ஈரோடு வடக்கு திவிக – பெரியார் பிறந்தநாள் விழா 20092016

தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.09.2016 அன்று இருசக்கர வாகன பேரணி மற்றும் கழக கொடி ஏற்று விழா நடைபெற்றது.

பேரணி சிறுவலூர் எலந்தகாடு பகுதியில் இருந்து துவங்கி சிறுவலூர், கொளப்பலூர், வேட்டைக்காரன்கோவில், மொடச்சூர், தாசம்பாளையம், கோபி கடைவீதி வழியாக காலேஜ் பிரிவு, ல.கள்ளிப்பட்டியில் நிறைவடைந்த்து. பேரணி சென்ற வழியில் அமைந்து இருந்த கழக கொடி கம்பங்களில் கழக தோழர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பும், துண்டறிக்கைகளும் வழங்கினார்கள்.

பேரணியில் முன்புறம் டிரம்ஸ் வண்டியும் நடுவில் முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தோழர்கள் கழக கொடியுடனும்,கடைசியாக நான்கு சக்கர வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. பேரணியில் அறுபதுக்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

காலையில் தோழர்களுக்கு தேனீர் ஏறபாட்டினை கொளப்பலூர் கிளை கழக தோழர்களும், மதியம் குளிர்பானம் தோழர் ரகுநாதன் அவர்களும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கு உணவை கோபி ஒன்றிய கழகத்தின் சார்பிலும் ஏற்பாடு செய்து இருந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபி ஒன்றிய பொறுப்பாளர் அருளானந்தம் , இராம இளங்கோவன், நிவாசு ஆகியோர் முன்நின்று செய்து இருந்தனர்.

– செய்தி நிவாஸ்dsc_0956

You may also like...