ஈரோடு தெற்கு, மதுரையில் குடும்ப விழா

ஈரோடு மாவட்டக் கழகம் சார்பில், 20.09.26 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு பவானி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெஸ்ட் மகாலில் கழகத் தோழர்களின் குடும்ப விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சென்னிமலை செல்வராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எழிலன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி கலந்து கொண்டார்.
மேட்டூர் ஆசிரியர் குமரேசன், உடல் ஆரோக்கியம் குறித்தும், உடல் நலத்தைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்தும், உடல் வலிமை பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும், நோய்த் தடுப்பு முறைகள் என்னென்ன என்பது குறித்தும் மிக விரிவாக விளக்கிப் பேசினார்.
கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, இது போன்ற குடும்ப விழாக்களின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். காவை இளவரசுவின் மந்திரமல்ல? தந்திரமே? நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் ஆவலுடன் கண்டுகளித்தனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பூர் முத்துவின் மகன் வெற்றிமாறன் இயந்திர மனிதன் போன்று வேடம் அணிந்து, குழந்தைகளிடம் கணிப்பொறியின் தாக்கம், செல்பேசியின் தாக்கம் குறித்தும், ஏ.அய் குறித்தும் அருமையாக எடுத்துரைத்தார். ஈரோடு பழனிச்சாமியின் மகள்கள் ரித்திகா, மற்றும் தேவஸ்ரீ ஆகியோர் கராத்தே நிகழ்ச்சி செய்து காட்டினார். கிருத்திகாவின் மகன் பூங்குன்றன், பெரியார் படம் மற்றும் பிற படங்களை வரைந்து தனது ஓவியத் திறமையைக் காட்டினார்.
பெரியாரிய உணர்வாளர், `அன்பு இனிப்பு கார வகைகள்’ தயாரிப்பு நிறுவன உரிமையாளர் நல்லசிவம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு காரம் வழங்கினார். நிறைவாக ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். நிகழ்வில் திரளான கழக குடும்பத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை: மதுரையில் முருகேசன் இல்லத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 20.09.2026 அன்று குடும்ப விழா சந்திப்பு நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் நாக. பாலன் முன்னிலையில் வாசுகி ஒருங்கிணைத்தார். குழந்தைகள் தமிழ்பிரபாகரன், இளமகிழன், தமிழ் வெண்ணிலா, இளமதி ஆகியோர் கடவுள் மறுப்பு மற்றும் ஜாதி ஓழிப்பு உறுதிமொழி கூற தோழர்கள் உறுதி ஏற்றனர். விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் உட்பட தோழர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோல் குடும்பங்கள் சந்திக்கும் விழாக்களை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். முருகேசன் நன்றி கூற விழாமுடிவடைந்தது.
காமாட்சி பாண்டி, மகேஸ்வரி, தமிழ்பிரபாகரன், தமிழ்வெண்ணிலா, சத்தியமூர்த்தி, நதியா, அழகர், ஆர்த்தி செல்வி, இள மகிழன், இளமதி, நாக.பாலன், செல்வி, அருள்மொழி, திலீபன், சுமித்ரா, இயலினி, கௌதமா, விஜயலட்சுமி, இனிமை, சிவசங்கரன், சாந்தி, அருள்மொழி, நிர்மலா, வழக்கறிஞர் பகத்சிங் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதிய உணவுக்குப் பின் தோழர்கள் விடை பெற்றனர்.

You may also like...