Tagged: தமிழீழம்

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக்கு தந்த கெடு 2017 மார்ச் மாதத்தோடு நிறைவடைகிறது. மீண்டும் உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது இலங்கை. தமிழர்கள் இந்த சதியை முறியடித்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் என்ன? கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. “கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியான மற்றும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பதை உறுதி செய்வது” என்பதே அந்த வாக்குறுதி. 15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது என்று...

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...