Category: இணையத்தில் இருந்து
கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன். பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி: கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர்....
‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...
“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!” (நன்றி : தமிழ் இந்து நாளிதழ், தலையங்கம். 24.03.2017) கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்குகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயலாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில் கருத்துத் தளத்திலேயே...
கடவுள் மறுப்பு, மத – சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற...
திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர். அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர்வரை இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்துள்ளனர். இது இஸ்லாமிய மத வெறியர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் தனது குழந்தைகள் கையில் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்ற முழக்கம் இருக்கும் பதாகைகளைக் கொடுத்து அதைப் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றார். தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் சபதம் செய்திருக்கின்றார் தோழர் ஃபாரூக் அவர்கள். அதனால் இஸ்லாமிய மத வெறியர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கின்றார். ஆனால்...
மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ் – மன்மோகன் கூட்டணியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத் தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல் லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மினசாரத் துறையிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்ப தாலும், மிகச் சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க...
Dear All, I visited world famous shrine Velankanni on 16.02.2017 to study its very worst side. Still maintaining the cemeteries based on the caste. 1. Dalit Cemetery, 2. Masuvathi Cemetery (For Orphans and the peoples got inter-caste marriage), 3. Fisherman Chettiyar Cemetery, 4. Nadar Cemetery, 5. Mukkulathor and Vellalar Cemetery. Even today the Dalits could not participate in the Pascal drama during the Easter. The novena before the festival in September 8th each day allotted for each caste except the Dalits. Just before 5 years the Dalits claimed the rights of celebrate 6th day novena on every 4th of August....
மெக்கால்லே கல்வித் திட்டம்: கீழே ஒரு சிறிய படம் மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி என்றும், அதில் சொல்லியிருப்பதாக… “அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம்.” பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம்...
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது. குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது...
எங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. ‘மாடுமுட்டிப் பய’ என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், “மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்… விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய…” அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாட்டிற்கும், நமக்கும் என்ன பொருத்தம்? அதன் உருவ அளவு என்ன? நமது உருவ அளவு என்ன? அதன் கொம்புகள், வலுவான கால்கள் என்ன? நமது உடலமைப்பு என்ன? அதன் பலம் என்ன? நமது பலம் என்ன? அதோடு மோதி நமது பலத்தை நிரூபிக்க...
பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி...
இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்! முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை. ராதாகிருஷ்ணன் யார்? ஆந்திராவின் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். கிறித்துவ மிஷனரி பள்ளிகளிலும் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் படித்த அவர், இளம் வயதிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். இதெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக இந்து சமூகம் சாதி படிநிலைகள் மூலம் அடிமைப் படுத்தி...
12-08-2012 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்களின் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாக சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமை செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். நேரில் வர இயலாத குமரி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா, நெல்லை மாவட்ட அமைப்பாளர் காசிராசன், கடலூர் மாவட்டத் தலைவர் வடலூர் வெங்கடேசன் ஆகியோர் தொலைபேசி வழியாக தங்கள் ஆதரவை கழகத்தலைவரிடம் கூறியிருந்தனர். மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு மாரப்பனார் தனது மகன் உடன் கலந்துகொண்டார், மேலும் ஈரோடு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவுக்கன்பன் என்கின்ற...
“பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்” இது 2001 ஆம் ஆண்டில் 5 பெரியாரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தந்தைபெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட முன்வந்தபோது மக்கள் முன் வைத்த பிரகடனம், இந்த ஐந்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகளின் அடையாளங்களைவிட பெரியாரின் இலட்சியத்தை கொண்டு செலுத்தலே முதன்மையான பணியாக ஏற்றன என்பதை இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் அந்த இலட்சியத்தை அடையவே இயக்கம் என்ற பாதைமாறி, தங்கள் முந்தைய இயக்க அடையாளத்தை முன்னிறுத்தலே முதன்மை இலக்கு என்ற நிலை, பெரியார் திராவிடர் கழகத்திற்குள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும். பெரியாரின் அடிப்படைத் தத்துவமான சாதிஒழிப்பு என்ற இலட்சியத்தையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன்...
சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுமியை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம்.. அதற்கு பிறக்கும் அது போன்ற செய்திகள் வந்திப்பதாகவே நினைவு.. அவர்கள் ஏன் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர வேண்டும்?.. இந்தியாவின் ஹைடெக் நகரங்களான மும்பை டெல்லி பெங்களூர் போன்றவற்றை எல்லாம் விட்டு விட்டு.. என்பதில்தான் மருத்துவத்தில் தமிழகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது புரியும்.. மருத்துவத்திலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது தமிழகம்தான். பிற மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. திராவிடத்தால் வாழ்ந்தவர்களுக்கு கொஞ்சம் களுக்குன்னு இருக்கும் பேரவால்ல, விஷயம் அதுவல்ல மேல சொன்ன பெருமைகள் நம்மை விட்டு போக போகின்றன.. நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.. இந்தியா முழுவதிற்கும் மருத்துவத்திற்கு ஒரே நுழைவு தேர்வு கொண்டு வர போகிறார்கள்.. நியாயந்தானேன்னு நம்மாளு வக்கணையா பேசுவான். உள்ளே இருக்கும் சாதிகளை புரிஞ்சுக்காம.. தமிழகத்தில் தான் அரசு மருத்துவ...
காஷ்மீரிகளின் தனித்துவம்….. படிக்க ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம். ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்? ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்….. ”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது. அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல...
காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் சென்ற வாரம் ”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.” – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ…… அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்….. நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின் தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும். பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…....
அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன? இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்….. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்…… மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…. என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.? ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. “ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.” “அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு” “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு...
”தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள்” எனும் தலைப்பில் தோழர் பழ.அதியமான் அவர்கள் 30.05.2016 தமிழ் இந்து நாளிதழில் சிந்தனைக் களம் பகுதியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் புத்தாயிரத்தில் வந்த சில முக்கிய நூல்கள் என குறிப்பிட்டுச் சொல்லியுள்ள புத்தகங்களில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை வெளியீட்டாளராக கொண்ட பெரியார் திராவிடர் கழக பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ”குடி அரசு 1925-1938 பெரியாரின் எழுத்தும் பேச்சும்” தொகுதிகள் குறித்து பதிவு செய்துள்ளார்.இவை இணையத்திலும் கிடைக்கின்றன என கூறியும் உள்ளார். இணையத்தில் இத்தொகுதிகளை படிக்க விரும்புவோர் கீழ்காணும் இணைப்பில் உள்ள கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கழக வெளியீடுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று படிக்கலாம். https://dvkperiyar.com/?cat=76