வினா விடை

• ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒன்றிய ஆட்சி திட்டம் – செய்தி
ஒரே ஜாதி, ஒரே மக்கள் என்ற திட்டத்தை எப்போது கொண்டுவர போறீங்க..
• அண்ணாமலை பிராமணர்களை புறக்கணிக்கிறார் – எஸ்.வி.சேகர்
அப்படியா, விடாதிங்க; சத்ரு சம்ஹார யாகம் நடத்துங்க, நல்ல பலன் கிடைக்கும்.
• நெடுஞ்சாலை திட்டத்துக்கு கூடுதல் செலவு ஆகியுள்ளது என்று தான் சி.ஏ.ஜி அறிக்கை
கூறுகிறது. அது ஊழல் அல்ல–- அண்ணாமலை
அந்த கூடுதல் செலவுக்கே காரணம் ஊழல் இல்லையா என்பதுதான் கேள்வியே?
• சனாதன தர்மத்தை எதிர்க்க எதிர்க்க அது வளரும் – தமிழிசை
அப்படியா, சனாதன தர்மம் மாறவே மாறாததுன்னு சொன்னீங்க, இப்ப எப்படி வளரும்.
• திராவிட கட்சிகள் எனது பங்காளிகள், எதிரி அல்ல – சீமான்
பயப்படாதிங்க சீமான், அவ்வளவு சீக்கிரம் கைது செய்யமாட்டாங்க.
• நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் எனக்கு கோயில் கட்டினார்கள். அதுதான்
சனாதன தர்மம் – குஷ்பு
மசூதி கட்டியிருந்தால் இடிச்சிருப்பாங்க மேடம்

விடுதலை இராசேந்திரன்
பெரியார்முழக்கம் 07092023

You may also like...