Tagged: திண்டுக்கல் திவிக

இரமேசு பெரியார் – அல்லி வாழ்க்கை இணையேற்பு விழா சித்தையன் கோட்டை 11092016

11-9-2016 ஜாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் தோழர்கள் அல்லி – இரமேசு பெரியார் ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்தவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வே.மதிமாறன்,  மக்கள் மன்றம் மகேஸ்   புத்தர் கலைக்குழு மணிமாறன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் இரமேசு பெரியார், ஒப்பந்தவிழாவில் பெரியாரின் உடையாகிய கருப்பு சட்டை லுங்கியுடன் இருந்தார். மாலைகள் அணிவதற்கு முன்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பறையை அணிவித்துக் கொண்டனர். விழா முடிவில் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. தங்கள் திருமணம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்தான் நடைபெறவேண்டும் என்பதிலும், மாட்டுக்கறி உணவு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த தோழர்கள் அல்லி- இரமேசு பெரியார்  இருவரும் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட  ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் ஆவர். தோழர் இரமேசு பெரியார் மக்கள்...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம் !”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம் !”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம் !” 10 முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகள் இருபாலரும். தேதி : 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள். இடம் : திண்டுக்கல். ♫ திறன் வளர்த்தல் ♫ பாலின சமத்துவம் ♫ படைப்பாற்றல் வளர்த்தல் (ஓவியம்,இசை,நாடகம்) ♫ திறனாய்ந்து வாசித்தல் ♫ ‘கதை சொல்லி’யோடு ஒருநாள் ♫ குழுவிவாதம் ♫ சமூக விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம் ♫ சித்தன்னவாசல் சுற்றுலா மற்றும் பல நிகழ்வுகளுடன்…………. குறைந்த பட்ச பங்களிப்பு : ரூ 1000/= (ரூபாய் ஒரு ஆயிரம் மட்டும்) வாய்ப்புள்ள தோழர்கள் முழுதொகையான 1500 /= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) ரூபாயை பங்களிக்கலாம். ”முன் பதிவு அவசியம்” தொடர்புக்கு : ஆசிரியர் தோழர் சிவகாமி – 9842448175 ஆசிரியர் தோழர் சிவக்குமார் – 9688856151