Tagged: தூத்துக்குடி திவிக

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

வருகிற 12-02-2017 அன்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இடம்: முத்து மஹால் நேரம்: காலை 9 மணி. அனைவரும் வருக

பொங்கல் விழா கபாடி போட்டி தூத்துக்குடி 16012017

தூத்துக்குடி மாவட்டமான சூரங்குடி கிராமத்தில் நடந்த தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான “கபாடி” போட்டியில், சூரங்குடி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்ற அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. பரிசுத் தொகையான 8001ஐ அணியின் கேப்டனான தோழர் சதிஷ் பெற்றுக்கொண்டார். வீர விளையாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 27.08.2016 சனிக்கிழமை அன்று மத்தியில் ஆளும் மோடியின் பி.ஜே.பி. அரசால் – கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பட்டியல் இனத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் தூத்துக்குடி முதல் ஆழ்வார்திருநகரி வரை கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. 27.08.2016 காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை அருகே தொடங்கிய பரப்புரைப் பயணத்தை ஆதித்தமிழர் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் க. கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு, தோழர்.கோ.அ. குமார் ஆகியோரது உரையைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். முன்னதாக  தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பரப்புரைச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவரால் மாலை அணி விக்கப்பட்டது....

தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவிப்பு

தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாளான 17092016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு கழக பரப்புரைச் செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர் மாரிச்சாமி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட அமைப்பாளர் பால் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் வே. பால்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகம் பிரபாகரன், திலீபன், அறிவழகன், செ.செல்லதுரை, செ.பால்துரை, கோஆ குமார், இ.குமாரசிங் மற்றும் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரை வாழ்த்தியும், ஜாதி ஒழிப்புக் குறித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்காக தூத்துக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன

தூத்துக்குடியில் கழகம் சமூக நீதி பரப்புரை

27.08.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட தி.வி.க. சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப்பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை விநியோகித்து மக்களிடம் எழுச்சியை உருவாக்கினர் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகய்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

பாலத்தின் நடைபாதையில் உணவருந்திய தூத்துக்குடி கொள்கைத் தோழர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பேராதரவோடு எழுச்சியுடன் நடைபெற்ற நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் 27082016 அன்று மாவட்டமெங்கும் நடைபெற்றது. பயணத்தில் ஓரிடத்தில் தோழர்கள் உணவருந்த இடமில்லாத காரணத்தால் அங்கே இருந்த பாலத்தில் வரிசையாக தரையில் அமர்ந்து உணவருந்திய காட்சிகள் இயக்கத்தின் மீது மாளாத பற்றும் கொள்கையின் பால் கொண்ட உறுதியும் நெகிழ்ச்சியுற செய்கிறது

நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் மற்றும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி 27082016

27082016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்களின் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை வினியோகித்து மக்களின் எழுச்சியை உருவாக்கினர் மேலும் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. மேலும் செய்திகள் விரைவில்

நவீன சம்பூகர்களின்- வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்

27082016 “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் இனத்தினர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, ‘நவீன சம்பூகர்களின்- வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்” தூத்துக்குடி மாவட்ட “திராவிடர் விடுதலைக் கழகத்தின்” சார்பாக நடைபெற இருக்கிறது. இது நம் சந்ததியினருக்கான பயணம்.. சமூக நீதியை விரும்பும் அனைத்து தோழர்களையும் இந்த பரப்புரை பயணத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம்.. வாருங்கள்.. சமூகநீதியை வென்றெடுப்போம்..

நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம் தூத்துக்குடி 27082016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 27ம் தேதி, “கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தினர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்” பார்ப்பன- இந்துத்துவ போக்கை கண்டித்து நம் உரிமையை வென்றெடுப்போம், வாருங்கள்..

தூத்துக்குடி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் கட்டாய சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் 8-7-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.பொறிஞர்.சி.அம்புரோசு அவர்கள் தலைமைதாங்கினார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் தோழர்.நாத்திகம் முருகேசனார், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் தோழர் சா.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தோழர்.அம்புரோசு அவர்கள் தலைமையுரையாற்றினார். அவ்வுரையில் மோடி அரசின் பார்ப்பன இந்துத்துவ போக்கை கண்டித்து பேசினார். தோழர்.அம்புரோசு அவர்களின் உரையை தொடர்ந்து ஆதித் தமிழர் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர்.கண்ணன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். தோழர்.கண்ணன் அவர்களின் உரையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட திவிக துணைத் தலைவர் தோழர்.பால்ராசு அவர்கள் உரையாற்றினார். இதனை தொடர்ந்து தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.யூசுப் அவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தார். தோழரின் உரையைத் தொடர்ந்து தூத்துக்குடி...

தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! அண்ணல் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணலின் சிலைக்கு தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன் மாலை அனிவித்தார். அதற்பிறகு தோழர்கள் சாதி ஒழிப்பு முழக்கங்களை விண்ணதிர முழங்கி அண்ணலுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், மாவட்ட து.தலைவர் பால்ராசு, மாவட்ட து.செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன், தோழர்கள் கோ.அ.குமார், செல்லத்துரை மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன், தோழர்கள் குமார், செல்லத்துரை, பிரபாகரன், சந்திரசேகர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 14012016 இதழ்

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் 17.9.2015 அன்று தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கழகச் சார்பில் ஒரு நாள் முழுவதும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு என்றும், மாலை குடும்ப விழாவாகவும் கொண்டாடப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆலோசனைப்படி, இவ்விழாவினை கடந்த ஆண்டு 17.9.2014 அன்று தூத்துக்குடி பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, பாவூர் சத்திரம் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தோழர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பாக நடத்த திட்டமிட்டு, முதல் நிகழ்வாக, கீழப்பாவூர் பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலைக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா மாலை யணிவித்ததோடு தொடங்கியது. தோழர்கள் இரு சக்கர வண்டியில் கொடிகளை கட்டிக் கொண்டும் கார்களிலும் அணிவகுத்து வந்தது பொது மக்களை பெரிதும் கவர்ந்தது. தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கழக...

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ‘நாத்திகம்’ இதழ் நிறுவனர் மறைந்த நாத்திகம் பி. இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், ‘எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; எங்கள் இளைய சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமாக 24.9.2015 அன்று ஆழ்வை சீரணி அரங்கில் ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, செ. செல்லத்துரை, கோ.அ. குமார், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் உரைக்குப் பின், கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் நாத்திகம் பி.இராமசாமியின் பணிகளை நினைவு கூர்ந்ததோடு, நாட்டில் நிலவும் கனிமவளக் கொள்ளை, சாதி ஆணவக்...