Tagged: அரியலூர் அனிதா

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு 03092017

ஈரோட்டில், “கல்வி உரிமைப்போராளி ” அரியலூர் அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு , 03.09.2017 அன்று மாலை 3 மணிக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய மாநிலை அரசுகளைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார்.. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் வேணுகோபால், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, சங்கீதா, இணையதளப் பொறுப்பாளர் தோழர் விஜய்குமார், அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் 02092017

திருப்பூரில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் 02.09.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொருளாளர் தோழர் துரைசாமி தலைமை தாங்கினார்.  த.வா.க. மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார் மாவட்டத் தலைவர் தோழர் முகில் ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார்,மாநில அறிவியல் மன்றத்தலைவர் சிவகாமி, மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தனகோபால், சங்கீதா,மாதவன்அருண் த.நா. மக்கள் கட்சி,கெளதம், மாதவன், ராஜசிங்கம்,ரவி,கனல் மதி,தேன்மொழி த.நா.மாணவர் கழகம்,பார்வதி, முத்து, கருணாநிதி,சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை.

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று 02.09. 2017 மத்திய பா.ஜ.க.வின் நீட் தேர்வினால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அரியலூர் அனிதாவின் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். அவ்வமயம் கழகத் தோழர்கள்,நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்