திலகவதி – ராகுல்கண்ணன் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா!
நாமக்கல் மாவட்டம், குமாராபாளையம் பகுதியைச் சார்ந்த மாதுராஜ்-சரஸ்வதி இணையரின் மகள் திலகவதி அவர்களுக்கும் ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சார்ந்த தேவேந்திரன்-பேபி இணையரின் மகன் ராகுல்கண்ணன் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11 மணியளவில் ஈரோடு அரச்சலூர் புத்தா ஹாலில் நடைபெற்றது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்தது.
மாதுராஜ் வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுசாமி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் சாமிநாதன், சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல் ராமன், தி. மு. க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் நாச்சிமுத்து, ஓய்வுபெற்ற ஆசிரியர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்த்துரையாற்றி, வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் செய்து வைத்தார். சுவேதா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி ஒருங்கிணைத்தார்.
கழக வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டக் கழக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், தோழமை அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026
