Tagged: தமிழகமும் ஜாதிய படுகொலைகளும்

மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா...