Tagged: MGR

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக  நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட முடிவெடுத்திருக்கும் நிலையில் ஒரு  வேண்டுகோளை திராவிடர் விடுதலைக் கழகம் அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்களுக்கும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் முன் வைக்க விரும்புகிறது. தமிழ்நாட்டில் நீண்டகால சிறைவாசிகளையும் இராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாழும் 7 தமிழர்களையும் மாநில அரசுக்கு உரிய உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதை செய்தால் அது புதிய ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதோடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக்கும் சரியான நினைவுப் பரிசாக வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏற்கெனவே அண்ணா நூற்றாண்டின்போதும் கலைஞர் சட்டமன்றப் பணியின் 50ஆம் ஆண்டு நிறைவை யொட்டியும் ‘சுதந்திரம்’ பெற்று 25ஆம் ஆண்டு நிறைவுக்காகவும் தமிழகத்தில் இதேபோல் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் முழக்கம் 19012017 இதழ்

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...