பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்
19 ஆம் நூற்றாண்டில் பெரியாருக்கு முன்பு தமிழ் மாகாணத்தில் நாத்திகர் இயக்கம் ஒன்று ‘இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இந்த அமைப்பு ‘தத்துவ விவேசினி’ என்ற தமிழ் இதழையும், ‘தி திங்கர்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளனர். இந்நூல் களைத் தேடிக் கண்டுபிடித்து, சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ்த் துறை பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்துள்ளார். ‘நியு செஞ்சுரி புக் ஹவு°’ இத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வரங்கம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வரங் கில் அக்.28, 29, 30 தேதிகளில் நடை பெற்றது. பல்வேறு வரலற்று ஆய்வாளர்கள் பங்கேற்று நூலின் உள்ளடக்கங்களை பல்வேறு தலைப்பு களில் ஆய்வு செய்தனர். ‘சென்னை லவுகிக சங்கமும்-பெரியாரும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 29 ஆம் தேதியன்றும், ‘தத்துவ விவேசினியில் பெண்கள் பற்றிய பார்வை’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 30 ஆம்...