Tagged: ஈரோடு வடக்கு திவிக

ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி.. குருவரெட்டியூர் பொதுக்கூட்டம் 19032017

ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி.. குருவரெட்டியூர் பொதுக்கூட்டம் 19032017

ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் கிளை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி கேஆர்  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி அவர்கள் தலைமையேற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.தோழர் வேணுகோபால், தோழர் இராம .இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்ற,தலைமைக்கழக பேச்சாளர் தோழர் சாக்கோட்டை.மு.இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்.  அனைவருக்கும் தோழர் திலிபன் அவர்கள் நன்றி கூறினார்.தோழர்கள் அனைவருக்கும் கிளை கழகத்தின் சார்பில் இரவு அசைவ உணவு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. நிகழ்வில் மாநில, மாவட்ட கழகத்தோழர்கள் பெரும்பாலோனர் கலந்து கொண்டணர்.      பொதுக்கூட்டம் தொடங்கும் முன்பு இஸ்லாமிய மத வெறியர்களால்...

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கடந்த 12.01.2017 அன்று மறைந்த கோபி நகர கழகத்தலைவர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்திறப்பு 30.01.2017 அன்று கொளப்பலூரில் நடைபெற்றது படத்திறப்பு நிகழ்விற்கு மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் தோழர் துரைசாமி ஆகியோர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்தனர் படத்திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் திராவிடர் கழக தோழர் யோகானந்தம் மணிமொழி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி ம. நிவாசு

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழக தலைவர் தோழர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் அவரின் தலைமை உரையின் போது சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார் தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்கழு சார்பாக மயிலாட்டம்,ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்னுமில்லை எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள் கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் போது உயிரின தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் தொடர்ந்து இரவு 10.30 மணி வரை...

ஈரோடு வடக்கு திவிக – பெரியார் பிறந்தநாள் விழா 20092016

தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.09.2016 அன்று இருசக்கர வாகன பேரணி மற்றும் கழக கொடி ஏற்று விழா நடைபெற்றது. பேரணி சிறுவலூர் எலந்தகாடு பகுதியில் இருந்து துவங்கி சிறுவலூர், கொளப்பலூர், வேட்டைக்காரன்கோவில், மொடச்சூர், தாசம்பாளையம், கோபி கடைவீதி வழியாக காலேஜ் பிரிவு, ல.கள்ளிப்பட்டியில் நிறைவடைந்த்து. பேரணி சென்ற வழியில் அமைந்து இருந்த கழக கொடி கம்பங்களில் கழக தோழர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பும், துண்டறிக்கைகளும் வழங்கினார்கள். பேரணியில் முன்புறம் டிரம்ஸ் வண்டியும் நடுவில் முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தோழர்கள் கழக கொடியுடனும்,கடைசியாக நான்கு சக்கர வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. பேரணியில் அறுபதுக்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலையில் தோழர்களுக்கு தேனீர் ஏறபாட்டினை கொளப்பலூர் கிளை...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்  பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாள் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்று விழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும். 22.9.2015 அன்று முதல் 2.12.2015 அன்று வரை வாரம் ஒரு நாள் பரப்புரை பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 22.09.15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழகக் கொடிகம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே காவை இளவரசன் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என...

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும்  தெரு முனை பிரச்சாரம்

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெரு முனை பிரச்சாரம்

தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்றுவிழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும் பிரச்சார பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆதன் அடிப்படையில் கடந்த 22-09-15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே தோழர் காவை இளவரசன் அவர்கள் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என பல்வேறு செயதிகளை கூறிக்...