தோழர்களின் தொய்வில்லா களப்பணிகளோடு 2016இல் கழகம் பதித்த சுவடுகள்
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்; பெரியார் பயிலரங்கங்கள்; மூட நம்பிக்கை களுக்கு எதிரான பரப்புரைப் பயணம்; ஜாதி ஆணவக் கொலை எதிர்ப்பு; கண்டன ஆர்ப் பாட்டங்கள்; கைதுகள் என்று 2016ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் தொய்வின்றி களப்பணியாற்றியது. சுயநலம், சந்தர்ப்பவாத அரசியல் மேலோங்கி நிற்கும் சமூக சூழலில், பெரியார் இலட்சியங்களை ஏற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் – சமுதாயக் கவலையோடு உழைப்பு, நேரம், சொந்தப் பொருளை செலவிட்டு, பெரியார் கொள்கைப் பணிகளுக்காக தங்களை அர்ப் பணித்திருக்கிறார்கள். இத்தகைய தோழர் களின் கொள்கை உணர்வும் களப் பணிகளுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் உண்மை யான வலிமை என்று பெருமையோடு, கடந்த ஆண்டில் கழகத்தின் களப்பணிகள் குறித்த ஒரு சுருக்கமான தொகுப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. ஜனவரி 24 அன்று திருச்சியில் கழக செயலவை கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு தோழர்கள் திரட்டிய சந்தாக்களை வழங்கினர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் உயர்...