Tagged: தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் 18062017

10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்.. திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் JCB பணிமனையில் இன்று மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.. 24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 24.6.17 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம் 25.6.17 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர் 26.6.17 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு 27.6.17 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலிஸ் ஸ்டேசன் 28.6.17 – மரப்பாலம், கோணவாய்க்கால் 29.6.17 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம் 30.6.17 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் 1.7.17 – ஆர்.என் புதூர், சி.எம் நகர் 2.7.17 – சூளை, கனிராவுத்தர் குளம் 3.7.17 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில்.. பேச்சாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர். கோபி வேலுச்சாமி மற்றும் மந்திரமா...

ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017

தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...

மேட்டூரில் ஜாதி ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்

மேட்டூரில் ஜாதி ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்

நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு வீரர்களின் நாளில் மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தெருமுனைக் கூட்டம் மேட்டூர் ஒர்க்சாப் கார்னர், பேருந்து நிலையம், நான்கு ரோடு, சின்னபார்க் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் ஜாதி ஒழிப்பு பாடல்கள் பாடப்பட்டன. தோழர்கள் சி. கோவிந்தராசு-சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், சுந்தர், குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் குமரப்பா, முத்துக்குமார், கிட்டு, அம்ஜத்கான், சீனிவாசன், முத்துராஜ், சுசீந்திரகுமார், ஆனந்த், அண்ணாதுரை, பழனி ஆகியோர் கலந்துகொண்டனர். பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பெரியார் முழக்கம் 08122016 இதழ்

தெருமுனைக் கூட்டம் சித்தோடு 20032016

தெருமுனைக்கூட்டம்,சித்தோடு ! ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சித்தோடு கிளையில் சித்தோடு தட்டாங்குட்டை பகுதியில் 20.03.2016 மாலை 6 மணியளவில் தோழர் வேல்மாறன் தலைமையில் தோழர் கமலக்கண்ணன் முன்னிலையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் தோழர் முருகேசன் பெரியாரிய பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார் . அவரைத் தொடர்ந்து நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பகுத்தறிவு பாடல் பாடினார் . ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி ஆகியோரது உரையைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது .இறுதியாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . இரவு தோழர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் குமார் , காவை சித்துசாமி , நங்கவள்ளி சிவக்குமார் , கொங்கம்பாளையம் சத்தியராஜ், சவுந்திரபாண்டியன், ராஜேஷ், ரங்கம்பாளையம்...