நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவருக்கும் நீதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக புதுச்சேரி, தமிழக அரசுகள் இன்று விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், ரவி சுப்பிர மணியம், ரகு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாநில அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதியும், ஜெயேந் திரரும் தொலைபேசியில் பேசிய தாக உரையாடல் ஒன்று வெளியானது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....