Tagged: வினா விடை

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

பிரதமர் ஆகும் கனவு எனக்கில்லை என்று கூறிய மோடி –  பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார்.            – செய்தி பிரதமர் வேட்பாளராகும் கனவாவது நிறைவேறட்டுமே என்ற நல்ல நோக்கம் தான். வினாயகன் சிலைகளை ஊர்வலமாக எந்தப் பகுதி முதலில் எடுத்துச் செல்வது என்பதில் தாம்பரம், பல்லாவரம் பகுதி ஊர்வலக் குழுக்களுக்கு இடையே மோதல்; இரண்டு பேருக்கு கத்திக் குத்து. – செய்தி ஓகோ, ஜாதி-மோதல், மத-மோதல் களைக் கடந்து இந்துவும்-இந்துவும் மோதலா? ஓம் வினாயக நம!  குருவாயூர் கிருஷ்ணன் கோயிலிலுள்ள தங்க நகை இருப்புக் குறித்து அரசுக்கு தகவல்  தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லை.                      – தேவஸ்வம் போர்டு அறிவிப்பு அப்படியா? நகை திருட்டுப் போனால் போலீசில் தகவல் கொடுக்காமல் நேரடியாக போலீஸ் மோப்ப நாய்க்கு அழைப்பு விடுவீர்களோ?  குஜராத்தில் – வினாயகர் சிலைகளை கரைப்பதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றபோது...

வினா… விடை…!

வினா… விடை…!

ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுவோம்.                           – விஜயகாந்த் அந்த ஃபீனிக்ஸ் பறவையே உங்கள் கட்சியைப் போல் தான் சார்; அப்படி ஒன்று இல்லை. திருட்டுப்போய் கைப் பற்றப்பட்ட சாமி சிலை களை அடையாளம் காட்டினால் அந்தந்த கோயில்களிடம் ஒப்படைக்கப்படும்.                 -காவல்துறை அறிவிப்பு கடவுளைக் கண்டுபிடித்தது காவல்துறை; கடவுளை அடையாளம் காட்டுபவன் மனிதன்; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை. திருப்பதி ஏழுமலையான் கருவறை கோபுரத்துக்கு மேலே விமானங்கள் பறப்பது ஆகமத்துக்கு எதிரானது. – திருப்பதி தலைமை அர்ச்சகர் காக்கா, குருவி எல்லாம் பறக்குறதுக்கு ஆகமம் அனுமதிக்குதுங்களா… கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. திருவாரூர் தியாகராஜ சாமி தேரில் பவனி வந்தார்.- செய்தி அப்படியே மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண் டிருப்பாரே… பெற்றிருப்பார். மக்கள் பிரதிநிதிக்கு அதுதான் அழகு! டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்து மோடி பட்டம் வாங்கினாரா என்ற தகவலை வெளியிட முடியாது; அது பாதுகாக்கப்பட வேண்டிய இரகசியம்.   – பல்கலைக்கழகம் தகவல் இந்தியாவின்...

வினா… விடை…

வினா… விடை…

‘நோட்டு’அறிவிப்பால் – திருப்பதியில் பக்தர்கள் வருகை பாதியாக குறைந்தது. – திருப்பதி தேவஸ்தானம் கவலை கவலைய விடுங்க சார்; உண்டியலில் காணிக்கை போட்டால் உச்சவரம்பில்லாமல், புதிய ரூபாய் நோட்டுகளை மாத்தலாம்னு ஒரு அறிவிப்பை விட்டுப் பாருங்க கூட்டம் பிச்சிக்கிட்டு நிக்கும்! பெரியார் முழக்கம் 17112016 இதழ்

வினா… விடை…!

வினா… விடை…!

காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் 24 இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படுகிறது.          – செய்தி அப்படியே, ஆகமங்கள் ஒழுங்கா பின்பற்றப்படுதான்னு கண்காணிக்கிற காமிராவப் பாத்து வாங்குங்க!   திருமலையில் முகூர்த்த நாள்களில் இனி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும்.                – திருப்பதி தேவஸ்தானம் தகவல் ஜாதி மறுப்பு திருமணத்துக்கு அனுமதி உண்டா? ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா? கேட்டு சொல்லுங்க…   ‘ஆன்மிக குரு’ காஞ்சி ஜெயேந்திரர் பிறந்த நாள் விழாவில் அமித்ஷா, சு.சாமி, பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டு.     – செய்தி அப்படியே, ‘சாமி’களுக்கு ஒரு பிரச்சார வாகனத்தைத் தயார் செஞ்சு, 234 தொகுதி களுக்கும் அனுப்பி வைய்யுங்க! நல்லா ஓட்டு விழும்!   வேட்பாளர் பட்டியல் – தேர்தல் அறிக்கைகளை வெளியிட ‘வளர்பிறை’ தொடங்கும் ஏப்.7ஆம் தேதிக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.                       – செய்தி சந்திர மண்டலத்துலயும், தேர்தல் அறிவிச்சிருக்காங்களா? சொல்லவே இல்ல!   ஏழுமலையான் ‘பட்ஜெட்’டில் கணக்கில்...

வினா… விடை…!

வினா… விடை…!

உத்தரகாண்ட்டில் காவல் துறையில் பணியாற்றிய குதிரையின் காலை உடைத்தார் பா.ஜ.க. எல்.எல்.ஏ.                – செய்தி நல்லா வேணும்! திமிர் பிடிச்ச குதிரை! வாயைத் திறந்து ‘பாரத் மாதாக்கி ஜே!ன்னு’ சொன்னாத்தான் என்ன?   தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை.          – பா.ஜ.க. அறிவிப்பு ஆமாங்க.. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சியுடன்கூட கூட்டணி வைக்க மாட்டோம். தனித்தே நிற்போம்!   கூடலூரில் புலியை சிக்க வைத்துப் பிடிக்க இளம் பசுங்கன்றை பயன் படுத்தினர் வனத் துறை யினர்.              – செய்தி காட்டுக்குள்ளும் ‘இந்து துவேஷிகளா?’ விடக்கூடாது! இரத்தம் சிந்தியாவது இந்து தர்மம் காக்க காடு அழைக் கிறது, இந்துவே ஓடி வா!   அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்தை வெளி யிட தடையை நீக்க தமிழக அரசு தொடர்ந்த வழக்கு வெற்றி.          – செய்தி முதலமைச்சர் உரிமையை மீட்டுத் தந்த முதலமைச் சருக்கு கோடானுகோடி நன்றி என்று முதலமைச்சர் படத் துடன் உடனே ஒரு...

வினா… விடை…!

வினா… விடை…!

‘கிங்’ ஆக இருப்பதையே எனது கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். – விஜயகாந்த் ஜனநாயகம் – தேர்தல் – கூட்டணி எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டுட்டு மன்னராட்சிக்கு உங்களை போராட அழைக்கிறாங்க… புரியுதா, கேப்டன். 16,000 முன்னாள் இராணுவ வீரர்கள் ரிலையன்ஸ் அம்பானியின் சொத்துக் களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். – செய்தி அன்று ‘தேசத்தை’ காக்கும் பணி; இன்று தேசத்தின் ‘முதுகெலும்பை’க் காக்கும் திருப்பணி! என்னே தேசபக்தி…! முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் நானும் இருக்கிறேன். – சரத்குமார் வாங்க… வாங்க… உட்காருங்க… இதோ, டி. இராஜேந்தர், வந்துகிட்டே இருக்காரு… ஜெயலலிதா முதல்வராக, சபரிமலை அர்ச்சர்கள் தமிழகக் கோயில்களில் பூஜை. – செய்தி அதுதான், அய்யப்பனுக்கு பெண்கள் என்றாலே ஆகாதே; முதலமைச்சராக மட்டும் அனுமதிச்சிடுவானா? ஊழலே செய்யாத கட்சியுடன் கேப்டன் கூட்டணி அமைக்க பிரேமலதா கோயிலில் பிரார்த்தனை. – ‘தினமலர்’ விஜய்காந்துகிட்ட நேராக சொன்னா நிச்சயம் கேட்க மாட்டாருன்னு அவ்வளவு நம்பிக்கை. பாகிஸ்தான் பரோட்டா...

வினா… விடை…!

வினா… விடை…!

ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் ‘புனிதத்தை’ காப்பாற்ற வேண்டும். – பிராணப் முகர்ஜி சட்டத்துல இப்படி ஒரு பிரிவு… எந்த அத்தியாயத்தில் எந்தப் பிரிவில் இருக்குதுன்னு தெரியல்லையே, சார்? மகாமகத்துக்கு முழுக்குப் போட வரும் முக்கிய புள்ளிகளுக்கு தனி ஹெலிகாப்டர் தளங்கள். – செய்தி நியாயம்தான்; ‘பாவ மூட்டை’களை ஹெலிகாப்டரில்தான் சுமந்து வரவேண்டும். சத்தீஸ்கரில் நீதிபதி தோட்டத்தில் மேய்ந்த ஆடு கைது. – செய்தி சட்டப்படிதான் ஆடு புல் மேய வேண்டும்; சட்ட அறிவே இல்லாமல், இப்படி கண்டபடி ஆடுகள் மேய்வதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது! கும்பகோணம் ‘மகாமக’த்தில் காவல்துறையினர் பக்தர்களுக்கு தொல்லை தராமல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. – செய்தி ‘தொல்லை தராத பாதுகாப்பு’ வீட்டுக்குள்ளே குளியலறையில் முழுக்குப் போட்டுக் கொள்வதுதான்! மத நம்பிக்கைகள் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டு ஆராய முடியாது. – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அதேபோல, நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாவற்றையும் சட்டத்தின் அடிப்படையில் ஆராயக் கூடாதுன்னு சொல்லிடாதீங்கய்யா…...

வினா… விடை…!

வினா… விடை…!

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை தொடர்ந்து நீடிப்பார். – செய்தி ‘மேடம்’ பா.ஜ.க. தலைவராகக் கூட முடியும். ஆனால், அதன் தந்தை அமைப்பான ஆர்.எ°.எ°.சில் ஒரு உறுப்பினராகக்கூட முடியாது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் புகாரில் திருப்பதி தேவ°தான அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை. – செய்தி இதுவே எங்க தமிழ்நாடாக இருந்திருக்குமானால் ‘ஏழுமலையானிடம்’ முன் அனுமதி பெறாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சட்டம போட்டு தடுத்திருப்பாங்கய்யயா…. சீதையை காட்டிலேயே தங்குமாறு காரணமின்றி தண்டித்த இராமன், இலட்சுமணன் மீது நடவடிக்கைக் கோரி பீகார் நீதிமன்றத்தில் சந்தன்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. – செய்தி ‘இராமனு’க்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்காமலே தள்ளுபடி செய்யறது எந்த ஊரு நியாயங்க… ‘இராம’ பகவானை இப்படியெல்லாம் அவமரியாதை செய்யாதீங்க… அந்த காலத்து ‘அக்கிரகாரங்களை’ ‘தொல் பெருமை’ப் பகுதிகளாக அறிவித்து புதுப்பிக்கிறது கேரள அரசு. – ‘இந்து’ செய்தி...

வினா… விடை…!

வினா… விடை…!

உயர்நீதிமன்றத்தின் 1200 நீதிபதிகளில் பட்டியல் இனப் பிரிவினர் 18 பேர் மட்டுமே. – செய்தி இந்த 18 பேர் எப்படி வர முடிந்தது என்பதை கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனைப் போடாமல் இருந்தால் சரி. பழ. கருப்பையா அ.இ.அ.தி.மு.க.விலிருந்து நீக்கம். – செய்தி அந்த கட்சி வரலாற்றில் முதுகெலும்போடு எதிர்ப்புக் குரல் கொடுத்து அதற்காகவே நீக்கப்பட்ட முதல் மனிதர். எனவே இது ‘சாதா’ நீக்கமல்ல; ‘புரட்சி’ நீக்கம்! ‘கும்பகோணம்’ என்ற சொல்லுக்கு ‘ஏமாற்றுதல்’, ‘மோசடி’ என்று 19ஆம் நூற்றாண்டு ஆங்கில அகராதியில் கூறப்பட்டிருந்தது. – ‘தமிழ் இந்து’ செய்தி ‘கும்பகோணம்’ மடத்தை ஆதிசங்கரர் மடம் என்று சங்கராச்சாரி ஏமாற்றியதால் அப்படி ஒரு அர்த்தம் வந்தது என்பதே அர்த்தத்துக்குள் அடங்கியுள்ள அர்த்தம் என அறிக! நடிகை ஹேமமாலினி நாட்டியப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.70,000-த்துக்கு மகாராஷ்டிர பா.ஜ.க. அ ரசு வழங்கியது. – செய்தி இது ரொம்பப் பழசு....

வினா… விடை…!

வினா… விடை…!

தமிழக சட்டப் பேரவை நான்கு நாள் மட்டும் நடந்தது. – செய்தி போதும்; போதும்; வெள்ளப் பாதிப்பு காலத்தில் ‘மேஜை தட்டும் திருவிழாக்களை’ இதற்குமேல் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. அமித்ஷா – பா.ஜ.க. தலைவராக இரண்டாவது முறையும் நீடிப்பார். – செய்தி டெல்லி, பீகார் பேரவை தேர்தல் முடிவுகளையே தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்து சேர்த்து சீரிய தொண்டாற்ற நாமும் வாழ்த்துகிறோம்! ரோகித் வெமுலா ‘தலித்’ இல்லை. – பா.ஜ.க. கண்டுபிடிப்பு சரி; அப்படியே வச்சிக்குவோம். அவரு ஒரு ‘இந்து’ தானே; ஒரு இந்துவுக்கு ‘இந்து தேசத்தில்’ இந்த நிலை வரலாமா? கும்பமேளாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி. – உளவுத்துறை எச்சரிக்கை எனவே, கும்பமேளாவுக்கு முழுக்குப் போட வருவதை தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பக்தி செலுத்துமாறு பக்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறப்பு உணவுகளுடன் நடந்து வரும் இந்து கோயில் யானைகள் புத்துணர்வு முகாமுக்குள் ஊடுருவ முயன்ற காட்டுயானைகளை வனத்துறை விரட்டி அடித்தது....

வினா… விடை…!

வினா… விடை…!

பழனி கோயிலில் பக்தர் தூக்கு போட்டு தற்கொலை; 2 ஊழியர்கள் பணி நீக்கம். – செய்தி என்னுடைய சாவுக்கு பழனி முருகன் தான் முழு காரணம்னு அந்த பக்தர் கடிதம் எழுதி வச்சிருந்தாருன்னா, அப்ப யாரை பணி நீக்கம் செய்வீங்க… சென்னை அயனாவரத்தில் உள்ள கோயிலுக்குள் வழிபட வந்த இந்து முன்னணி பிரமுகரின் தங்க சங்கிலி திருட்டு. – செய்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவரும் தங்க நகை அணியக் கூடாது; பாதுகாப்புக்காக கவரிங் நகைகள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு தீர்ப்பை பெற்று விடலாமே! யோசிங்க…. ‘இராமாயணம்’ ஒரு புனித நூல்; அந்தப் பெயரை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு ஆனால், அரசியல் மற்றும் தொலைக்காட்சி வர்த்தகங்களுக்கு இராமாயணத்தைப் பயன்படுத்தலாம். இது ‘பழக்க வழக்கம்’ என்பதால் நீதிமன்றம் தலையிடவே முடியாது. இராமரின் தயவினால் ஆட்சிக்கு வந்த மோடி, உடனே இராமன் கோயில் கட்ட தேதி அறிவிக்க...

வினா… விடை…!

வினா… விடை…!

இனி நவீன உடையணிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர உயர்நீதிமன்றம் விதித்த தடை அமுலுக்கு வந்தது. – செய்தி ஏதோ பழக்கத்தின் காரணமா அப்பப்போ கோயிலுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்களையும் வரவிடாம தடுத்திட்டாங்க… இதுவும் நல்லதுக்குத்தான். இந்திய சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தேவை. – மோகன் பகவத் ‘இந்து’ சமூகம்னு உண்மையை சொல்றதுக்கு இவருக்கே வெட்கம்; அதனால திடீர்னு இந்திய சமூகத்துக்கு தாவிட்டாரு… கோயில் வழிபாடு என்பதே ஆகமம்தான்; சிலைகள் அல்ல. – ‘இந்து’ ஏட்டில் பார்ப்பனர் கடிதம் ஆக, ஆகமம் பின்பற்றப்படாத கோயில்கள், அங்கே சாமி சிலைகள் இருந்தாலும் கோயில்களே இல்லை. அப்படித்தானே? வேதங்கள், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றன. – திருப்பதியில் பிரணாப் முகர்ஜி பேச்சு அட, வேத காலத்திலேயே, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி நாடுகள் எல்லாம் வந்துருச்சா? சொல்லவே இல்ல! அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது. – இல. கணேசன் அரசியலமைப்பு...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

அமைச்சர்கள் – தலைவர்களின் குடும்ப வாரிசு களுக்கு தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் அனுமதிக்காது.       – ராகுல் அறிவிப்பு நல்ல முடிவு! அம்மா சோனியா, சகோதரி பிரியங்காவிடம் கலந்து ஆலோசித்தீர்களா, ராகுல்? மோடி எனக்கு சிறந்த நண்பர்.    – கலைஞர் ஆமாம்! திருவாரூரில் ‘முரசொலி’யை கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டபோது கலைஞரின் பேனாவில், மை நிரப்பிக் கொடுத்து எழுது எழுது என்று உற்சாக மூட்டிய நண்பர் ! ‘கருணை மனு’ குறித்து குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவில் எந்த மறுபரிசீலனைக்கும் இடமில்லை.    – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு இப்படி மொட்டையா சொன்னா எப்படி? அதாவது சோனியா விருப்பப்படி உள்துறை அமைச்சர் முடிவெடுத்து, அதை குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடும் அறிவிப்பில் உச்சநீதிமன்றமேயானாலும் தலையிடும் உரிமையே கிடையாது என்று விளக்கமாகச் சொல்லுங்க! அப்பத்தானே புரியும்! இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்; பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் தளபதி வி.கே.சிங் அழைப்பு.              – செய்தி...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அணியிலிருந்த மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அமைச்சர் சிதம்பரம் அணியில் சேர்ந்தார்.  – தினமலர் செய்தி இனி எதிர்காலத்தில் இளங்கோவன் அணி யுடன் கூட்டணியோ, தொகுதிப் பங்கீடோ கிடையாது என்று பேட்டி அளித்தாரா? தன்னை ஒரு டீக்கடைக்காரர் என்று கூறிக் கொள்ளும் மோடிக்கு, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய எங்கிருந்து பணம் வந்தது?  – கெஜ்ரிவால் கேள்வி இது என்ன கேள்வி? ‘சாமான்யன்’ மோடிக்கு, ‘சாமான்யர்’ அம்பானி உதவிடக் கூடாதா? மனிதாபிமானம் இல்லாமல் பேசக் கூடாது. திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணம் செய்த முதியவரின் கையை எலி கடித்ததால் ரயில் ஈரோட்டில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.    – செய்தி எல்லா இரயில்களிலும் எலிகளுக்காக நான்கு ஏ.சி. கோச்சுகளை தனியாக ஒதுக்கியிருந்தா, இந்தப் பிரச்சினை வந்திருக்காதுல்ல. ஒருபோதும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது.    – தா. பாண்டியன் ஆமாம்! விட்டுக் கொடுக்கவே கூடாது. அது சரி; நீங்கள்...

வினா… விடை…!

வினா… விடை…!

நகைகளாக பக்தர்கள் தந்த காணிக்கையை அரசின் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய தங்கக் கட்டியாக உருக்கினால் அது சாமி குத்தமாயிடும். – கோயில் நிர்வாகிகள் அச்சம் ரொம்ப சரி; அதேபோல உண்டியல்ல விழுற கள்ளநோட்டுகளையும் அப்படியே ஏத்துக்கணும்போல. இல்லாட்டி சாமி குத்தமாயிடும். பசுக்களை கொல்ல தடைவிதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம் அப்படி ஒரு அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்க வேண்டும் என்றால், பசு மாட்டுக்காக தனி ஆகமங்கள் இருக்க வேண்டும். திருவரங்கம் – ரெங்கநாதர் கோவிலில் ‘சொர்க்க வாசல்’ திறப்புக்குமுன் கதவு வாசலில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். – செய்தி எல்லாம் ஒரு பாதுகாப்புதான். எவராவது உண்மையிலேயே ‘சொர்க்கம்’ போயிட்டா, மீட்கணும்ல! மோடி இரஷ்ய பயணத்தின்போது, கூடங்குளத்தில் 5,6ஆவது அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும். – செய்தி அப்படியே கையோடு கையா முதலாவது அணுஉலை இயங்கு வதற்கும் ஒரு ஒப்பந்தம் போடுங்க… மறந்துடாதீங்க… காவல்துறை மீது உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கை...

வினா… விடை…!

வினா… விடை…!

வெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இ°லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள். – செய்தி அதெப்படி சுத்தமாகும்? ‘தர்ப்பை’யுடன் வேத மந்திரம் ஓதி தீட்டுக் கழித்தால்தான் உண்மையான சுத்தம் வரும்! பம்பாயில் அகமதா நகரில் பிளாட்பாரத்தி லிருந்த ஷானி சிலையை ஒரு இளம் பெண் தடையை மீறி வழி பட்டதால் கோயிலில் பூஜை நடத்தி தூய்மைச் சடங்குகள் நடந்தன. – ‘இந்து செய்தி இந்துப் பெண்களை புண்படுத்துறாங்கப்பா… இந்து முன்னணிக்காரங்களே, ஓடி வாங்க…. சீரிரங்கம், நாமக்கல், திருப்பூரில் தீமைகள் நடப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறி இந்துக் கோயில்களை இடித்துத் தள்ள உத்தரவிட்ட தொல்பொருள் துறை ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். – செய்தி இந்த ஆய்வாளருக்கு ‘பாரத ரத்னா’ விருதே தரலாம்! மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட முதியவர் முகம்மது அதிலாக் வாழ்ந்த பிஷாகா கிராமத்தில், கிராமம் தீட்டாகிவிட்டதை சுத்தப்படுத்த மாட்டு மூத்திரத்தைக் கொண்டு வீடுகளைக் கழுவினர். – ‘இந்து’ செய்தி மாட்டு சாணத்தையும்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

அரைகுறை ஆடைகளுடன் வரும் பக்தர்களை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. – மதுரை உயர்நீதிமன்றம்ஆணை ஆனால், அர்ச்சகர்கள் மட்டும் மேலாடை இல்லாமலேயே வரலாம்! அதுல நீதிமன்றம் தலையிட முடியாது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு. – இயக்குனர் ஆர்.எஸ். சுந்தர் அமைச்சர் நாராயணசாமி போயிட்டாரேன்னு கவலைப் பட வேண்டாம்; இதோ ஆர்.எஸ்.சுந்தர் வந்துட்டாருல்ல… பாரிசில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரியானாவில் வேதம் ஓதி ‘மகாயாகம்’. – செய்தி இனிமே சிரியாவுல நடக்குற தாக்குதலுக்கும் யாகம் நடத்து வீங்க போலிருக்கு. பீகார் தோல்வி: பா.ஜ.க.வை குறைகூறும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – அமைச்சர் கட்காரி தாராளமா எடுங்க… ஆனா அதிருப்தி தெரிவித்த பீகார் மக்களை ஒன்றும் செஞ்சுடா தீங்கய்யா. மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரில் 95 சதவீதம் பேர் இந்துக்கள். – முன்னாள் நீதிபதி சச்சார் உள்நாட்டுல எவரும்...

வினா-விடை!

வினா-விடை!

சமூகத்தில் நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியி லிருந்து வந்தவன். இதன் காரணமாக எனது வார்த்தையை தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறுகிறார்கள்.      – மோடி ஆகவே, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உருவாக்கிய இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி மோடி தனது சுயமரி யாதையைக் காப்பாற்ற உறுதி ஏற்பாராக! உச்சநீதிமன்றம் ‘ஜல்லிக் கட்டு’ தடை செய் துள்ளது குறித்து – கருத்து கூற விரும்பவில்லை.                 – கி.வீரமணி நியாயமான பேச்சு. அது குறித்து காளைகள் தானே கருத்து கூற வேண்டும். அவைகளின் கருத்துரிமையை நாம் பறிப்பது நியாயம் அல்ல. உடுப்பி கிருஷ்ண மடத்தில் ‘பிராமணர்’களுக்கு தனி இடத்தில் சாப்பாடும் போடும் ‘பங்கி பேதா’ முறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.  – செய்தி ‘ஓசி’ சாப்பாடுன்னாலும் ‘ஆச்சாரத்தை’ விட்டுடப்படாது, ஓய்! புகாரி, அஞ்சப்பர், பொன்னுசாமி ஓட்டல்களிலும் ‘பிராமணர்’ களுக்கு தனி இடம் கேட்டு ‘குல தர்மத்தை’க் காப்பாத்துங்கோ! அண்ணா உயிரியல்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

சகிப்புத் தன்மை குறைந்து வருவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணிக்கு பா.ஜ.க. போட்டி பேரணி – செய்தி எதிர்ப்புகளை சகித்துக் கொள்ளவே மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறாங்க, போல! நீதிமன்றத்தில் தமிழ் உரிமைக் கோரிய போராட்டத்தினால் நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல்துறைக்கு பதில் – மத்திய போலீஸ் படை வருகிறது. – செய்தி நீதிமன்றத்துக்குள் மட்டுமல்ல; நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் தமிழுக்கு இடமில்லை. இனி இந்திக்கார போலீஸ்தான்! வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்ய வரும் ஏழைகளிடம் இடைத்தரகர்கள் பணம் பறிக்கும் மோசடி நடக்கிறது. – ‘தினமலர்’ செய்தி ஆனா, முருகனுக்கு இடைத் தரகர்களாக இருக்கும் அர்ச்சகர்கள் மோசடிப் பற்றி மட்டும் பேச மாட்டீங்க. ஆர்.எஸ்.எஸ். சீருடையில் மாற்றம். இனி மூத்தவர்களுக்கு முழுக்கால் சட்டை. – செய்தி ஆக, முழுக்கால் சட்டையை ‘பாரத கலாச்சாரமாக’ ஒத்துக்கீட்டீங்க… பெரிய புரட்சி தான்! பீகாரில் பா.ஜ.க. தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள். – தேர்தல் பிரச்சாரத்தில்...

வினா-விடை!

வினா-விடை!

ஏழுமலையானுக்கு விசாகப்பட்டினத்தைச் சார்ந்த பக்தர், ரூ.30 இலட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுள்ள பாத கவசம் (செருப்பு) வழங்கினார்.   – செய்தி ஏழுமலையான் எந்தக் காலத்திலும் எழுந்து நடக்கவே போவதில்லை என்பதில் பக்தருக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை போலும்! அதனால்தான் ஒரு கிலோ எடையில் செருப்பு. 1967இல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த போது 41.10சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக சரிந்தது.     – ‘தினமணி’ செய்தி திவாலாகும் வங்கியைக் காப்பாற்ற முடியாது; இதுக் கெல்லாம் ரிசர்வ் வங்கியும் உதவி செய்யாது! அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர அன்னியநாடுகள் அல்ல.  – ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆமாம்! ‘அன்னிய முதலீடு’ பற்றி வெளிநாட்டுக் காரர்களுக்கு முடிவெடுக்க உரிமை கிடையாது; நாங்களே அந்த முடிவை தேசபக்தியோடு எடுப்போம்! தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.  – ஜி.கே. வாசன்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஆயுத பூஜை பண்டிகையில் 1000 கார்கள் விற்று மாருதி சுசுகி சாதனை. – செய்தி விற்பனை இந்துக்களுக்கு மட்டும் தானே? இல்லேன்னா சிவசேனாக்காரங்க கம்பெனிய நொறுக்கிடுவாங்க… மத ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம், அணுகுண்டைவிட ஆபத்தானது. – விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவரிடம் மனு சரியான கருத்து; ‘மதவாதப் பரவல் தடை’ ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வருவது குறித்து அவசரமாக ஆலோசிக்க வேண்டும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் அமைக்கப்படும். – தேவஸ்தானம் இதற்கெல்லாம் தனித் தனியா ‘ஸ்தல புராணங்கள்’ எழுதப்படுங்களா…? இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் ‘மதம்’ மாறுவதற்கு மறுத்த ‘பிராமணர்கள்’தான் இன்றைய தீண்டப்படாத மக்கள். – பா.ஜ.க. பேச்சாளர் பச்சோங்கர் சாஸ்திரி அப்படின்னா இன்றைய ‘பிராமணர்கள்’ எல்லாம் இஸ்லாமியர் காலத்துல ‘முல்லாக்களாக’ இருந்தவங்களா, சார்? இந்தியாவில் ‘வாடகைத் தாய்மார்கள்’ இந்தியர்கள் கருக்களையே சுமக்க வேண்டும். வெளிநாட்டினர் கருக்களை சுமக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு...