பரப்புரைப் பயண பாடல் வெளியீடு!

ஜாதி மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிரான பாடல் வெளியீட்டு விழா, ஜூலை-31, மாலை 6 மணிக்கு சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், திரைப்படங்களின் மூலம் பரப்பப்படும் புராணக்கதைகளை கண்டித்து உரையாற்றினார். “வெங்காயம்” திரைப்பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பாடல்வரிகளை வெகுவாகப் பாராட்டினார். இதுபோல் இன்னும் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். கழகப் பரப்புரைப் பயணத்தில் தோழர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும் பொறுப்புகளையும் விளக்கினார்.

பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட இசையமைப்பாளர் வசந்த ரமேஷ், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் சத்யா, லதா, குரல் கொடுத்த இரா. உமாபதி, இரண்யா ஆகியோருக்கும், வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அருண் கோமதி, குகன் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. U2BRUTUS மைனர் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று பாடல்களை வரவேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 06082026

You may also like...