இந்துவானால் என்ன? முஸ்லீமானால் என்ன?
தெலுங்கு மூலம்: ஸைக்அலிகோரிஸய்யத், தமிழில்: பா. ஆனந்தகுமார் நான் முஸ்லிமானால் என்ன? நீ இந்துவானால் என்ன? உன் கோவில் முன் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இந்துவாக இருந்தாலும் நீ மார்போடு தழுவப் போவதில்லை; பக்கிரிகள் முஸ்லிமானாலும் நான் கட்டியணைக்க போவதில்லை! நீ எத்தனை விரதங்கள் இருந்தால் என்ன? நான் எத்தனை நோன்புகள் நோற்றாலென்ன ? நீ வரி கேட்பதற்கு எந்த பிரிவுகளைத் தேடுவாயோ நானும் அதே பிரிவுகளைப்பின்பற்றுகிறேன். உனது மந்திரங்கள் சமஸ்கிருதம் ஆனாலும் எனது ஸமூராக்கள் அராபியானாலும் நமது பிள்ளைகளின் ஆங்கில வழி படிப்பை நிறுத்தும் துணிவு உனக்குமில்லை எனக்குமில்லை! உனது கோயிலுக்குப் போகும் பாதையில் எந்தக் குண்டும் குழியுமான சாலையில் முட்டி மோதி போவாயோ, நானும் அதே கருங்கல் மிதக்கும் மட்டமான சாலையில் மசூதிக்குப் போவேன்! நீ பண்டிகைகளுக்கு எந்த சைவ சமையல் செய்தாலும், எனது பண்டிகைகளுக்கு எந்த அசைவ சமையல் சமைத்தாலும் மளிகைக் கடையில்...