Tagged: மண்டல் பரிந்துரை

மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை

மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை

இடஒதுக்கீடு, இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்குத்தான் நீடிப்பது என்று பார்ப்பனர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், மண்டல் பரிந்துரை அமுலாகி 20 ஆண்டுகள் ஓடிய பிறகும், மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக் கூட எட்ட முடியவில்லை. 27 சதவீத இட ஒதுக்கீட்டை எட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டுமோ என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது. சென்னை அய்.அய்.டி.யில் படித்து வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பல பட்டங்கள் வாங்கிக் குவித்து வைத்திருப்பவர் முரளிதரன் என்ற விஞ்ஞானி, அய்.அய்.டி. பார்ப்பன மேலாதிக்கத்தை கேள்வி கேட்டவர். அதன் காரணமாக சென்னை அய்.அய்.டி.யில் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை நிர்வாகம் மறுத்துவிட்டது. அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே இந்த விஞ்ஞானி நுழையக் கூடாது என்று அய்.அய்.டி. இயக்குனராக இருந்த பார்ப்பன வெறியர் நடராஜன், நீதிமன்றத்தின் வழியாக தடையாணை வாங்கியிருந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த விஞ்ஞானி, அவ்வப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக பிற்படுத்தப்பட்டோருக்கான...