தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன், தோழர்கள் குமார், செல்லத்துரை, பிரபாகரன், சந்திரசேகர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 14012016 இதழ்

You may also like...