இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

கோவை மாவட்டம், சீரபாளையம் பகுதியைச் சார்ந்த (விடியல் பதிப்பகம்) விசயக்குமார் – கற்பகவள்ளி இணையரின் மகள் இலக்கியா அவர்களுக்கும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியைச் சார்ந்த பழனிசாமி – பாக்கியலட்சுமி இணையரின் மகன் விஷ்ணுராம் அவர்களுக்கும் திருமண வரவேற்பு விழா 23.02.2026 திங்கள் அன்று மாலை 6 மணி அளவில் பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள வேல் மஹாலில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, காவை.அவினாசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 23042026

You may also like...