Tagged: சேஷம்மாள்

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும்,...