்கமும் கைகூடுகின்றன. ……………… இந்துப் பண்பாட்டில் சீரியஸானவையாகக் கருதி, மதிக்கப்பட்ட அனைத்தையும் அனைவரையும் நகைப்புக் குள்ளாக்கும் கலகத்தைத் திராவிட இலக்கியமே தொடங்கி வைத்தது. இதற்கு முன் தமிழகத்தில் சித்தர்கள் இதனைச் செய்தார்கள்தான். ஆனால், இவர்களின் பகடி, மதத்துக் குள்ளேயே மற்றொரு மாற்று மதத்தை உண்டாக்கும் இலக்கினையே கொண்டிருந்தது. ஆனால், திராவிட இலக்கியத்தின் பகடி,...

பெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்! புத்தக விற்பனை – கேள்விகளுக்கு பதில் – புள்ளி விவரப் பேச்சுகளுடன் நடந்தன பெரியார் – அண்ணா கூட்டங்கள் – பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம்

நவீன அரசியலில் தமிழ்நாடு எழுச்சி பெற்ற நூற்றாண்டின் சாட்சியங்களில் ஒருவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். நம் காலத்தின் முக்கியமான சமூகவியல் ஆய்வாளர்களில் ஒருவரும் இடதுசாரி புலமையாளருமான சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் வெகு மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தைக் கற்பிப்பதாகவும் வளர்த்தெடுப்பதாகவும் அண்ணாவின் அரசியல் இருந்தது என்பதையும் திராவிட இயக்கம் எப்படி இங்கே ஒரு அறிவொளியை உண்டாக்கி யது என்பதையும் மிக விரிவாகப் பேசுகிறார்.   அண்ணாவின் காலத்துக்குக் கொஞ்சம் முன்பிருந்து நாம் கதையைத் தொடங்கலாமா? அரசியல், ஜனநாயகம் இவையெல்லாம் வெகு மக்களுக்குப் புதிதுதானே! சுதந்திர இந்தியாவில்தான் சாமானியருக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. சரியாக, ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசாகிறது; நான்கு மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 17, 1949 அன்று திமுக பிறக்கிறது. முதல் தேர்தலில் திமுக போட்டி யிடவில்லை, 1957-ல் நடந்த இரண்டாவது தேர்தலில் தான் அது போட்டியிட்டது என்றாலும் ஒரு முழு அரசியல் கட்சிக்கான ஆகிருதியோடுதான் முன்பிருந்தே அது நடந்துகொண்டது. பேச்சு, எழுத்துக்கு அது...

பார்ப்பனர்கள் நடத்தும் யாகங்களின் புரட்டு வடநாட்டு புரோகிதரே அம்பலப்படுத்துகிறார்

புரோகிதர்களை வைத்து யாகங்களை நடத்தும் வேதகாலப் பண்பாடு இன்று அரசியல் பண்பாடாகி விட்டது. மழைக்காக தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல; அரசு விழாக்களிலும்கூட யாகங்கள் நடக்கின்றன. புரோகிதர்களின் தொழிலாக மாறியுள்ள இந்த யாகத்தின் மோசடிகளை ஆதாரங் களுடன் விளக்குகிறது இக்கட்டுரை. கட்டரையாளர் ஒரு வடநாட்டுப் புரோகிதர்) உலகத்தின் எந்த நாட்டின் வரலாற்றை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மதத் தலைவர்களின் கையில் அரசியல் அதிகாரம் முழுவதும் சிக்கிக் கொண்டுவிட்ட காலம் ஒன்று கட்டாயம் இருக்கும். ஐரோப்பாவில் போப்பாண்டவர் எத்தனையோ பேரை மத விரோதிகள் என்று கூறி படுகொலை செய்வித்திருக்கிறார். இந்தியாவில் இதே உரிமையைப் புரோகித வர்க்கம் பெற்றிருக்கிறது. யாத்திரை கிளம்ப வேண்டுமா, வீடுகட்ட வேண்டுமா, திருவிழா அல்லது திருமணம் நிகழ்த்த வேண்டுமா, வியாபாரம் தொடங்க வேண்டுமா, புரோகிதர் வராமல் நடக்காது. மத விஷயங்களில் புரோகிதர்கள் இதே வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். இந்தியர்கள் பொதுவாகவே மதத்தில் மிகுந்த பற்றுதல் உடையவர்கள். புரோகிதத் தொழில் என்றுமே ‘பிராமணர்கள்’...

பிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’

இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து ஒற்றை தேசம்; ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கத் துடிக்கிறார்கள் பா.ஜ.க. – பார்ப்பன பரிவாரங்கள். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை என்பதே வரலாறு. மௌரியப் பேரரசு, கி.மு. நான்காம் நூற்றாண்டில் மகதத்திலிருந்து நர்மதை நதிக்கரை வரையில் தனது ஆதிக்கத்தைப் பரப்பியது. கலிங்கம் நீங்கலாகத் தக்காணத்தில் மற்ற பெரும் பகுதியைப் பிந்துசாரன் தன்னாட்சிக்குக் கொண்டு வந்தான். அசோகன் கலிங்கத்தை வென்றான். ஆக, தமிழகத்தின் மூவேந்தர் ஆட்சியைத் தவிர இந்தியத் துணைத் கண்டத்திலிருந்த எல்லாத் தனி நாட்டுப் பகுதிகளும் மௌரியர்களால் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. ஆனால் அரசியல் விற்பன்னர்களான மௌரியர்கள், தங்களது பேரரசை நிலை நாட்டியவுடன், தமது மைய அரசின் கீழ் சில இன்றியமையா அதிகாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அந்தந்த தனி நிலப் பகுதிகள் தன்னாட்சியை இழக்காத நிலையில் மத்தியத்தின் மேலாட்சியை மட்டும் நிறுவினர். தனி நாடுகளின் சுதந்திரத்திற்கும், மொழி, பண்பாடுகளுக்கும் எவ்வகையிலும்...

சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா? கவிஞர் தணிகைச் செல்வன்

புலவர் செந்தலை கவுதமன், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உருவானது 800 ஆண்டுகளுக்கு முன்பு தான் என்றும், சங்க காலத் தமிழர் வாழ்வில் இருந்த திணை மரபு – ஜாதி மரபு அல்ல என்றும் கடந்த ‘நிமிர்வோம்’ இதழில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாறுபட்ட சிந்தனைகளும் உண்டு. தொல்காப்பியர் காலத்திலேயே ‘வர்ணாஸ்ரம்’ ஊடுறுவத் தொடங்கிவிட்டது என்பதற்கும் சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்த இரு தரப்பு விவாதங்களை யும் ‘நிமிர்வோம்’ முன் வைக்கிறது. இது குறித்து கவிஞர் தணிகைச் செல்வன் கட்டுரையை ‘நிமிர்வோம் பதிவு செய்கிறது. பழந்தமிழகத்தில் சாதிகள் இல்லை என்பதற்குச் சான்றாகக் குறுந்தொகை நூலில் உள்ள ஒரு பாடலைத்தான் பலர் பயன்படுத்துவது வழக்கம். “யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” – அந்தப் பாட்டு ஒரு பெண் தன் காதலனை நோக்கிக் கூறுவதாக...

சமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை

21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கான துடிப்பான அறிவுச் சமூகத்தை உருவாக்க உதவும் வகையில் இந்தியாவை மையப்படுத்திய கல்விக் கொள்கையை வகுப்பதைத் தனது வழிகாட்டு நெறியாகக் குறிப்பிடுகிறது. ஆனால், சாதிய அடிப்படையில் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி மறுத்திட்ட பண்டைய இந்தியக் கல்வி முறையை சிறந்த பாரம்பரியம் கொண்டிருந்ததாக அறிக்கை சிலாகிக்கிறது. வேத காலத்திலேயே, இந்தியர்கள் ஆயகலைகள் அனைத்திலும் சிறந்திருந்ததாகவும், கணிதம், வானவியல், உலோகவியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உலகிற்கே வழிகாட்டுபவர்களாக இருந்ததாகக் கூறுகிறது. எண் கணிதத்தில் இலட்சம், கோடிக்கு அடுத்ததாக பல அளவீடுகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மத ரீதியான புரோகிதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சமஸ்கிருத மொழி யினையும் அதன் மூலம் சமஸ்கிருத இலக்கியங் களைப் படித்து இந்தியக் கலாச்சாரத்தினையும் பண்பாடு மற்றும் மதிப்பீடுகளை இந்திய இளைஞர்கள் பெற வேண்டுமென அறிக்கை கூறுகிறது. இத்தகைய பரிந்துரை மாணவ – மாணவியர் மத்தியில்  அறிவியல் கண்ணோட்டத்தினை ஏற்படுத்த உதவாது. மாறாக பிற்போக்கான மனோநிலைக்குத்தான் இளை ஞர்களைத் தள்ளும்....

வரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள் – ம. கி. எட்வின் பிரபாகரன்

‘நாடார் வரலாறு கருப்பா? காவியா?’ என்ற நூலை சமூக வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய். தடைகள் எதிர்ப்புகளைக் கடந்து நீதிமன்ற அனுமதி பெற்று வந்திருக்கும் இந்த நூல் நாடார் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சமூக வரலாறுகளை விவரிக்கிறது. இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டோர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இடுப்பில் குடம் வைத்துக்கொள்ளக்கூடாது; நகைகள் அணியக்கூடாது; ஆதிக்கவாதிகள் புதிதாக கோயில் கட்டினால், அதில் ஒடுக்கப்பட்டோர் குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட வேண்டும்; தலைப்பாகை அணியக்கூடாது; மீசை வைத்துக் கொள்ளக்கூடாது; ஓட்டு வீடுகளை கட்ட தடை; கோயிலுக்குள் நுழைய தடை; மார்பை மறைக்கத் தடை என்று இன்னும் எவ்வளவோ கொடுமைகளை ஒடுக்கப்பட்டோர் சந்தித்துள்ளனர். “ஆதிக்கவாதிகள், ஒடுக்கப்பட்டோர்” போன்ற பதங்கள் துல்லியமில்லாதவை. ஒடுக்கப்பட்டோருள் ஆதிக்கவாதிகளும் உண்டு; ஆதிக்கவாதிகளுள் ஒடுக்கப்பட்டோரும் உண்டு. நாடார்களும் மேலே கண்ட ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகினர்; பிறரை ஒடுக்கவும் செய்தனர். 1931இல் திருவிதாங்கூர் சமஸ்தான ஒடுக்கப்பட்டோர் (னுநயீசநளளநன ஊடயளளநள) பட்டியலில் “நாடார்” பெயர் உள்ளது. ஆனால்,...

ஜாதி எதிர்ப்புக்கு தொலைநோக்குத் திட்டம் தேவை

பெரியார் கலைத்துப் போட்ட ஜாதி அமைப்பை – ஜாதிய சக்திகள், மறுகட்டுமானம் செய்து வரும் நிலையில், நாமோ, உடனடி எதிர்வினை யோடு நிறுத்திக் கொள்கிறோமே தவிர, நம்மிடம் தொலைநோக்குத் திட்டம் இல்லை எனும் ஆழமான சிந்தனையை கவலையோடு முன் வைக்கிறார், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.  அவரது பேட்டி: நக்கீரன், மிக அரிதாகச் சூட்டப்படுகிற பெயர் அல்லவா? “ஆமாம். இதைப் புனைபெயர் என்றே பலரும் நினைக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அழகான தமிழ்ப் பெயர்களோடு பௌத்த, சமண, மார்க்சிய ஆளுமைகளின் பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. இதில் எனக்கு உட்பட பலருக்கும் பெயர் சூட்டியவர் பெரியார். என் பெற்றோரின் திருமணமே அவருடைய தலைமையில்தான் நடந்தது. எழுத்துலகுக்கு வந்தபோது ‘நக்கீரன் கோபால்’ பிரபலமாக இருந்ததால், பலரும் பெயரை மாற்றுமாறு வற்புறுத்தினர். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன்”. “எழுத்துலகுக்குள் வந்து சேர்ந்த கதையைச் சொல்லுங்கள்…” “அய்ந்தாம் வகுப்பில் ‘கல்கண்டு’ பத்திரிகையின் ‘தமிழ்வாணன் கேள்வி பதில்’ பகுதிக்கு தபால் கார்டில் கேள்விகள்...

இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் முனைவர் வே. இராமசாமி

1930ஆம் ஆண்டுகளிலேயே தலித் – பார்ப்பனர் காதலை முன்வைத்து தீண்டாமை எதிர்ப்பு நாடகங்களை நடத்தியது சுயமரியாதை இயக்கம் வைதீகப் புராண இதிகாச நாடகங்களுக்கு எதிராக அறிவைப் பரப்பும் சமூக சீர்திருத்த நாடங்களுக்குத் தமிழ் மண்ணில் மேடை அமைத்துக் கொடுப்பதற்குத் திராவிட இயக்கம் எழுப்பிய கலகக் குரல்களின் வரைகோடுகள்தான் திராவிட இயக்க நாடக வரலாறு ஆகும். பண்பாட்டுப் பெருவெளியில் தன் செயல் திட்டத்தை முன்மொழிந்திருந்த திராவிட இயக்கம், மக்கள் இயக்கமாகப் பேச்சை, எழுத்தை, இசையை, நாடகத்தை நகர்த்தும் வேலைத் திட்டத்தைத் தன் இயக்க அமைப்புப் பணிகளில் ஒன்றாகவே வடிவமைத்திருந்தது என்பது முக்கியமானது. பேச்சையும் எழுத்தையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஓவியக்கலை, சிற்பக் கலைகளைப் பொருத்தவரை, “கோவில்களைக் குற்றம் சொல்லி அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால், ஓவியம் என்னும்...

தமிழர்கள் சோதனை எலிகளா?

2017ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய ‘நீட்’ விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பி விட்டதாக நடுவண் அரசின் உள்துறை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறது. இரண்டாண்டுகள் தமிழக சட்டமன்றமும் தமிழக மக்களும் இது குறித்து இருட்டிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள். நடுவண் அரசின் இந்த துரோகத்துக்கு ஒரு வகையில் தமிழ்நாடு அரசும் பொறுப்பேற்க வேண்டும். இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டிருந்த ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் விடுதலையை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடுவண் அரசுக்கு 3 நாள் கெடு விதித்தார் என்பது வரலாறு. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ‘நீட்’ மசோதாவை திருப்பி அனுப்பி 2 ஆண்டுகாலம் ஓடிய பிறகும் அதை வெளிப்படுத்தாமலே மவுனம் சாதித்திருக்கிறது. தமிழ்நாட்டு...

வாசகர்களிடமிருந்து…

‘செம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி’ தலைப்பில் வெளி வந்த இரண்டு தொடர்களும் நாகசாமிக்கு மறுப்பு என்பதையும் தாண்டி மொழியியல் குறித்த சிறப்பான தகவல்களைக் கொண்டிருந்தன. ‘மனு நீதிக்கும் திருக்குறளுக்கும்’ உள்ள வேறுபாட்டை நாவலர் நெடுஞ்செழியன் நூல்களிலிருந்து ஓ. சுந்தரம் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு. ‘பிராமி’ எனும் பண்டைய எழுத்து வடிவ முறையை ‘பிராமணர்கள்’ தான் கண்டுபிடித்தார்கள் என்றால், தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்துக்கு, ஏன் தனியாக எழுத்து வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பார்ப்பனர்கள் என்ன பதிலைக் கூறுவார்கள்? – மலர்விழி, மஞ்சக்குப்பம் மருத்துவமனையிலிருந்து பெரியார் பொதுக் கூட்டம் பேசச் சென்ற நிகழ்வை அவரது உதவியாளர் புலவர் இமயவரம்பன் பதிவு செய்திருந்ததைப் படித்தேன். இப்படியும் ஒரு தலைவரைப் பெற்றிருந்தோமே என்ற பெருமித உணர்வுதான் மேலிட்டது. பார்ப்பனர்களை எதிர்த்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்றதற்கு அவர் பொது வாழ்க்கையில் உறுதியாகப் பின்பற்றிய நேர்மை, பொது ஒழுக்கம், ஒளிவு மறைவு...

அயோத்தி இராமன் கோயில் – பாபர் மசூதி – வரலாறுகள் கூறுவது என்ன? கே.என். பணிக்கர்

மோடி மீண்டும் பிரதமரானதைத் தொடர்ந்து அயோத்தியில் ‘இராமன்’ கோயில் கட்டும் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்கள். முதற்கட்டமாக தேர்தல் முடிவுக்குப் பிறகு உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அயோத்தியில் இராமன் சிலையை நிறுவியிருக்கிறார். அயோத்தியில் இராமன் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாப்ரி மசூதி கட்டப்பட்டதா? இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தி இந்த அயோத்தி தானா? என்பது குறித்து அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் வழியாகக் கேள்விகள் எழுந்து நிற்கின்றன. அயோத்தி, இராமன் பிறந்த இடம் தானா? இந்தக் கேள்வி இது தொடர்பான வேறொன்றையும் எழுப்புகிறது. இன்றைய அயோத்தி இராமாயணத்தில் குறிப்பிடப்படும் அயோத்திதானா? இராமனுடைய கதை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் ‘ராமகதா’வில் சொல்லப்பட்டன. இந்த ‘இராம கதா’ இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. இந்த இராமனின் கதை நிகழ்ச்சிகளை பின்னாளில் ‘இராமாயணம்’ என்ற பெயரில் மிக நீண்ட இதிகாசமாக வால்மீகி எழுதினார். இது முழுவதும் கவிதைகளாக, செய்யுள்களாக இருந்தது. இதனாலேயே இதில் கூறப்பட்ட பாத்திரங்கள், இடங்கள் உள்பட பெரும்பாலானவை கற்பனையாக இருக்கக் கூடும்....

அண்ணாவின் பகுத்தறிவு சிறுகதை “கருப்பண்ணசாமி யோசிக்கிறார்”

புனிதங்களை ‘பகடி’களால் கட்டுடைத்த திராவிட இலக்கியம் குறித்து பேராசிரியர் ராஜ் கவுதமன் கட்டுரை ஒன்று இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பகடி வரிசையில் அண்ணா – 1951இல் எழுதிய சிறுகதை இது. இந்த சம்பவங்கள் இப்போதும் நாட்டின் நிகழ்வுகளாக தொடர்வதை இக்கதையைப் படிக்கும் வாசகர்கள் உணர முடியும். மணி ஒலித்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கருப்பண்ணசாமி அலறிய படி உள்ளே ஓடலானார். ஒளிந்து கொள்ள இடம் தேடினார். `களுக்’கென ஒரு சிரிப்பொலி கேட்டது. கருப்பண்ணசாமி கோபம் கொண்டு “வேதனைப் படுகிறேன் நான், இந்த வேளையில் கேலி வேறு செய்கிறாயா?” என்று கேட்டார் சிரித்தபடி, தன் எதிரே வந்த தேவியைப் பார்த்து. “கருப்பண்ணா, என்ன கலக்கம்? ஏன் ஓடுகிறாய்?” என்று தேவி கேட்க, கருப்பண்ணசாமி “காதிலே விழவில்லையா, மணி சத்தம்” என்று கேட்டார். “விழுந்தது. அது கேட்டு அச்சம் ஏன் வர வேண்டும்? ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்று தேவி கேட்டார்....

பெரியார் மண்ணா? ஆழ்வார்கள் மண்ணா?  – பழனி சோ. முத்து மாணிக்கம்

பெரியார் மண்ணா? ஆழ்வார்கள் மண்ணா? – பழனி சோ. முத்து மாணிக்கம்

‘தமிழ்நாடு பெரியார் மண்’ என்ற குரல் ஒலிக்கும் போதெல்லாம் – ‘இல்லை; இது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமி’ என்று எதிர்க்குரல், இந்து முன்னணிகளிடமிருந்து கேட்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் மனிதகுல விடுதலைக்கு என்ன செய்தார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறது, கட்டுரை. தொலைக்காட்சி ஒன்றில் அனல் தெறிக்க அறிஞர்களின் விவாதம் அரங்கேறிக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசும்போது ஒருவர், ‘இது பெரியார் மண்; எனவே மதவாதக் கட்சிகளுக்கு இடமில்லை என்று  மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்’ என்றார். உடனே மதவாத கட்சியை ஆதரிக்கும் நண்பர் வெகுண்டெழுந்தார். ‘இது பெரியார் மண் அல்ல; இது ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆண்டாளும் தோன்றிய மண்’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். இருவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறதே எனத் தோன்றுகிறது அல்லவா? எப்பொருள் எத்தன்மை உடையதாக இருந்தாலும், யார்யார்வாய்க் கேட்பினும், ஆய்ந்து முடிவெடுப்பதே சிறந்தது. இது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமனியம் பேசிய  திருவள்ளுவர் தோன்றிய...

மூவலூர் இராமாமிர்தம் தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி – க. திருநாவுக்கரசு

1925இல் அன்றைய மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) முதல் தேவதாசி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டியவர் இராமாமிர்தம்  அம்மையார். பெரியார் – திரு.வி.க. உள்ளிட்ட தலைவர்கள் அதில் பங்கேற்றனர். இராமாமிர்தம் அம்மையாரின் பொதுத் தொண்டு காங்கிரஸ், நீதிக்கட்சி, சுமயரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் நிகழ்ந்தன. காங்கிரசில் அம்மையார் இருந்த போதே 1925இல் மயிலாடு துறையில் இசை வேளாளர் மாநாட்டினைப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். இம்மாநாட்டிற்குப் பிறகுதான் காங்கிரசின் ‘புகழ்’ பெற்ற காஞ்சிபுரம் மாநாடு நடைபெறு கிறது. இவ்வம்மையாரின் செயற்பாடுகளைக் கவனிக்கிறபோது, தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கு டாக்டர் முத்துலட்சமி ரெட்டிக்கு இவர்தான் முன்மாதிரியாகத் தோன்றி இருக்கிறார். அவரது மயிலாடுதுறை மாநாடுதான் அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் காலத்திலேயே இவ்வம்மையார் தந்தை பெரியார் பக்கம் நின்று பணியாற்றுவதில்தான் பெருவிருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார். 1925இல் வகுப்புவாரித் தீர்மானம் காஞ்சிபுரம் மாநாட்டில் தோற்றுப் போகவே பெரியாரோடு வெளியேறிய முக்கியமானவர்களில் இராமாமிர்தம் அம்மையாரும் ஒருவர். மயிலாடுதுறையில் கூட்டிய...

வரலாற்றின் வரலாறு

1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு     பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் தோன்றுகின்றன. இயற்பியல் பிறக்கிறது. அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றுகின்றன, வேதியியல் பிறக்கிறது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவாகிறது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோன்றுகின்றன. உயிரியல் பிறக்கிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றனர். 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கற்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினம் ஆப்பிரிக்காவிலிருந்து யுரேசியாவிற்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் உருவாகின்றனர். 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனத்தினர் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் தோன்றுகின்றனர். 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்பின் அன்றாடப் பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது. 70,000 ஆண்டுகளுக்கு முன்பு    அறிவுப் புரட்சி மலர்கிறது. மொழி கண்டுபிடிக்கப்படுகிறது....

‘புனிதங்’களை பகடிகளால் தகர்த்த திராவிட இலக்கியங்கள்

பார்ப்பனியத்தையும் வைதீக இந்து மதத்தையும் அதன் வருணாசிரமத்தையும் பகடி மூலம் தலைகீழாக்கிய பெரியாரின் சொல்லாடலில் தவிர்க்க முடியாதபடி, பெண்ணியத்துக்கும், தலித்தியத் துக்குமான கூறுகள் இடம்பெற்றுள்ளன. மிகவும் பவித்திரமானவற்றுக்கு எதிரானது சிரிப்பு என்பார் பக்தின். ரொம்பவும் சீரியஸானது, பவித்திரமானது என்று உயர்த்திப் பிடிக்கிற பண்பாட்டில் அச்சம், மடமை, பலவீனம், ஒடுக்குமுறை, பொய், கபடம், வன்முறை, எச்சரிக்கை, தணிக்கை, தடை, அச்சுறுத்தல் ஆகிய அம்சங்கள் உள்ளூற உறைந்திருக்கும். இவை அதிகாரத்தைக் கட்டமைப்பவை. இவை கபட வேஷ முகமூடியை அணிந்திருக்கும் என்பார் பக்தின். இந்த முகமூடியைக் கிழித்துவிடும் ஆற்றல் கொண்டவை: சிரிப்பு, வசை, முட்டாள்தனம், இங்கிதமின்மை, கேலி, கிண்டல், பகடி. இவற்றால் கும்மாளமிடுகிற சிரிப்பு, ஒருக்காலும் மக்களை ஒடுக்காது; குருடாக்காது. இந்தச் சிரிப்புதான், என்றைக்கும் மக்களின் கைகளில் ஒரு சுதந்திரமான ஆயுதமாக இருக்கும். அதிகாரபூர்வமான, பவித்திரமான, புனிதமான, ‘சீரியஸான’ பண்பாட்டால் விலக்க, பழிக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் தொகுதியின் சிரிப்பு, அவர்களைப் புறவயமான தணிக்கையிலிருந்து மட்டுமின்றி, அதற்கு...

இஸ்லாம் அறிவியல் மதமா? (2) சூரியனைச் சுருட்ட முடியுமா?

அறிவியல் மதம் என்ற உரிமைக்கு எந்த மதமும் சொந்தம் கொண்டாட முடியாது. இஸ்லாம் மதத்தில் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை அலசுகிறது கட்டுரை. – கடந்த இதழின் தொடர்ச்சி சூரியனை சுருட்டமுடியுமா? குர்ஆனில் சூரியனைப்பற்றி வருகிறது. இதைப்பற்றி ஆடியோ புகழ் பி.ஜே அவர்கள் குர்ஆன் வசனங் களை எடுத்து, “இஸ்லாத்தில் அறிவியல்” என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். குர்ஆன் வசனங்களைப் போட்டு நியாயப்படுத்தி யிருந்தார். அதில் சூரியனைச் சுருட்டுவது என்ற வசனம் குர்ஆனில் வருகிறது. சூரியனை எப்படி சுருட்டுவது? அது உவமானமாகக்கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் அதை நியாயப் படுத்த சுருட்டலாம் என்று சொல்கிறார்கள். கோள வடிவில் உள்ளதை எப்படி சுருட்ட முடியும்? உவமானமாக சொன்னதை திசை திருப்புவதுதான் இது போன்ற செயல்கள் அனைத்தும். காலநிலை மாற்றங்கள் நரகத்தின் பெருமூச்சா? உலகத்தில் காலநிலைகள் எப்படி மாறுபடு கிறது என்று ஹதீசில் விடை கிடைக்கும். ஹதீஸ்: 1088 அபுஹுரையார் கூறியதாவது: அல்லாவின் தூதர் அவர்கள் கூறியது...

பெரியார் தமிழுக்கு எதிரானவரா? பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெரியார் தமிழ்மொழி எதிர்ப்பாளர் என்றும் தமிழைக் காட்டுமிராண்டி மொழியாகக் கூறியவர் என்றும் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்களும், சில தமிழ்த் தேசியத் தலைவர்களும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். மிகச் சிறந்த தமிழறிஞர் பாவலேறு பெருஞ்சித்திரனார் இந்த அவதூறுகளை மறுத்து ஆற்றிய உரை இது. தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வு களையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி. எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை. அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறு களையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள...

எந்த சங்ககாலப் புலவர்களின் பெயருக்குப் பின்னாலும் ஜாதி கிடையாது புலவர் செந்தலை கவுதமன்

நம்முடைய மரபு, செய்த தொழிலின் காரணமாக வந்த குடி மரபு! அந்தக் குடி இனக் குழுவானது, குல மானது. அதை இலக்கணப்படுத்தி வரையறுத்தபோது அது தான் திணை அமைப்பு. அந்த திணைக்குள்ளே நிலம் வரும், மக்கள் வருவார்கள். வாழ்க்கை முறையும் வரும். அந்த திணை வழி அமைப்பைத் தான் பிற் காலத்தில் ஜாதி ஆக்கி விட்டார்கள். இந்த அரங்கத்தில் இருக்கின்றவர்களையெல்லாம் மத ரீதியாக அமருங்கள் என்று சொன்னால் ஒரு மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். ஜாதி ரீதியாக அமருங்கள் என்று சொன்னால் ஒரு நாற்பதுப் பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அனைவரும் தமிழர்களாக அமருங்கள் என்றால்! உட்கார்ந்துதான் இருக்கிறோம். தமிழ் நம்மை இணைக்கும்! ஜாதி நம்மைப் பிரிக்கும்! மதம் நம்மைப் பிளக்கும்! ஏன் நமக்கு இந்த இழிநிலை என்று எண்ணுவதற்கும், இப்படித்தான் இருந்தோமா என்று எண்ணுவதற்கும் தான் இப்படி ஒரு தலைப்பை வழங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட எந்த புலவனுக்கும்,...

இந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி? விவாதங்கள் தொடங்கட்டும்!

இந்தியா இந்துக்களுக்கான தேசம் என்ற பெருமிதத்தோடு அதன் “பெருமைமிகு” பாரம்பர்யத்தை மீட்டெடுப்பதை அரசியல் முழக்கத்துடன் இணைப்பதே பா.ஜ.க. – சங்பரிவாரங்களின் அரசியலுக்கான அடித்தளம். அந்தக் கற்பிதங்களை உணர்வுகளாக்கி வாக்குகளாக மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேசப் பெருமையோடு தேசத்தின் பாதுகாப்பையும் சாதுர்யமாக பிணைத்துக் கொண்டுதான் பார்ப்பனியமும் தன்னைத் தொடர்ந்து ஆதிக்க சக்தியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘மனுசாஸ்திரம் வர்ணாஸ்ரமம்’ என்ற நஞ்சு – இந்த தேசக் கட்டமைப்புக்குள் எவரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் பதுங்கி நிற்கிறது. பார்ப்பன கொடுங்கோன்மைக்கும் அதன் சமூக அரசியல் ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடிய பெரியார், தேசிய எதிர்ப்பையும் அதில் ஏன் இணைத்தார் என்ற வரலாற்று உண்மை – இப்போது புரிந்திருக்கும்.  சமூக ஆய்வாளர்கள் பலரும் இப்போது இது குறித்து வெளிப்படையாக எழுதத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். “தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி என்றென்றும் அடிமைகளாக...

‘அன்னவர்கள்’

‘அன்னவர்கள்’

வாழி! வாழி!! பாவலர் தமிழேந்தி நரியார்கள், ‘புரி’யார்கள், நல்லனவே தெரியார்கள் நம்பும் வண்ணம் திரிபான ஒருகருத்தை – திராவிடத்தில் குறைகாணும் கருத்தை, உண்மை புரியாத சிலபேர்கள் பொழுதெல்லாம் உரைக்கின்றார்; பொதுவாய் யாவும் பெரியார்தான் கெடுத்தாராம்; பெருமையெலாம் சிதைத்தாராம் பிதற்று கின்றார். ‘மொழிப்போரில் பெரியார்க்கு முற்றாகப் பங்கில்லை’ என்றுஅ வர்பேர் கழிக்கின்றார்; தமிழினத்தைக் கருவறுத்த கன்னடரே அவர்தான் என்று பழிக்கின்றார்; பகுத்தறிவுக் கனிதந்த பயன்மரத்தின் வேரைத் தோண்டி அழிக்கின்றார்; ஒவ்வொன்றாய்க் குற்றங்கள் அவர்மீதில் அடுக்கு கின்றார். ‘தமிழகமா? திராவிடமா?’ சொல்லாய்வுச் சண்டைஅவர் அறியார்; இங்கே நமதுழைப்பை உறிஞ்சுகிற நால்வருணச் சாதிமுறை ஒழித்தல் ஒன்றே தமதுபணி என்றெடுத்தார்; சலியாமல் போர்தொடுத்தார்; தன்மானத்தைச் சுமந்தபடி முதுகொடியச் சூத்திரர்க்கும் பஞ்சமர்க்கும் தொண்டு செய்தார். அடுக்குமொழித் தமிழறியார்; அகம்புறமா ஒன்றறியார்; ஆனால் சாதி அடுக்குமுறைக் கருத்தியலின் இலக்கியங்கள் ஆதரியார்! என்ற போதும் கெடுக்கவந்த வடமொழியை இந்தியினை எதிர்த்திட்ட கிளர்ச்சிப் போரில் நடுப்பரணாய் நின்றவர்யார்? தனிச்சிறையில் நொந்தவர் யார்? மறத்தல்...

காதலில், கவனம் தேவை பத்மா

உங்கள் மகளுக்கு இப்படி வன்கொடுமையோ பாலியல் தொல்லையோ நிகழ்ந்திருந்தால், அதை அவள் உங்களோடு பகிரத் துணிந்தால்,  எந்தவிதமான குற்றம்சாட்டுதலும் இல்லாமல் அவளுக்குத் துணை நில்லுங்கள். பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து நாம் பல பாடங்களைக்  கற்க வேண்டியுள்ளது. நாம் ஏன் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக வளர்க்கிறோம்? பெண்களைத் தைரியம் இல்லாதவர் களாகவும் ஆண்களைக் கோளாறு நிறைந்தவர் களாகவும் வளர்க்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் அடையாளத்தை மறைத்து நிற்கிறார்கள்.  பாதிப்பைத் தந்த பையனின் தாயோ வீராவேசமாக  வாதாடுகிறார். பெண்ணை மட்டுமே அவமான உணர்வோடு வளர்க்க வில்லை. பெண்ணைப்  பெற்றதாலேயே அவமானப் பட்டு நிற்க  நினைக்கிறோம்.  ஏன் சமூகம் இப்படி இரண்டு மதிப்பீடுகளோடு தொடர்ந்து இயங்கி வருகிறது? ஏழு வருடங்களாக எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓரிருவர் புகார் அளித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் மௌனம் காத்து நிற்கிறார்கள். ஒரு பெண்ணுக்குக் குடும்பம் ஆதரவாக நிற்க, அவர்கள் காவல் நிலையத்தை அணுகியிருக் கிறார்கள். இப்போதுதான் நமக்குப் பிரச்சினையின் “பூதாகாரம்”...

லெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை நக்கீரன்

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin – 1809-1882) என்பவர் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் ஆவர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிமலர்ச்சிக்  கோட்பாடு (Theory of Evolution) அதுவரை நம்பி வந்த  படைப்புப் பற்றிய கோட்பாட்டைப் புரட்டிப் போட்டது. படிமலர்ச்சிக் கோட்பாடு என்பது ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும். டார்வின்  தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கோட்பாடுகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினங்கள் பற்றி ஆராய்ந்தார். படிமலர்ச்சிக் கருதுகோள் (Theory of Evolution) நீர்வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப் படவில்லை என்பதை...

மருத்துவமனை சிகிச்சையிலிருந்து கூட்டம் பேசச் சென்ற பெரியார் புலவர் கோ.இமயவரம்பன்

ஒப்புக் கொண்ட கூட்டத்துக்குச் சென்றாக வேண்டும் என்ற கடமை உணர்வும் சமுதாயக் கவலையும் கொண்ட தலைவராகப் பெரியார் வாழ்ந்தார்.   பெரியார் அவர்கள் சென்னையில் ஒரு தடவை கடுமையான வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்கள். அந்த காலத்தில்  பெரியார் அவர்களுக்கு வழக்கமாக சிகிச்சை அளித்து வந்தவரான பிரபல நிபுணர் டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் அழைக்கப்பட்டார். டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் பெரியார்பால் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். மேலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் நலனில் மிக்க அக்கறை கொண்டவரும் ஆவார். பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு வழிகாட்டவல்ல ஒரே தலைவர் பெரியார் அவர்களே ஆவார் என நம்பி தமது இறுதி மூச்சு அடங்கும் வரை வாழ்ந்த மாமனிதர் அவர் ஆவார். பெரியார் அவர்களும் சென்னைக்கு வந்தால் டாக்டர் அவர்களைச் சந்தித்து தமது உடல்நிலைக்கு சிகிச்சையும் மருந்தும் பெறுவ தோடு அவர்களோடு அளவளாவுவதையே தமது வாடிக்கையாகக் கொண்டவர் ஆவார். இந்த முறை டாக்டர்...

இராமன் அயோத்தியில் பிறந்தானா? ம.கி. எட்வின் பிரபாகரன்

அயோத்தியில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அயோத்தியில், அவுரங்கசிப் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் இராமனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சங் பரிவார் அமைப்பினர் முயன்று வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதல்களிலும், கலவரங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இத்தகைய சூழலில், அனைத்து கலவரங்களுக்கும் அடிப்படையான, “இராமன் அயோத்தியில் பிறந்தான்” என்ற நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. முதல் இராமாயணம் எது? இராமன் அயோத்தியில் பிறந்தான் என்ற நம்பிக்கைக்கு, கிமு 4 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணமே காரணம். எனவே இராமாயணங்களை ஆராய்வது அவசியமாகிறது. இராமாயணங்கள் மொத்தம் 48. இவற்றுள் புத்த இராமாயணங்கள் மூன்றும், ஜைன இராமாயணங்கள் மூன்றும் அடங்கும். முதலில் தோன்றிய இராமாயணம் வால்மீகி இராமாயணம் என்று தவறாக கருதுவோரே பெரும்பான்மை. ஆனால், முதல் இராமா யணத்துக்கு “தசரத ஜாதகம்” என்று பெயர். இது கிமு 500ஆம் ஆண்டைச் சேர்ந்த புத்தமத இராமாயணமாகும்....

பார்ப்பனிய பயங்கரவாத அமைப்புகளின் கதை – துரை

கலவரங்கள் படுகொலைகளுக்குப் பயிற்சி தரும் மதவெறிப் பள்ளிகள் மோடி ஆட்சியில் தங்குதடையின்றி செயல்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எங்கேனும் குண்டு வெடிப்போ, மத கலவரமோ நடக்கும் போதெல்லாம் அவை தீவிரவாதச் செயல்கள் என்ற அடிப்படையில் மட்டும் நோக்கப்படுவதில்லை. மாறாக எடுத்த எடுப்பிலே இஸ்லாமிய தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. குண்டு வெடிப்புகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது முழு உண்மை அல்ல. ஏனெனில் இந்தியாவில் நிகழும் பல்வேறு குண்டு வெடிப்பு, கலவரச் செயல்களில் பின்னணியில் இங்குள்ள சங்பரிவார அமைப்புகளின் பங்கு கணிசமான முறையில் உள்ளது என்பதே உண்மை. சற்றேறக்குறைய 600க்கும் அதிகமான அமைப்புகளாக, சமூகத்தின் பல்வேறு மட்டங் களிலும், கல்வி அமைப்புகளாக, கலாச்சார அமைப்புகளாக, ஆன்மிக அமைப்புகளாக இயங்கும் சங்பரிவாரங்கள் என்பவை இப்படியான வகுப்புவாதச் செயல்களை தொடர்ந்து நடத்தி வருவதில் இன்றளவும் முயன்று வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே...

செம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி (2) – ஒ. சுந்தரம்

‘மனுநீதி’ கூறும் ‘தர்ம’த்துக்கும் – வள்ளுவர் கூறும் ‘அறம்’ என்ற கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார், நாவலர் நெடுஞ்செழியன்.   அவற்றில் சிலவற்றைக் காண்போம்: 1)            எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும்; பிறப்பைப் பொறுத்து ஏற்றத் தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள். 972) என்று கூறுவது வள்ளுவரின் ‘அறம்’. ஆனால், “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்.” (மனு. த.சா. அத்தி.1, சுலோகம் (100) என்றும், “சூத்திரன் பிராமணனைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு. த.சா. அத்தி.8, சுலோகம் : 270) என்றும் கூறுவது மனுவின் தருமமாகும். 2)            ‘ஒருவர் தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், தாம் மட்டும் தனியாக இருந்து, உண்ணுதல்...

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தங்களை ஒப்படைத்து எதிர்நீச்சலில் வாழ்ந்து காட்டிய அஞ்சாநெஞ்சன் அழகிரி குறித்த வாழ்க்கைச் சுருக்கம். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில், தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி! இவரது பெயருக்கு முன்பு பட்டுக் கோட்டை என்று அடைமொழி இருந்தாலும், இவரது சொந்த ஊர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள காருகுறிச்சி ஆகும். இவரது பெற்றோர் வாசுதேவ நாயுடு – கண்ணம்மாள், தந்தையார் வாசுதேவ நாயுடு பட்டாளத்தில் சுபேதாராகப் பணியாற்றி விட்டுப் பின்னர் காவல் நிலையத் தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) வேலை பார்த்தவர். அழகர்சாமி பசுமலையில் நான்காவது படிவம் (9ஆம் வகுப்பு) வரை படித்தவர். அதன் பிறகு, பட்டுக்கோட்டையில் அந்நாளில் நீதிக்கட்சியில் புகழ்பெற்ற வழக்கறிஞராய் இருந்த வேணுகோபால் நாயுடு என்பவரின் பரிந்துரையின் பெயரில் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகச் சில காலம் பணியாற்றினார். அந்த பாங்கியில் வேலை பார்த்த பார்ப்பன மேலாளர்க்கும் இவர்க்கும் ஏற்பட்ட...

கள்ள மவுனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள் ஸர்மிளா ஸெய்யித்

இலங்கை அய்.எஸ். குண்டுவெடிப்புப் பயங்கரவாதத்திலிருந்து பாடம் பெறுவார்களா? அது 2002 என்று நினைவு. எங்கள் ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு, பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிட வில்லை. வீடு வீடாகச் சென்று ஆன்டனாக்களை உடைப்பது, சிடி விற்கும் கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது. அடுத்து, கறுப்பு ஹபாயாக்களையும் நீண்ட அங்கிகளையும் கொண்டு வந்து ‘இதுதான் இஸ்லாமிய உடை’ என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகப் படுததினார்கள். ‘எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்களெல்லாம் இதைத்தான் அணிகிறார்கள். இது எங்கள் கலாச்சாரம்’ என்று ஏற்பதற்குப் பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாது காப்பான கவுரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச் சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக் கழகம் செல்லும் மாணவி களும் கறுப்பு...

முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்! பாத்திமா மாஜிதா

இலங்கையில் ‘அய்.எஸ்.’ பயங்கரவாதம் நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு எதிர் வினையாக இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் எழுதிய கட்டுரை. வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடை பெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம். கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் (20 ஆண்டுகள்) முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தது. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம், காபிர் என்ற பிரிவினைப் போக்கை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்திவிட்டது. அன்று நாம் சாப்பிட்ட நாரிசா சோறு, பராத் ரொட்டி போன்ற எல்லாவற்றையும் ஹராம் என்ற...

இஸ்லாம் அறிவியல் மதமா? ஃபாரூக் நினைவு நாள் சிந்தனை

மதவெறிக்கு உயிர்ப் பலியான கழகத் தோழர் ஃபாரூக் நினைவு நாளில் நிகழ்த்தப்பட்ட உரை இது: மறைந்த தோழர் பற்றி சில தகவல்களை கூற வேண்டும். எனக்கு முன்னால் பேசியவர்கள் ஃபாருக் கொல்லப்படது மற்றும் குற்றவாளிகளினுடைய மனநிலை பற்றியெல்லாம் கூறினார்கள். எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது, ஃபாருக்கை வெறும் நான்கு அல்லது பத்து நபர்கள் மட்டும் கொன்றிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் தொடர்பு இருந்திருக்கவேண்டும்  என்ற சந்தேகத்தை நான் ஆரம்பத்திலிருந்தே எழுப்பி வந்துள்ளேன். நீண்ட நாட்களுக்கு பின் தான் அது உண்மை எனத்  தெரிந்தது. எனக்கு கிடைத்த தகவல்படி அதற்கு பின்னால் எந்த அமைப்பு இருந்தது என்பதை கண்டுபிடித்து விட்டோம். காரணம் ஊழல் செய்தவனை தகுந்த ஆதாரத்துடன் சொன்னால்தான் உண்மை வெளியே வரும் இல்லாவிட்டால் ஊழல் செய்தவன், செய்யாதவன் என்றாகிவிடுவான் அது போல வெளிப்படையான ரகசியம் என்ற அடிப்படையில்தான் இன்றைக்கு இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. சமீபத்தில்...

பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா? செ. கார்க்கி

தமிழருடைய இனமானம் காக்கப்படவேண்டும் என்று போராடிய பெரியார், நவீன கருத்துகளுடைய ஒரு சிந்தனைத் தொகுப்பாக விளங்கினார். அவர் பழம் பெருமைக்குள் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலே ஒரு உரையாடல் தொடங்கியிருக் கிறது. பெரியார் தமிழுக்கு எதிரி, தமிழருக்கு எதிரி, தமிழ் நாட்டுக்கு எதிரி போன்ற கருத்துகள் பேசு பொருளாகி இருக்கின்றன. அதாவது ஒரு நாடு என்றால் என்ன? தேச மென்றால் என்ன? அந்த தேசத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற பொது மொழி என்றால் என்ன? இவையெல் லாம் தமிழர்களுடைய சங்க இலக்கியங்களிலிருந்து தேடிப் பிடிக்கக் கூடியவை அல்ல. அல்லது தமிழர்களுடைய பழையப் புராணங்களிலிருந்தும் பழைய இலக்கியங்களிலிருந்தும் பெறக்கூடிய செய்திகள் அல்ல. அவை மனிதர்களுடைய நவீன கால போராட்டங்களிலிருந்து, கடந்த முன்னூறு ஆண்டுகளில் நடந்தேறிய போராட்டங்களி லிருந்து பெறப்பட்ட கருத்து களும் நடைமுறைகளும் சனநாயக பொறிமுறைகளு மாகும். அந்த வகையிலே இவற்றுக்கெல்லாம் எந்த பொருளும் தெரியாதவர்கள் தான் பெரியாரைத் தமிழ்நாட் டுக்கு எதிரியென்று சொல்லிக்...

வடநாட்டார் ஆதிக்கம்

வடநாட்டார் ஆதிக்கம்

தமிழகத்தில் நடுவண் அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மாநிலத்தவர் குறிப்பாக வடநாட்டுக்காரர்கள் ஏராளமாகக் குவிக்கபட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் வலிமையான போராட்டங்கள் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு மொழி பண்பாடு இனங்களின் கூட்டமைப்பான இந்திய துணைக் கண்டத்தில் மொழி வழி மாநிலப் பிரிவினருக்குப் பிறகு அரசுகளின் இறையாண்மை காக்கப்படவேண்டும். அரசியல் சட்டமே இந்தியாவை அரசுகளில் ஒன்றியம் என்று தான் (ருniடிn டிக ளுவயவநள) வரையறுக்கிறது. அதன் காரணமாகவே நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கத்தோடு வேலைவாயப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. 145 மத்திய அரசு நிறுவனங்களுக்கான பதவிகள் மத்திய தேர்வாணை யத்தால் 7 மண்டலங்கள் 2 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்ட முறைகளை மாற்றி அகில இந்தியத் தேர்வுகள் வழியாக தோந்தெடுக்கப்படும் முறைக்கு மாற்றப்பட்டதால் மாநில பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வடநாட்டுக்காரர்...

வெளிவந்து விட்டது ‘நிமிர்வோம்’ –  மே 2019 இதழ்

வெளிவந்து விட்டது ‘நிமிர்வோம்’ – மே 2019 இதழ்

தலையங்கம் – வடநாட்டார் ஆதிக்கம் பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா? ‘அய்.எஸ்.அய்.எஸ்.’ – ‘இந்து சேனை’களின் வெடிகுண்டு கலாச்சாரம் இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகிரி இராமன் அயோத்தியில் பிறந்தானா? செம்மொழித் தமிழ் மீது நஞ்சுக் கக்கும் நாகசாமி (2) காதலில் கவனம் தேவை! லெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை! மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 16052019 இதழ்

மோடி-அம்பானி-அதானி கூட்டு களவாணிகள்

மோடி அரசாங்கம் பெரும் கார்ப்பரேட்டு களுடன் சேர்ந்து கூட்டு களவாணி முதலாளித்துவம் அமலாக்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று! குறிப்பாக தனது வெளிநாடு பயணங்களின் பொழுது அதானிக்கும், அனில் அம்பானிக்கும் இலாபம் கொழிக்கும் பல ஒப்பந்தங்களை மோடி நேரடியாகவே உருவாக்கித் தந்தார். அதன் விவரங்கள்:   இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைக்கான ஆதாரங்கள்: புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ்கள் ‘பிரண்ட் லைன்’ னுளைஅயவேடைiபே ஐனேயை – ஹ குடிரச லுநயச சுரடந ‘தி வொயர்’ ‘தி பிரின்ட்’ ‘மோடி மாயை’ – சவுக்கு சங்கர் அ. மார்க்ஸ் இணைய கட்டுரைகள் எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி ‘கேரவான்’ ஆங்கில நாளேடுகள் – இணையங்கள் நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்

பாதுகாப்புத் துறையிலும் படுதோல்விகள்

பிப் 19, 2019 – The HIndu நாளிதழில் பாதுகாப்புத்துறை ஆய்வறிஞர் ஹாப்பி மோன் ஜேகப் தரும் சில முக்கிய தகவல்கள்: நம் இந்திய ஜவான்கள் 40 பேர்களைக் கொன்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் – ஏ- முஹம்மட் (JeM) தீவிரவாதி அடில் அஹமட் தர் (22) எனும் இளைஞன் பாக் தீவிரவாதி அல்ல. அவன் உள்ளூர் காஷ்மீரி. பயன்படுத்தப்பட்ட வாகனமும் உள்ளூர் வாகனமே. காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் இந்திய அரசு, இராணுவம் ஆகியவற்றின் மீதான வெறுப்பு இன்று அதிகரித் துள்ளது. கடந்த நாலரை ஆண்டுகளில் இந்த அந்நியப் படல் அதிகரித்துள்ளது கவனத்துக்குரியது. காங்கிரஸ் ஆட்சியின்போது 2013ல் உள்ளூர் இளைஞர்களில் வெறும் 6 பேர்கள் மட்டுமே தீவிரவாதப் பாதையை நோக்கிச் சென்றனர். அடுத்த நான்காண்டுகளில், அதாவது 2018ல் இந்த எண்ணிக்கை 200 ஐ எட்டியது. நரேந்திர மோடி அரசு அதிகாரத்திற்கு வந்த இந்த நாலரை ஆண்டுகளில் தாக்குதல் நிறுத்த...

கவிஞர் பழனி பாரதி – பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா!

  விவசாயிகளுக்கு ‘வாய்க்கரிசி’ போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு ‘சவத்துணி’ நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு ‘நெற்றிக்காசு’ வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரைக் கொன்று கொன்று ‘மனிதக்கறி’ உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் ‘கோவணத்தைப் பிடுங்கி’ இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் புதிய இந்தியா மருத்துவமனைகளில் ‘மழலைகளின் மூச்சறுத்து’ வீடுகளில் ‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான் புதிய இந்தியா மாநிலக் கல்வி உரிமை பறித்து சமூகநீதி புத்தகம் ‘கிழித்து’ உலக மூலதனத்துக்கு விசிறி விடுவதுதான் புதிய இந்தியா பெண்களின் ‘தீட்டுத்துணிக்கும்’ வரிவிதித்து பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான் புதிய இந்தியா செத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா. நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்

சிந்தனையாளர்கள் மீது பாய்ந்த அடக்குமுறைகள்

புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் பரிஷத்’ எனும் நிகழ்ச்சியை நடத்தினர். பேஷ்வா அரசை எதிர்த்து தலித் படை ஒன்று வெற்றிபெற்றதைக் கொண்டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர். இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி சென்ற ஜூன் 2018இல் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்...

மோடியின் ஆணவமும் – ஜெட்லியின் திறமையின்மையும்

பொருளாதாரத் துறையில் மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும் இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார். தனக்குப் பதவி அளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன அருண்ஜேட்லிக்கு நிதித்துறை மட்டுமின்றி மேலும் மூன்று துறைகளின் பொறுப்பை (ஆக மொத்தம் 4 துறைகள்) அளித்த கடுப்பில் சின்ஹா இதை எல்லாம பேசியபோதும் அவர் வைத்த விமர்சனங்கள் முற்றிலும் சரியானவை. பொருளாதாரம் போன்ற முக்கியமான துறையின் அமைச்சருக்கு மேலும் இரண்டு மூன்று துறைகளின் பொறுப்பை அளிப்பது என்பதெல்லாம் மோடியின் எதேசாதிகாரத் தன்மைக்கு மட்டுமல்லாமல் திறமை இன்மைக்கும் சான்றாக அமைந்தது. மோடி அரசின் திறமை...

அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்

சோராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது ஜூலை 2010இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில், இந்தக் கொலையின் மூளையாகச் செயல்பட்டவர் அமித் ஷா என்று குறிப்பிட்டிருந்தது. ஏற்கெனவே இவ்வழக்கின் புலனாய்வு நடந்து கொண்டிருந்தபோது,சாட்சிகளைக் கலைக்க அமித் ஷா மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணையை குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், செப்டம்பர் 2012இல் இவ்வழக்கை மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றியது. மே 2014இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றார். ஓரிரு மாதங்களில் அமித் ஷா பா.ஜ.க. தலைவரானார். அதன் பின் இந்த வழக்கு தலைகீழ் மாற்றங்களைக் கண்டது. அமித் ஷா மீதான வழக்கை ஜேடி உத்பத் என்ற நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு ஒருமுறைகூட அமித் ஷா ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்கள் எப்போதும் அமித் ஷாவுக்கு...

காலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை

மோடி ஆட்சி பல இலட்சம் காலியாக உள்ள பதவிகளை நிரப்பவே இல்லை. அரசு தந்த புள்ளி விவரங்களே இதை ஒப்புக் கொள்கின்றன. மருத்துவ சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (All India Institute of Medical Science), உயர் கல்வி நிறுவனங்களில் 4089 புதிய பதவிகள் உருவாக்க அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், போபால், புவனே சுவர், ஜோக்பூர், பாட்னா, ரெய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கழகங்களில் 20,221 பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பணி இடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சுகாதார நலத் துறை அறிக்கை கூறுகிறது. மத்திய மனித வளத் துறை அமைச்சகத்தின் கீழ் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் விரிவுரையாளர்கள் உள்பட 17,092 பதவிகளை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் நிரப்பப்பட்ட இடங்கள் 5606 மட்டும்தான். 2018 ஏப்ரலில் மனித வளத்...

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிக்கிறார்கள்

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிக்கிறார்கள்

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்காரர்களுக்கு வாரி கொடுத்ததை மறக்க முடியுமா? 2013 முதல் 2016 வரை மத்திய அரசு தேர்வாணையத்தில் உருவாக்கப் பட்ட பணியிடங்களில் தமிழ்நாட்டில் பணிகளில் அமர்த்தப்பட்ட வடநாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 1988 பேர் தமிழர் களுக்குக் கிடைத்தது 110 பணிகள் மட்டுமே. (6 சதவீதம்) பீகார் – இராஜஸ்தான் மாநிலங்களின் பயிற்சி நிறுவனங்கள் தேர்வாணையத்திடம் ‘கள்ளக் கூட்டு’ வைத்து தமிழ்நாட்டுக்குள் முறைகேடாக வடநாட்டுக்காரர்களை வேலைகளில் திணித்ததை மறக்க முடியுமா? – இப்படி முறைகேடாக சென்னை வருமான வரித் துறையில் வேலைக்கு வந்த 3 வடநாட்டுக்காரர்கள் கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2014ஆம் ஆண்டு மத்திய தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வட மாநிலத்துக்காரர்கள் இலஞ்சம் கொடுத்து தேர்வில் பெற்றி பெற்றது கண்டறியப்பட்டு, பிறகு தேர்வே இரத்து செய்யப்பட்டது. அஞ்சல் துறையையும் விட்டு வைக்கவில்லை. கடைநிலை ஊழியர் களுக்கான தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே நடத்தி மாநில மக்களுக்கு வேலை...

மத்திய அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சுகள்

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் மோடி அமைச்சர்களின் விஷம் கக்கும் பேச்சுகளின் ஒரு தொகுப்பு. மகேஷ் ஷர்மா 2015ஆம் ஆண்டில், இந்தியா டுடே தொலைக் காட்சியுடனான ஒரு நேர்காணலின் போது, மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றிப் பேசும்போது, “முஸ்லிமாக இருந்தபோதும்” அவர் ஒரு “சிறந்த மனிதர்” என்றும், “தேசியவாதி” என்றும், “மனித நேயமுள்ளவர்” என்றும் சொன்னார். அப்பட்டமான இந்த இனவாதக் கருத்தைச் சொன்னபோதும் – அதுவும் இந்தியா மிகவும் நேசிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர்களில் ஒருவருக்கு எதிராகச் சொன்னபோதும் – பதவி நீக்கம் செய்யப் படுவது இருக்கட்டும், அரசில் இடம்பெற்றுள்ள மூத்த தலைவர்களால் அவர் கண்டிக்கப்படக்கூட இல்லை. அனந்த் குமார் ஹெக்டே 2016ஆம் ஆண்டில், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான மத்திய அமைச்சர், அனந்த் குமார் ஹெக்டே, “உலகில் இஸ்லாம் இருக்கும் வரையில், தீவிரவாதம் இருக்கும். இஸ்லாம் மதத்தை...

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

மீத்தேன் திட்ட செயல்பாட்டுக்கான அனுமதியை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால் காவிரி டெல்டாவில் போராட்டங்கள் அடங்கியிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற இன்னொரு வடிவில் இயற்கை எரிவாயு எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் பெயர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என நெடுவாசல் பகுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த திட்டம் மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்போது மோடி அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி 760 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் படிந்துள்ள மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எரிவாயுவை வெளிக்கொணரும் வகையில் காவிரிப் படுகையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அளித்திருந்தது மத்திய அரசு....