சென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”
ஈரோட்டில் இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் டிசம்பர் முதல் தேதி சென்னையில் ‘மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு’ மாநாட்டை நடத்த திட்டமிட்டு, தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை மண்டபத்துக்கு அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் தனது இறுதி பேருரையை நிகழ்த்திய இடமும் இதுவேயாகும். சம்பூகன் கலைக் குழுவின் எழுச்சி இசை நிகழ்ச்சியோடு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பார்ப்பன மதவெறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தபோல்கர்-பன்சாய்-கல்புர்கி நினைவரங்கில், ‘பார்ப்பனியம் பதித்த இரத்தச் சுவடுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெண்ணியத்தில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, ‘புராணங்களில்’...