Tagged: அம்பேத்கர்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி உரை 14042011 சேலம்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப்பின்னாலும், இன்று தமிழ் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சிகளிலும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவு படுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும்...

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதித் திட்டம் (னுச.ஹஅநெனமயச ளுஉhநஅந கடிச ளுடிஉயைட ஐவேநபசயவiடிn வாசடிரபா ஐவேநச-ஊயளவந ஆயசசயைபநள) என்று ஒரு திட்டம் மத்திய அரசால் முடங்கிப் போய் கிடக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக அங்கீகாரத்துக் காகவும் பொருளாதார பாதுகாப்புக்காகவும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சகம் 2013இல் இந்த நிதித்திட்டத்தை உருவாக்கியது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அம்பேத்கர் ஃபவுண்டேஷனிடம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுவதும் 500 தம்பதிகளைத் தேர்வு செய்து ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதை அம்பேத்கர் ஃபவுண்டேஷன் இறுதி செய்து நிதியுதவியை அளிக்கும். கொடுமை என்னவென்றால், திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை இந்த நிதியுதவியைப்ய பெற்றவர்கள், வெறும்...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவின் – அங்கீகரிக்கப்பட்ட மொழி களில் ஒன்று சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தையும்  இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கலாம் என்று கூறியதற்காக அம்பேத்கரை ‘இந்துத்துவவாதி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியாக ‘சமஸ்கிருதம்’ மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் ‘இந்துத்துவா’ கொள்கை.  ஆர்.எஸ்.எஸ்சுக்கு தத்துவார்த்த நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (க்ஷரnஉh டிக கூhடிரபாவள) நூலில் இதை கோல்வாக்கரே எழுதியிருக் கிறார். அம்பேத்கர் – இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட பல்வேறு மொழிகளில் சமஸ்கிருதமும் இருக்க லாம் என்றார். இரண்டுக்கும் மலையளவு வேறு பாடுகள் உண்டு; இந்த உண்மையை மறைக்கிறார்கள். சமஸ்கிருதம் எல்லோருக்கும் பொதுவான மொழியாக இருந்ததாம். அது மக்கள் மொழியாம்; இந்த நூலில்  எழுதியிருக்கிறார்கள். அப்படி இருந் திருக்குமானால்...

இந்துத்துவவாதிகளுக்கு அம்பேத்கரின் கேள்விகள்!

இந்துத்துவவாதிகளுக்கு அம்பேத்கரின் கேள்விகள்!

தலித் மக்களை இந்து மதத்துக்குள்ளும், ‘இந்துத்துவா’ எனும் கோட்பாடுக் குள்ளும் அடக்க முயலும் சங்பரிவாரங்களின் வாதங்களை உடைத்து நொறுக்கு கிறார், டாக்டர் அம்பேத்கர்! டாக்டர் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்விகள் என்ன? இந்துஸ்தானத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ‘இந்து’ தான் என்று வாதிட்டால், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகளும் இந்துக்களா? ‘இந்து’ என்ற சொல் மதத்தைக் குறிப்பிடுவதாக இருந்தால், அதில் இரண்டு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று இந்து மதம் வலியுறுத்தும் விதிகளான சூத்திரங்கள். இந்த சூத்திரங்களைக் கூறும் சாஸ்திரங்கள், இவைகள் ஜாதியையும் தீண்டாமையையும் வலியுறுத்துவதால், தீண்டப்படாத மக்கள் ஏற்க முடியாது; மற்றொன்று – வழிபாட்டு முறைகளைப் பற்றியது. ஏனைய இந்துக்களைப் போலவே – தீண்டப்படாத மக்களும் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை வணங்கும்போது, அவர்களும் இந்துக்களாகி விடுகிறார்களே என்று வாதிடப்படுகிறது. இரு பிரிவினரின் வழிபாட்டு முறை ஒன்றாக இருப்பதாலேயே இருபிரிவினரின் மதமும் ஒரே மதம் – பொது மதம்...

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

தமிழகத்தில் கழகத்தினர் பல்வேறு ஊர்களில் அம்பேத்கர் பிறந்த நாளில் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்றனர் . களத்தூரில் : 14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சி யோடு நடத்தப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போரில் உயிர்நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் நன்றி கூறினார். களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள். மன்னையில் : திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின்...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. அம்பேத்கர் – இந்துத்துவக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் என்று நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்காக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வழிபடக் கூடிய தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரையும் இணைத்துக்  கொண்டிருப் பதாக கூறுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து காந்தியையும் ஆர்.எஸ்.எஸ். வழிபாட்டுத் தலைவர் பட்டியலில் இடம் பெற்றாலும் வியப்பதற்கு இல்லை. அருண்ஷோரி என்ற ஒருவர் வாஜ்பாய் அமைச்சரவை யில் இருந்தார். அரசு பொதுத் துறை பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர், ‘அம்பேத்கர் – பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று ஒரு ‘ஆராய்ச்சி’ நூலையே எழுதினார். பா.ஜ.க. – சங்பரிவாரங்கள் –  அந்த நூலைத் தலையில் தூக்கி வைத்து ஆடின. இப்போது தமிழக பா.ஜ.க., அம்பேத்கருக்கு சொந்தம்...

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

நியூயார்க்கில் அய்.நா.வின் தலைமையகத்தில் ஏப்.13 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகம், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தது. “ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் முன்னெடுப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து அம்பேத்கரின் பிறந்த நாளுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும் அய்.நா.வின் வளர்ச்சித்திட்ட அதிகாரி யுமான ஹெலன் கிளார்க், கருத்தரங்கில், ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளம்’ என்று பேசியிருப்பது அம்பேத்கரின் சமூக விடுதலை இலட்சியத்துக்கு சூட்டப்பட்ட மணிமகுடமாகும். ஹெலன், அய்.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளமாக அம்பேத்கர் உயர்ந்து நின்றாலும், அவர் வாழ்ந்து உழைத்துப் போராடிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை கவலையுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.  2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுதும் ஏழ்மை,...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு (1)

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு (1)

புரட்சியாளர் அம்பேத்கரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக சித்தரிக்கும் நூல் ஒன்று இந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது. நூலாசிரியர் ம.வெங்கடேசன். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்ட இந்த நூலில் அடங்கியுள்ள வரலாற்றுப் புரட்டுகளுக்கு இது ஒரு மறுப்பு. பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோரை அம்பேத்கரே ‘இந்து’ மதத்துக்குள் உள்ளடக்கியிருக்கிறார். அனைவரையும் இந்துக்களாக அடையாளப்படுத்திய அம்பேத்கர், எப்படி ‘இந்து’ எதிர்ப்பாளராக இருப்பார்? – இப்படி ஒரு வாதம். நமது பதில் : ‘இந்து’ என்ற பெயரைத் தந்து அவர்களுக்கான மத சட்டங்களை உருவாக்கியதே பிரிட்டிஷ்காரர்கள் தான். அம்பேத்கர் அல்ல. சற்று வரலாற்றைப் பார்ப்போமா? கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவிலுள்ள மக்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் என்றே பிரிக்கப் பட்டனர். இந்தியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொதுவான சட்டங் களை இங்கிலாந்திலுள்ளதைப் போல் உருவாக்க பிரிட்டிஷார் நினைத்தனர். முஸ்லிம் அல்லாத அனைவரையும் ‘இந்து’க்கள் என்றாக்கி, அவர்களுக்கான சட்டங்களை உருவாக்க முயன்ற போது அதற்கான அடிப்படை...

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

இந்து பார்ப்பனிய மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். “இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று அறிவித்த அவரை ‘இந்துத்துவ’ ஆதரவாளராக சித்தரிக்க சங் பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ‘இந்து’ மதம் ஒரு மதமல்ல; அது ஒரு சமூகமும் அல்ல; இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்பு என்கிறார் அம்பேத்கர். பொருளாதாரச் சார்பாகப் பார்த்தாலும், ஜாதி நன்மை தரக்கூடியதல்ல. ஜாதி ஏற்பாட்டினால் மக்கள் சமூகம் விருத்தியடைய முடியாது; விருத்தியடையவு மில்லை. எனினும் ஜாதியினால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜாதி, இந்து சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதன்முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்தியச் சுதேசிகளையும் பிரித்துக் காட்டும் பொருட்டு முகம்மதியர் இந்தியச் சுதேசிகளை இந்துக்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே...

வேத மரபு மறுப்பு மாநாடு சேலம் 24122016 தீர்மானங்கள்

24-12-2016 அன்று சேலத்தில் ,சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  நிறைவேற்றப்பட்ட தீர்மானம். வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றிவிட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் –  புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார சக்தியாகவும் மாற்றிக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி –...

இந்துவாக சாக மாட்டேன்!

இந்துவாக சாக மாட்டேன்!

கெடுவாய்ப்பாக, நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன். தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்துவிடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத் திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்க வில்லை. தான் மேம்பாடு அடைவதற் காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்து கொள்ளப் பட்டதாலேயே வளர்ந்த நாடுகளி லெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்திவிட முடிவ தில்லை. தனி மனிதனுக்கு எந்தவொரு பாத்திரமும் வழங்காத மதம் எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் தனி மனிதனை ஏற்றுக்கொள்ளாத இந்து மதம் எனக்கு ஏற்புடையதாயில்லை. ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே...

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் மக்கள் விழா எடுக்கிறார்கள். ஆனால் காந்திக்கும் ராஜாஜிக்கும் அரசுகள் தான் விழா எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய தோழர் நீலவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி அடையாளமற்ற அமைப்பாக செயல்படுவதைப் பாராட்டினார். செப்.17 அன்று மந்தைவெளி சந்தைப் பகுதியில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில், வீரமரணமடைந்த தோழர் நீலவேந்தன் ஆற்றிய உரை: மனித குலத்தை பிரித்த மதத்தை அழிக்கப் பிறந்த வீரர், மனுதர்ம தத்துவத்தில் நெருப்பு வைத்த சூரர், வர்ண ஜாதி நெறி திரை கிழித்த மேதை, வரலாறு நமக்கு அளித்த புரட்சிக்கானப் பாதை புரட்சியாளர் அம்பேத்கரையும், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் சுயநல பூமியில், தன்னைக் கூட சுத்தம் செய்யாமல் பூமியை சுத்தம் செய்ய புறப்பட்ட ஈரோட்டுக் கிழவன் தந்தை பெரியாரையும், உள்ளே கனன்றுகொண்டிருக்கிற சூடான பூமியின் குளிர்ச்சியான மேலோட்டில் கடைசி இரண்டு மனிதர்கள் வாழுகிற வரை அவர்களுக்கிடையிலான சமூக, அரசியல், பொருளாதார...

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் டிசம்பர் 6 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கர் மணி மண்டபத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மாலை அணி வித்தார். இராயப் பேட்டை பத்ரி நாராயணன் படிப் பகத்தில் வைக்கப் பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கும், மயிலை விசாலாட்சி தோட்டத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் புடை சூழ, பொதுச் செயலாளர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தார். பெரியார் முழக்கம் இதழ் 12122013

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூரில், இந்திய வரைபடம் மாட்டப்பட வில்லை. அங்கே மாட்டப்பட்டிருப்பது, ‘அகண்ட பாரதத்தின்’ வரைபடம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை ஒரே தேசமாக சித்தரிக்கிறது, அந்த வரைபடம். இந்தியாவின் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தின்போது உலகப் புகழ் பெற்ற அல் அஜிரா தொலைக்காட்சி, பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராம் மாதவ் என்ற பார்ப்பனரின் பேட்டியை ஒளி பரப்பியது. ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இறையாண்மை கிடையாது. அது இந்தியாவின் பகுதி’ என்று கூறி, அகண்ட பாரதத்தை நியாயப் படுத்தினார் இராம் மாதவ். ‘அகண்ட பாரத்’ என்ற ‘பாரத் வர்ஷா’ – கற்பனை உணர்வு அல்ல. இந்தியாவின் எல்லைகள் ‘பாரத் வர்ஷாவாக’ விரிவடைய வேண்டும் என்பதே தங்களின் இலட்சியம் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். (இந்தியாவில் ‘தேசிய’ ஏடுகள் எதுவும் இந்த  பேட்டிச் செய்தியை வெளியிடவில்லை) இந்து ‘பாரத் வர்ஷா’ கொள்கையை 1934இல்...

பார்ப்பன-பனியா ஆதிக்கம்: அம்பலப்படுத்துகிறார் அருந்ததிராய்

பார்ப்பன-பனியா ஆதிக்கம்: அம்பலப்படுத்துகிறார் அருந்ததிராய்

1936இல் லாகூரில் ஜாதி ஒழிப்பு சங்கம், ஜாதி குறித்து அம்பேத்கரை பேச அழைத்தது. கடுமையான உழைப்பில் அம்பேத்கர் தயாரித்த ஆழமான அந்த ஆய்வுரையில் பார்ப்பனர், இந்து மதம் தொடர்பான கருத்துகளை நீக்க வேண்டும் என்று சங்கத்தார் கூறியதை ஏற்காத அம்பேத்கர், உரை நிகழ்த்த மறுத்துவிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த உரையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க பதிப்பாக வெளிவந்தது. பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த ஆங்கில நூலை, அண்மையில் நவயாண பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு உலகப் புகழ் பெற்ற புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், 200 பக்க அளவில் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் பொருளாதார ஊடகத் துறைகளில், தலித் மக்கள் புறக்கணிக்கப்படு வதற்கும், பார்ப்பன பனியா ஆதிக்கம் தொடர் வதற்கும் ஜாதியமைப்பே காரணம் என்கிறார் அருந்ததிராய். அவர் எழுதிய முன்னுரையி லிருந்து ஒரு...

ஜாதியமைப்பு – ஏன் விவாதிக்கப்படுவதில்லை?

ஜாதியமைப்பு – ஏன் விவாதிக்கப்படுவதில்லை?

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலுக்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதியை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக ‘அவுட் லுக்’ பத்திரிகை யில் அருந்ததிராய் விரிவாக பேட்டி அளித் துள்ளார். அரசியல், பொருளாதாரம், ஊடகங் களில் பனியாக்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை புள்ளி விவரங் களுடன் சுட்டிக்காட்டிய அருந்ததிராய் அரசியல் கட்சிகள் ஜாதியமைப்பு ஜாதி பிரச்சினைகள் குறித்து ‘கண்டு கொள்ளாத’ போக்கை மேற்கொள்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ‘மண்டல்’ பரிந்துரை அமுலாக்கத்துக்குப் பிறகு சமகால இந்திய அரசியலில் ஜாதி ஒரு அடிப்படை அம்சமாக மாறியிருக்கிறதே என்ற வாதத்துக்கு அருந்ததிராய் பதிலளித் துள்ளார். இந்தியாவில் சமகாலத்தில் அதிகாரம், ஊடகம், பொருளாதாரங் களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவினரையும் உரிமைகள் மறுக்கப் பட்டோரையும் பார்க்க மறுக்கிறார்கள். மண்டல் குழு பரிந்துரை அமுலுக்கு வந்த பிறகு, ஜாதி அரசியலுக்குள் வந்துவிட வில்லை. அதற்கு முன்பே ஜாதி என்ற என்ஜின்தான்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

‘அம்மா’தான் பிரதமராக வேண்டும் என்பது “ஞானசம்பந்த சாமி”களின் கட்டளை. அவர் என் கனவில் வந்து கூறிவிட்டார்.          – மதுரை ஆதினம். கனவில் வந்த ‘ஞானசம்பந்தனும்’ ஹெலி காப்டரில்தான் வந்தானா, ‘சாமி’? அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவோம்.    – பா.ஜ.க. தேர்தல் அறிக்கை புரியம்படி கூற வேண்டுமானால், “சட்டத்துக்கு உட்பட்டு” எப்படி பாபர் மசூதியை இடித்துத் தள்ளினோமோ, அதேபோல்! சரியா? காந்தி சமாதியில் ‘மவுன விரதம்’ நடத்த கெஜ்ரிவால், தனது ஆதரவாளர்களுடன் கூடியது சட்ட விரோதம்.  – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடாதீங்க! தேசத் தந்தை சமாதியில் ‘மவுன விரதம்’ இருப்பதும், மக்கள் கூடுவதும், சட்ட விரோதம் மட்டுமல்ல, ‘தேசத்துக்கே விரோதம்’. இதையெல்லாம் அனுமதிக்கவே முடியாதுங்க… தேர்தலில் ஓட்டுப் போட்டவர்கள் அடையாள ‘மை’யை காட்டினால், மருத்துவ கட்டணம், பெட்ரோல் விலையில் சலுகை. – செய்தி தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கே ‘லஞ்சம்’ வந்துடுச்சா… கிழிஞ்சுது போங்க… 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தனக்கு...

காங்கிரஸ் யாருடைய “சுதந்திரத்துக்கு” போராடியது?

காங்கிரஸ் யாருடைய “சுதந்திரத்துக்கு” போராடியது?

‘அவுட் லுக்’ (மார்ச் 10) ஏட்டில் அருந்ததி ராய், அம்பேத்கர் நூலுக்கு எழுதிய முன்னுரிமை குறித்து வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி ஏற்கனவே பெரியார் முழக்கத்தில் (மார்ச் 20) வெளி வந்தது. பேட்டியின் மற்றொரு பகுதி: கேள்வி: காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வில்லையா? அவர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லையா? பதில் : இதை சுதந்திரம் என்று சொல்வதைவிட வேண்டுமனால் ‘அதிகார மாற்றம்’ என்று சொல்லலாம். காந்திய-அம்பேத்கரிய விவாதத்தில் ‘ஏகாதிபத்தியம், சுதந்திரம்’ போன்ற வார்த்தைகள் நமது புரிதலில் இன்னும் சற்று ஆழமாகவும், சிக்கலாகவும் மாறிப் போகிறது. அம்பேத்கர் முதல்முறையாக, 1931 ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மீதான அம்பேத்கரின் தீவிர விமர்சனம் குறித்து காந்தி கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் மிக பிரபலமானது: ‘காந்திஜி! எனக்கென்று தாயகம் ஏதுவுமில்லை; தீண்டத்தகாதவர்கள் பெருமைப்பட இங்கு எதுவுமில்லை.” அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரும்கூட, பிரித்தானியப் பேரரசுக்குப் ‘பொறுப்புணர்ச்சி’யுடன்...

அர்த்தமற்ற “தெனாலிராமன்” திரைப்பட எதிர்ப்பு

அர்த்தமற்ற “தெனாலிராமன்” திரைப்பட எதிர்ப்பு

கருத்து மாறுபாடுகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தால் அதை வெளியிடவே கூடாது என்ற போராட் டங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்து மதம் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளிவரும் நூல்கள் இந்தியாவில் வெளியிடவே கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்கள் மிரட்டுகிறார்கள். உடனே நூல் திரும்பப் பெற்று விடுகிறது. ‘இராமன்-கிருஷ்ணன் ஒரு புதிர்’ என்று அம்பேத்கர் எழுதிய நூலை திரும்பப் பெறக் கூறி மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கலவரத்தில் இறங்கினர். ஆனால், பெரும்பான்மை மக்களை “சூத்திரர்கள்”, “அடிமை கள்”, “பிராமணரின் வைப்பாட்டிப் பிள்ளைகள்” என்று கேவலமாக இழிவு செய்யும் மனுசாஸ்திரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரலை எந்த மானமுள்ள தமிழனும் எழுப்பத் தயாராக இல்லை. கோயில் கருவறைக்குள் கடவுளிடம் நெருங்கி, கடவுளுக்கு அர்ச்சனை செய்யக்கூடிய உரிமை பிறப்பால் இழிவான ‘சூத்திரர்-பஞ்சமர்க்கு’ கிடையாது என்று சட்டப்படி உறுதி செய்யப்பட் டுள்ளதைப் பற்றி எந்த “மற”த் தமிழனுக்கும் மானம் பீறிட்டுக் கிளம்புவதில்லை. அதே கோயிலுக்குள் அதே...

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

ஜாதி-மொழி-தேசம் குறித்த அம்பேத்கரின் ஆழமான சிந்தனை களை எடுத்துக்காட்டுகிறது இக் கட்டுரை. அம்பேத்கர் என்றவுடன் அவரை தீண்டப்படாதவர்களின் தலைவர் என்றே சமூகம் பார்க்கிறது. அவரின் ஆழமான சமுதாய சிந்தனையும், அறிவும் புறந்தள்ளப்படுகிறது. ஜாதி யின் பெயரால் நாம் இழந்தது சுய மரியாதை, கல்வி, வேலை, இருப் பிடம், செல்வம் என்ற சமூக உண்மையை புரிய வைத்தவர் அம்பேத்கர். ஒரு பள்ளி சிறுவன், தனக்கு அம்பேத்கரை பிடிக்கும் என்கிறான். மற்றொருவன் தனக்கு அம்பேத்கரைப் பிடிக்காது என்கிறான். இந்த விருப்பு வெறுப்புக்கு காரணம் அவருடைய ஜாதியே. அரசியல்வாதிகள் அம்பேத் கரை ஒரு படமாக்குகிறார்களே தவிர, பாடமாக்கவில்லை. இதைப் பற்றி அம்பேத்கர், “இந்தியாவிலோ புனிதர்களையும், மகாத்மாக்களையும் வழிபடுகிறார்கள். வழிபடுவது மட்டுந்தான், அவர்கள் வழியில் நடப்பதில்லை என்ற போக்கு பொது மக்களிடம் இருப்பதால், அவர்களுடைய திட்டத்தால் பெரிய பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை” (அம்பேத்கர் நூல் தொகுப்பு-1, பக்.131) என்கிறார். தீண்டப்படாதவர்களின் தலைவர் என அக்காலத்தில் தான்...