வினா… விடை…!

இனி நவீன உடையணிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர உயர்நீதிமன்றம் விதித்த தடை அமுலுக்கு வந்தது. – செய்தி
ஏதோ பழக்கத்தின் காரணமா அப்பப்போ கோயிலுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்களையும் வரவிடாம தடுத்திட்டாங்க… இதுவும் நல்லதுக்குத்தான்.

இந்திய சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தேவை. – மோகன் பகவத்
‘இந்து’ சமூகம்னு உண்மையை சொல்றதுக்கு இவருக்கே வெட்கம்; அதனால திடீர்னு இந்திய சமூகத்துக்கு தாவிட்டாரு…

கோயில் வழிபாடு என்பதே ஆகமம்தான்; சிலைகள் அல்ல. – ‘இந்து’ ஏட்டில் பார்ப்பனர் கடிதம்
ஆக, ஆகமம் பின்பற்றப்படாத கோயில்கள், அங்கே சாமி சிலைகள் இருந்தாலும் கோயில்களே இல்லை. அப்படித்தானே?
வேதங்கள், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றன. – திருப்பதியில் பிரணாப் முகர்ஜி பேச்சு
அட, வேத காலத்திலேயே, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி நாடுகள் எல்லாம் வந்துருச்சா? சொல்லவே இல்ல!
அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது. – இல. கணேசன்
அரசியலமைப்பு சட்டத்தையும் ‘ஆகம’மா மாத்திட்டாங்க போல!
‘இராமாயணம்’ என்ற புனித நூலை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது! – உச்சநீதிமன்றம்
அது பரவாயில்லை; அரசியலுக்குப் பயன்படுத்தலாம்ல… அதுபோதும்!

பெரியார் முழக்கம் 07012016 இதழ்

You may also like...