Tagged: தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
ஜாதி மதவாத கூட்டு வன்முறைக்கு எதிரான தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 11032017
பொள்ளாச்சி அருகே காளியப்பன் புதூரில் இந்து மத சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட சாதி – மதவாத கூட்டு வன்முறைக்கெதிரான தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் 11032017 மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.. *தமிழக வாழ்வுரிமை கட்சி – நிறுவனர் தோழர் தி.வேல்முருகன் *ஆதித்தமிழர் பேரவை – பொ.செயலாளர் தோழர் நாகராசன் *தலித் விடுதலை கட்சி – தலைவர் தோழர் செங்கோட்டையன் *தமிழ் புலிகள் கட்சி – தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் *ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை – தலைவர் தோழர் ஆ.சு.பவுத்தன் *ஆதித்தமிழர் விடுதலை முன்னணி- அமைப்பாளர். தோழர் ரவிக்குமார் *SDPI – தோழர் சாந் இப்ராகிம் *சமத்துவ கழகம் – தலைவர் தோழர் மு.கார்க்கி *தென்னை தொழிலாளர் சங்கம் தோழர் கருப்புசாமி ஆகிய தோழர்கள் கண்டனவுரை ஆற்றினர்…. *திராவிடர் கழகம் – பொதுகுழு உறுப்பினர் தோழர் பரமசிவம் பொறியாளர் *சமூக நீதிக் கட்சி – நிறுவனர் தோழர் பன்னீர் செல்வம் *மக்கள்...
மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016
1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும், வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து...