தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் 134வது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.9.2012 திங்கள் மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை வி.எம். தெரு, இலாயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறுகிறது. ச. சரவணன் தலைமையிலும், ப.கணேசன், கோ. தமிழரசன் முன்னிலையிலும், கி. இளைய சிம்மன் வரவேற்புரையிலும் நிகழ்ச்சி நடைபெறும். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இயக்குனர் மணிவண்ணன், வி.சி.க. கருத்தியல் பரப்புரைச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் உரையாற்றுகின்றனர். கி. முருகன் நன்றியுரை யாற்றுகிறார். தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிறைவில் மு. கலைவாணன் குழுவினர் வழங்கும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியமான ‘சந்திர மோகன்’ பொம்மலாட்ட நாடகம் நிகழ்கிறது. காலை 7.30 தொடங்கி 9 மணி வரை தோழர்கள் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பர். 10 கிளைக் கழகங்களில் கழகத்தின் பெயர்ப் பலகைகள் திறக்கப்படுகின்றன. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்...
பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’ நாளேடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் பெரியார் பற்றிய கட்டுரையை கேட்டிருந்தது. பொதுச் செயலாளர் எழுதிய கட்டுரை செப்.19 இதழில் மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நாதசுரக் குழாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாக இருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்கு தொண்டைகுரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும். – பெரியார் அரசு மக்களுக்கு வழங்கிடும் ‘இலவசங்கள்’ தேவைதானா? என்ற சூடான விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் சமூகத்தையே அரித்துக் கொண்டிருக்கிற ஒரு ‘இலவசம்’ குறித்து விவாதங்கள் நடப்பது இல்லையே! மக்களின் பொதுச் சிந்தனைக்குள் கொண்டு வரப்படாத அந்த ‘இலவசம்’தான் ஜாதி; இந்த ஜாதியை எவரும் தியாகம் செய்தோ, உழைத்தோ, விலை கொடுத்தோ வாங்குகிறார்களா என்ன? இந்த ‘இலவசம்’ ஒரு சமூகத்தில் மனிதர்களின் நிலையை தீர்மானிக்கிறது. இந்த இலவசம் சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் கலாச்சார...
செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.
சென்னையில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா,கொடியேற்றுதல் நிகழ்சிகள். கழக தோழர்களுடன் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு ஊர்வலமாக அண்ணா சாலை, தியாகராய நகர், ஜப்ரகான் பேட்டை, ஆலந்தூர், பெசண்ட் நகர் வண்ணாந்துறை ஆகிய இடங்களில்..