Tagged: பாரூக்

தோழர் பாரூக் கோவையில் வரவேற்பு

75 நாள் சிறை வாசம் 23 சசிகுமார் கொலையினால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் கடைக்கு சென்ற திவிக தோழர் பெயர் பாரூக் என்ற ஒற்றை காரணத்திற்காக நள்ளிரவில் கைது செய்ப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அடுத்த சிலதினங்களில் தோழர் மீது குண்டாஸ் பாய்ந்தது கடந்த மாதம் 8 ம் தேதி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சென்னையில் அறிவுரை குழுமத்தில் வாதாடினார் தோழருக்காக மட்டும் அல்லாமல் கோவையில் நடந்த கலவரத்தை அப்பட்டமாக்கினார் உடைந்தது குண்டாஸ் அனைவர் மீதும் தோழர் கலையரசன் வழக்குறைஞரால் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பினையில் விடுதலை பெற்றார் தலைவருடன் தலைமைகழக அமைப்பாளர் இரத்தினசாமி தோழர்கள் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட தோழர்கள், ஈரோடு தோழர்கள் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, கவிஞர்கனல்மதி, திருப்பூர் முகில்ராசு, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருந்த தோழர் நங்கவள்ளி கிருஷ்னன் ,திருசங்கோடு வைரவேல் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் வழக்கறிஞர்...

கழகத் தோழர் பாரூக் விடுதலை !

கழக தோழர் முகமது பாரூக் அவர்கள் மீது புனையப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரை குழு (Advisory board) 30.11.2016 அன்று தள்ளுபடி செய்து பிறப்பித்துள்ள ஆணை ! குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட கழக தோழர் பாரூக் அவர்கள் இன்று 07.12.2016 சேலம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தோழருக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கறுப்பாடை அணிவித்து வரவேற்றார். கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,சேலம் மாவட்ட செயலாளர் தோழர் சேலம் டேவிட்,கோவை மாவட்ட அமைப்பாளர் நேருதாஸ்,சூலூர் பன்னீர் செல்வம்,நங்கவள்ளி கிருஷ்ணன் உள்ளிட்ட கழக தோழர்கள் நிர்வாகிகள் தோழர் பாரூக் அவர்களுக்கு சேலம் சிறைவாயிலில் வரவேற்பளித்தனர்.

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கோவையில் 22.9.2016 அன்று இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் டி.சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை நகர் முழுதும் கலவரம், தீ வைப்பு, உடைமைகளை அழிப்பது என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள். இதற்காக தமிழகம் முழுதுமிருந்தும்  ஆட்கள் அழைக்கப்பட்டனர். காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அப்போது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பாரூக், குழந்தைக்கு பால் வாங்க வந்தபோது கலவரக்காரர்கள் சூறையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. காவல்துறை ‘இந்து அமைப்பைச் சார்ந்த சிலரையும், இ°லாமியர்கள் சிலரையும் கணக்கு காட்ட கைது  செய்தது. அதில் பால் வாங்க வநத தோழர் பாரூக்கையும் கைது செய்து பின்பு அவர் மீது குண்டர் சட்டத்தையும் ஏவியது. அதைத் தொடர்ந்து குண்டர் சட்ட விதிமுறை யின் கீழ் நவம்பர் 8ஆம் தேதி சென்னையிலுள்ள அறிவுரை குழுமத்தின் முன்பு பாரூக் நேர் நிறுத்தப் பட்டார். குண்டர் சட்டத்தில்...

கழகத் தோழர் பாரூக் அவர்களின் சார்பாக கழகத் தலைவர் அறிவுரை கழகத்தில் வாதம் சென்னை 09112016

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரண ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரத்தின் போது, காவல்துறை சில இந்து முன்னணியினரை கைது செய்ததோடு, இந்து முன்னணியினரை சமாதானப்படுத்தும் நோக்கில் சில இஸ்லாமியரை கைது செய்தது . அதில் கோவையை சேர்ந்த பெயரில் மட்டுமே இஸ்லாமிய அடையாளம் உடைய இறை மறுப்பாளரான திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் “பாரூக் ” கையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது. இந்து அமைப்புகள் தந்த அழுத்தத்தால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிந்தது காவல்துறை. அவருக்கு வழங்கப்படும் சட்ட வாய்ப்பான அறிவுரை கழகத்தின் ( Advisory board) முன்பு ஆஜர் படுத்த , இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ” பாரூக் ” சார்பாக அவர் பக்க நியாயங்களை அறிவுரை கழகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் முன்பு எடுத்துரைக்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி “பாரூக்...

அறிவுரைக் குழுமம் முன் கழகத் தலைவர் வாதம் சென்னை 08112016

இன்று 08.11.2016 மதியம் 2 மணியளவில் அறிவுரைக் குழுமம் முன் கழக தலைவர் அவர்கள் நேரில் வாதுரைக்கிறார். கடந்த மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதையடுத்து கோவையில் இந்து மதவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். அந்த வன்முறை செயல்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத கழக தோழர் பாரூக் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தமிழக காவல் துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியுள்ளது. இவ்வழக்கின் மீதான அறிவுரை குழுமத்தின் விசாரணை இன்று 8.11.2016 மதியம் 2 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அவ்வமயம் நேரில் ஆஜராகி கழக தோழர் பாரூக் அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்.  

கோவை கழகத் தோழர் பாரூக்

கோவை கழகத் தோழர் பாரூக்

கோவை கழகத் தோழர் பாரூக்மீது குண்டர் சட்டமாம்! கோவையில் இந்து அமைப்புகளைச் சார்ந்த வன்முறையாளர்கள் கலவரம் – சூறையாடல்களை நடத்தியபோது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத்தோழர் குழந்தைக்கு பால் வாங்க வந்தார்; அவரை எந்தக் காரணமும் இன்றி காவல்துறை கைது செய்ததை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிட்டிருந்தோம். இப்போது அவர் மீது காவல்துறை குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. இரண்டு இஸ்லாமிய தோழர்கள் மீது மட்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருவரும் எந்த இஸ்லாமிய இயக்கத்தோடும் தொடர்பில்லாவர்கள். ஒருவர் பாரூக், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்; மற்றொரு தோழர் எந்த இஸ்லாமிய இயக்கத்தோடும் தொடர் பில்லாதவர். காவல்துறையின் இந்த அநீதிக்கு கழகம் வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது. பெரியார் முழக்கம் 06102016 இதழ்