ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழக தலைவர் தோழர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் அவரின் தலைமை உரையின் போது சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார் தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்கழு சார்பாக மயிலாட்டம்,ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்னுமில்லை எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள் கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் போது உயிரின தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் தொடர்ந்து இரவு 10.30 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்வின் இறுதியில் தோழர் தாமோதரன் நன்றி கூறினார் கொளப்பலூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலும் தோழர்கள் நிகழ்ச்சியினை பற்றி விளம்பரம் செய்து இருந்ததால் பொது மக்கள் கூட்டம் பெருந்திரளாக கூடியிருந்தார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொளப்பலூர் கிளை கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.