Category: பெரியார் முழக்கம் 2011

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும்...

தமிழீழ அரசுக்கு விடுதலை பெற்ற தெற்கு சூடான் அங்கீகாரம் 0

தமிழீழ அரசுக்கு விடுதலை பெற்ற தெற்கு சூடான் அங்கீகாரம்

ஆப்பிரிக்காவில் உள்ளது சூடான் நாடு. இது ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடாகும். இங்கு ராணுவ புரட்சி நடத்தி 1989 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த ஒமர் அல் பக்ஷீர் இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழங்குடி இன மக்களும், கிறிஸ்துவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். வடக்கு தங்களை புறக்கணிப்பதாக தெற்குவாசிகள் கருதினர். தெற்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தெற்கு சூடானை தனியாக பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராடி வந்தது. இந்த இயக்கம் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தது. 2005 ஆம் ஆண்டு அரசுக்கும், இந்த இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 2011 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி நாட்டை பிரிப்பது என்று முடிவானது. ...