Tagged: பொது விசாரணை

தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை திருச்சி 24092017

24-9-2017, ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழ்க்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய்நீதி ஆகியவற்றுக்காகவும் ஈடு இணையற்றப் பணியாற்றிவரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலையுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும்,  அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப் பட்ட தரப்பினர்...

மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா...

தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை !

”தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில்.. நாள் : 24.09.2017 காலை 9.30 மணி. இடம் : செயின்ட் ஜோசப் கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் எதிரில்,திருச்சி. கழகத்தலைவர் அவர்கள் விசாரணையின் நடுவராக பங்கேற்கிறார்.பல் வேறு தோழமை அமைப்பின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்