கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!
இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026 அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர்.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர்.
ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே மோகன் (வட்டச் செயலாளர் திமுக) ,லைனர் பிரபு (வட்டச் செயலாளர்), வெங்கடேஷ் (மாவட்டச் செயலாளர் விசிக), மதன் (விசிக) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, மடத்துகுளம் ஒன்றிய தலைவர் சிவானந்தம், சங்கீதா, இராவணன் (மாவட்டத் துணைச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் எட்வின் பிரபாகரன், தட்சணா மூர்த்தி, ஜெயபிரகாஷ் (இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), பிரகாசு (நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்), திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர்கள் கோபிநாத் (பகுதி தலைவர்), ராஜேஷ் (பகுதி செயலாளர்), சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் இரண்யா, அசோக், மயிலை சிவா, பிரவீன், மாரி (திக), மகிழவன், லட்சுமணன், குறளரசி, பிரபாகரன் (சேலம் இளைஞரணி), கவியரசு( தமிழ்நாடு மாணவர் கழகம் சேலம்), மயிலை அருண், வீரா, பிரகாஷ் மாஸ்டர், ப்ரித்தி, ஏசு, அஸ்வின், மேட்டூர் முத்துராஜ், மோகன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 07052026
