Tagged: நம்புங்க-அறிவியல

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! – துண்டறிக்கை

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துண்டறிக்கைகான செய்திகள் ! நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்! ஒவ்வொரு நாளும் பத்திரிகைளைப் புரட்டினால்…. தொலைக்காட்சிகளைப் பார்த்தால்…. நெஞ்சம் பதறுகிறது.! அப்பப்பா…. நம்முடைய மக்களில் பலரும் இந்த அறிவியல் யுகத்திலும் மூடநம்பிக்கைகளில் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? • சாமியார்களிடம் ஏதோ ‘மந்திர சக்தி’ இருப்பதாக நம்பி ஏமாந்து நிக்குறாங்க… • பிறக்கப் போவது பெண் குழந்தைகள் என்றால், அந்த மழலையை கருவிலேயே அழிக்கிறாங்க… 10 வயதுலேயே 30, 40 வயது ஆணுக்கு நம்ம பெண் குழந்தைகளை கல்யாணம் கட்டி அவுங்க வாழ்க்கையை பாழடிக்கிறாங்க. • “இந்த ‘சனியன்’ பொறந்ததுலேயிருந்து குடும்பமே விளங்காமல் போச்சு”ன்னு சோதிடக்காரர்கள் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளையே சாகடிக்கிறாங்க. • குடும்பத்தின் பிரச்சினைகள்; மன அழுத்தங்கள்; தங்களை கவனிப்பாரில்லையே என்ற ஏக்கம்; அச்சம்; இப்படி பல்வேறு உளவியல் காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளை...

நம்புங்க அறிவியலை … நம்பாதீங்க சாமியார்கள … சென்னை திவிக சுவர் விளம்பரங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் நம்புங்க அறிவியலை … நம்பாதீங்க சாமியார்கள … ” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை ” பயணத்திற்கு சென்னை மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் எழுதும் பணி துவங்கியது … மாவட்ட செயலாளர் இரா .உமாபதி தலைமையில் தோழர். விழுப்புரம் அய்யனார், தோழர். இருதயராஜ், தோழர். தமிழரசன், தோழர். இராவணன், தோழர். வேலு, தோழர் .ஆட்டோ தர்மா ,தோழர் இரா.செந்தில குமார், தோழர் பா.அருண், தோழர். இலட்சுமனன், தோழர். க.ஜெயபிரகாசு, தோழர். நாத்திகன் மற்றும் பல தோழர்கள் களப்பணியில் இரவு முழுவதும் …

அறிவியல் பரப்புரை பயண விபரம் நாள்வாரியாக

7.8.2016 சத்திய மங்கலம் அணி மாலை 6 மணி- சத்திய மங்கலம் – பயணத் துவக்கம், பொதுக் கூட்டம். சென்னை அணி காலை 9 மணி – இராயப்பேட்டை – துவக்கம்; காலை 10 மணி – போரூர்; காலை 11 மணி – பூவிருந்தவல்லி; மாலை 4 மணி – திருப்பெரும்புதூர்; மாலை 5.30 மணி – காஞ்சிபுரம் – இரவு தங்கல். மயிலாடுதுறை அணி மாலை 6 மணி – மயிலாடுதுறை – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம். திருப்பூர் அணி இரவு 7 மணி – திருப்பூர் – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம்     8.8.2016 சத்திய மங்கலம் அணி காலை 10 மணி – தூக்க நாயக்கன் பாளையம்; மாலை 4 மணி – அந்தியூர் – மதிய உணவு; இரவு 7 மணி – குருவரெட்டியூர் – பொதுக்...

‘நம்புங்க-அறிவியல; நம்பாதீங்க-சாமியார்கள’ – அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை’

4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி,‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’, ‘அச்சம் போக்கும் அறிவியல்பரப்புரை’ என்ற முழக்கத்தோடு, பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை தமிழகம் முழுதும் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணக் குழு புறப்படுகிறது. சத்தியமங்கலம் – சென்னை – மயிலாடுதுறை – திருப்பூரிலிருந்து 4 அணிகளும் தனித் தனி யாகப் புறப்பட்டு, மக்களிடம் அறிவியல் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளால் சமூகத்தின் பாதிப்புகளையும் விளக்கிப் பேசுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழிக்கும் பெண் சிசுக் கொலை, 18 வயது முழுமையடைவதற்கு முன்பே சிறுமிகளாக இருக்கும் பெண்களுக்கு ‘மரபு வழக்கம்’ என்ற பெயரால் நடத்தப்படும் இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் – பறிக்கப்படும் பெண்களின் உரிமைகள்; பெண்களிடம் அவர்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி கெடுக்கும் சாமியார்கள்...