வட்ட மேஜை முடிவு
1920-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் வழங்கின போது அதிலும் முன்னேற்றமான சீர்திருத்தம் வழங்கும் விஷயத்தில் “ஒரு 10 வருஷகாலம் பொறுத்து பிரிட்டிஷ் பார்லி மெண்டினால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதை இந்தியாவுக்கு அனுப்பி அதன் மூலம் இந்தியரின் தேவையையும் தகுதியையும் விசாரித்தறிந்து அதற்குத்தகுந்ததான அரசியல் முன்னேற்றம் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தபடியே 1929ல் ஒரு கமிட்டியை அதாவது சைமன் கமிட்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்தப்படி அனுப்பப்பட்ட கமிட்டியை காங்கிரஸ் என்னும் பெயரால் ஒரு கூட்டம் பகிஷ்காரம் செய்த தாய் காண்பித்தாலும் மற்றபடி இந்தியாவிலுள்ள எல்லாப் பொது ஸ்தாபனங் களும், சமூக சமய ஸ்தாபனங்களும், மேலும் இந்திய ஜனப்பிரதிநிதி களடங்கிய ஸ்தலஸ்தாபனங்களாகிய தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளும், அரசியல் நிர்வாக ஸ்தாபனங் களாகிய மாகாண சட்டசபை, இந்தியா சட்டசபையாகிய ஸ்தாபனங்களும் பெரிதும் வரவேற்று உபசரித்து தங்கள் குறைகளையும் கஷ்டங்களையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லி மேற்கொண்டு அளிக்கப்படும் சுதந்திரங் களை நிர்வகிக்கும்...