Tagged: செயலவை தீர்மானம்

அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்

அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்

மேட்டூரில் கூடிய  கழகச் செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஆபத்துகளை உருவாக்கிடும் அணுஉலைகளைப் பயன்படுத்து வதை உலகநாடுகள் கைவிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மின் உற்பத்திக்கு என்று அணுஉலைகளைப் பயன் படுத்துவதில் நடுவண் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மக்கள் விரோத செயல்பாடா கும்.  அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி “வெஸ்டிங் ஹவுஸ்” என்ற தனியார் நிறுவனத்திடம் 6 அணு உலைகளை இந்தியாவில் நிறுவிடும் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  இந்த நிறு வனம் தரமற்ற ஆபத்தான எந்தி ரங்களை வழங்கிய குற்றச் சாட்டு களுக்குள்ளான நிறுவனம்ஆகும். அறிவியலில் வளர்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவே அணுஉலை ஆபத்துகளை கருத்தில் கொண்டு 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக அணுமின் நிலையங்களைத் தொடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த கடைசி அணுமின் நிலையமும் மூடப்படவிருக்கிறது. ஆனால் அதே...

மேட்டூர் செயலவையில் தீர்மானம் 7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் துரோகம்

மேட்டூர் செயலவையில் தீர்மானம் 7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் துரோகம்

மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதி மன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான்  மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலைக்கு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மனித உரிமை அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள்,   திரைப் படத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 7 தமிழர் விடுதலைக்கு தனது ஆதரவை தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே சட்டமன்றத்தில் தெரிவித் துள்ளார்.  இவ்வளவுக்குப் பிறகும் ஆயுள் சிறைவாசியாக சிறையில் வாடும் நளினி தன்னை அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு...

இந்திய அடையாளத்தைத் திணிக்கும் ‘ஆதார்’

இந்திய அடையாளத்தைத் திணிக்கும் ‘ஆதார்’

மேட்டூர் செயலவை தீர்மானம்: ஆதார் அடையாள அட்டையை நடுவண் அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்புகளை வழங்கியிருந்தும், தொடர்ந்து மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.  மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமின்றி, மாநில அரசின் ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், சமையல் எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை, ஓய்வூதிய நீட்டிப்பு போன்றவற்றிலும் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் என்று நடுவண் அரசு வற்புறுத்துகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியதோடு மாநில அரசின் உரிமைகளிலும் குறுக்கிடுவ தாகும். வெளிநாட்டிலிருந்து ஊடுறுவும் அகதிகளைத் தடுப்பதற்காக ஆதார் அடையாளம் கொண்டு வரப்படுவதாக முதலில் அறிவித்தார்கள். பிறகு, மக்களை உளவுத்துறை கண்காணிப்பதற்கான ஏற்பாடு என்று உளவுத் துறை அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழி பேசும் இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனத்துக்குமான அடையாளங்களை மறைத்து இந்தியர் என்ற ஒற்றை அடையாளத் துக்குள் திணிக்கும் சூழ்ச்சிகரமான ஏற்பாடே ஆதார் என்ற அடையாளம். மாநிலங்களுக்கான...

திவிக செயலவை தீர்மானங்கள் மேட்டூர் 25062016

  25062016 சனிக் கிழமையன்று சேலம் மாவட்டம், மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்ற, திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 – இரங்கல் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவுநர் (ஆனா ரூனா) அருணாசலம், திருச்சி இளந்தாடி துரைராசன், பெங்களூர் வேமண்ணா (எ) வி.சி. வேலாயுதம் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 2 – மாநில அரசின் உரிமை தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் – அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான் – மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7...

பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...